எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )

உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )

ஹைதை.நிஜாம்களின்  நகரம். கோல்கொண்டா கோட்டை, பிர்லா மந்திர்,சார்மினார், சாலர் ஜங் ம்யூசியம், ஹூசைன் சாகர் லேக், அதன் நடுவில் புத்தர் சிலை, போட்டிங், ஹைடெக் சிட்டி, பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், ஹைதராபாதி பிரியாணி,ஹைதராபாதி ஹலீம், கோங்குரா சட்னி, ஆவக்காய் ஊறுகாய், ஆந்திரா காரம் ( காரசாரமான சாப்பாடுகள் ) , கராச்சி பேக்கரி, சித்திக் பார்பக்யூ, சட்னீஸ், சானியா மிர்சா, முகமத் அசாருதீன், சாய்னா நேவால், ககன் நரங், ஒஸ்மானியா யூனிவர்சிட்டி, சில்பகலா வேதிகா, டோலிவுட், என் டி ராமா ராவ், ரங்காராவ், நாகேஸ்வரராவ், குச்சிப்புடி, கர்நாடக இசை ( தெலுகு கீர்த்தனைகள்), கஜல், கவ்வாலி, உருது அகாடமி, ஹிஜாப்ஸ்,பர்கா,ஷெர்வானி, பைஜாமா, முத்துக்கள், லாத் பஜார்,  மிருகக்காட்சி சாலை, ஃபாலக்ணுமா அரண்மனை என்று எண்ணிலடங்காத விஷயங்கள் நினைவுக்கு வரும்.


மிக முக்கியமாக இங்கு இஸ்லாமிய வாழ்வியல் மற்றும் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக மிக அழகாக வடிவமைக்கப்பட்ட கோட்டைகள் அதிகம். அதை விட  மசூதிகள் அதிகம். தெருவுக்கு ஒரு மசூதியாவது இருக்கும் நகரம்.முத்துக்களின் நகரம் என்றழைக்கப்பட்ட இது மசூதிகளின் நகரம் என்று அழைக்கப்படவும் தகும். அவ்வளவு மசூதிகள். இடங்களின் பெயர் கூட பெரும்பாலும் இஸ்லாமியப் பெயர்கள்தான். இது மெஹ்திப்பட்டிணத்தில் உள்ள மசூதி.

ஹைதராபாத், சிகந்தராபாத், ஸைபராபாத், எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன மசூதிகள். மசூதிகள் பச்சை வண்ணமும் வெள்ளை வண்ணமும் கொண்டதாக அமைக்கப்படுகின்றன.  நடுவில் தாஜ்மகாலில் இருப்பது போல ஒரு ( கோபுரம் ) டூம் உள்ளது. இங்கே ரயில்வே ஸ்டேஷன் முதல் கொண்டு ( காச்சேகுடா ) மசூதி ஸ்டைலில்தான் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு மினார் அல்லது இரு மினார் அல்லது 4 மினார்கள் இருக்கின்றன. பிறைவடிவம் கொண்ட மினார் கட்டாயம் இருக்கும். ஒரு மினாரில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் சாலையோரப் பிள்ளையார் கோயில்கள் போல எங்கு பார்த்தாலும் மசூதிகள்தான்.

 மேலும் மக்கா மதினா சென்று வந்த முஸ்லீம் பெருமக்கள் தங்கள் இல்லங்களில் பச்சைக்கொடியைப் பறக்க விட்டிருக்கும் காட்சியைக் காணலாம். அதேபோல் இந்துக்களின் வீட்டில் ஆரஞ்சு அல்லது சிவப்புக்கொடியைப் பார்க்கலாம்.

பெரும்பாலும் இக்கொடிகள் முக்கோணவடிவத்தில் உள்ளன.தெலுங்கானா, சீமாந்திரா ப்ரச்சனைகள் கொடி கட்டிப் பறக்கின்றன. இதைப் பற்றி யாரும் பேச விரும்புவதில்லை. பொது இடங்களிலும் புகை வண்டிகளிலும் கூட கருத்துக் கேட்டால் பயந்து மௌனித்து புன்னகையைப் பதிலாய் அளித்துப் பயணிக்கிறார்கள்.

நிஜாம்களின் கட்டிடக்கலையின் சிறப்பைச் சொல்லும்-- அழகு பொலியும் மசூதிகள் அநேகம்.

மிகச் சிறந்த பாரம்பரியமிக்க நகரமொன்றில் ,பயணப் பொழுதுகளில் ( ஆட்டோ & ட்ரெயினில் செல்லும்போது  ) எடுத்த சில புகைப்படங்களை இந்த உலகப் புகைப்பட தினத்தில் இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

1 கருத்து:

  1. Yarlpavanan20 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 5:27
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

    ஹுஸைனம்மா21 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 1:56
    மசூதிகள் பொதுவாக, ஒரு தளம் மட்டுமே அமைந்தவையாக இருக்கும். ஆனால், ஹைதராபாத்தில் இரண்டு - மூன்று மாடிக் கட்டிடங்களாக இருக்கின்றன!! நகரமயமாக்கலால் வந்த இடநெருக்கடி போல!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan31 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 1:25
    நன்றி யாழ்பாவண்ணன்

    நன்றி ஹுசைனம்மா ஆமாம்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan31 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 1:26
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...