சென்னை ஹைதை பெங்களூருவில் மெட்ரோ ரயிலும் மேம்பாலங்களும்.
மெட்ரோ ரயிலும் மேம்பாலங்களும்.
|
பெங்களூரு டூ மைசூர் ரோடு |
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சமீப வருடங்களாக மெட்ரோ ரயிலின் பொருட்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
|
பெங்களூரு வி வி புரம்.
|
|
பன சங்கரி |
ரோட்டின் நரம்பைப் பிளந்தது போன்று அங்கங்கே குப்பை கூளங்களும் தூசிகளும் கற்களும் சூழ ஒரு ஆபரேஷன் தியேட்டரில் போவதுபோலிருக்கிறது.
|
வடபழனி |
|
|
|
கோத்தகுடா ஹைதை. |
எப்போது இவை எல்லாம் முடியுமோ தெரியவில்லை. நாற்கரச் சாலைகளும் மேம்பாலங்களும் மிக உதவியானவை என்றாலும் மக்களின் இருப்பிடங்களை நசுக்கி இடித்துக் கிடக்கும் காட்சிகள் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும்.
|
மெஹ்திப்பட்டினம் ஹைதை |
|
மெஹ்திப்பட்டினம் ஹைதை |
காரைக்குடிக்கருகே அமைக்கப்பட்டு வரும் பைபாஸ் சாலைக்காக பாதி நேமத்தான் பட்டி கிராமமே காணாமல் போய் இருக்கிறது. அப்படி ஒரு ஊர் ( அத்திப்பட்டிபோல ) இருந்ததா என்று இனி மேப்பிலும் தேடணும்.
|
கேஆர்புரம் செல்லும் வழி பெங்களூரு. |
|
கேஆர்புரம் செல்லும்வழி. பெங்களூரு |
நாட்டின் வளர்ச்சிக்காக சில கிராமங்களை விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும் என்றாலும் சாலைகளின் விரிவுக்காக வயலும் வயல் சார்ந்த இடங்களிலும் வாழும் மனிதர்கள் வீடுகள் ( மதுரை பைபாஸ்) அரையும் குறையுமாக இடிக்கப்பட்டிருக்கும் காட்சி சில வருடங்களுக்கு முன் பகீர். என்ற உணர்வை ஏற்படுத்தியது.
மலையையே கூறு போட்டு முழுங்குறாங்களாமா. இதுல நீங்க வீட்டைப் பத்திப் பேச வந்துட்டீங்கன்னு சொல்றீங்களா. மலையிலும் வாழ்வுண்டு.( மலைக்குத்தான் வாழ்வில்லை ) ஆனால் அவை இடம் பெயர்ந்து சென்று விடும். ஆனால் இல்லங்களுக்குள் ஆன்மா இருக்கலாம். அவை எங்கு செல்லுமோ.
|
செட்டிமுருகன் கோயில் செல்லும்வழி பெங்களூரு |
இவை எல்லாம் சென்னை, பெங்களூரு , ஹைதையில் எடுத்தவை. அதுவும் ஹைதை மெஹ்திப் பட்டினத்தில் உள்ள இடங்களுக்கு எல்லாம் தூண் எண் தான் முகவரி கொடுக்கிறார்கள். பில்லர் நம்பர் 72 இப்படி. இங்கே திரும்பணும் என்று.. அந்த அளவு மேம்பாலங்கள்தான் அடையாளத்தை ஆக்கிரமிக்கின்றன.
|
நாம்பள்ளி ஹைதராபாத். |
அடுத்த அரசாங்கம் வந்து வேறு குழப்படிகள் எல்லாம் பண்ணுமுன்பு சீக்கிரம் இவை கட்டி முடிக்கப்பட்டால் தேவலை.
Yarlpavanan28 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 12:55
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
தொடருங்கள்
பதிலளிநீக்கு
kaniB28 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 1:26
பெங்களூர் இடங்களில் சிறு திருத்தங்கள்.
வன சங்கரி - பணஷங்கரி / பனஷங்கரி
கே வி புரம் - கே ஆர் புரம் (கிருஷ்ணராஜபுரம் என்பதன் சுருக்கம்)
பதிலளிநீக்கு
இசக்கிமுத்து31 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:38
அருமை !
பதிலளிநீக்கு
ராமலக்ஷ்மி1 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:33
நான் சொல்ல வந்ததை கனி அவர்கள் சொல்லி விட்டுள்ளார். பனசங்கரி அம்மன் கோவில் பிரசித்தமானதும். கே.ஆர்.புரம் ஹாங்கிங் பிரிட்ஜ், படத்தில் இருப்பது.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 6:28
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி கனி. திருத்தி விட்டேன் சகோ
நன்றி இசக்கிமுத்து சகோ
நன்றி ராமலெக்ஷ்மி. :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 6:28
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!