எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சோலஹ் கம்ப் மசூதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோலஹ் கம்ப் மசூதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

பிதார் கோட்டை பற்றியும் சோலாஹ் கம்ப் மசூதி , தாரகேஷ் மஹல், ககன் மஹல், தக்த் மஹல், ரங்கீன் மஹல், சுரங்கங்கள், வாயில்கள், கல் சிற்பங்கள், பீரங்கிகள் பத்தி எல்லாம் எழுதி இருக்கேன். பதினாறு தூண்கள் கொண்ட மசூதி என்பதால் சோலாஹ் கம்ப் மாஸ்க் என்றழைக்கப்படுது.

இப்போ அங்கே எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு. வெளியில் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி தரும் இந்த மசூதிதான் இன்னைக்கும் இந்தியாவில் மிகப் பெரிய மசூதி. நடுவில் ப்ரேயர் ஹால் எல்லாப் பக்கமும் பிரிவுகளா அமைந்து  சுற்றி இருக்கும் பரப்பளவு முழுவதும் நடுமையத்தில் குவியும்படி அமைக்கப்பட்டிருக்கு. வட்ட வட்டமான பகுதிகளும் நடுமையப்பகுதியும் மேற்குப் பக்கம்  இருக்கும் மிகப்பிரம்மாண்டமான ப்ரேயர் ஹாலை நோக்கிப் பார்க்கும்படி   இருக்கு.

மோட்டார் இல்லாத காலத்தில் சுழற்சி முறையில் கட்டிடத்தின் மேலேயே நீர் வரத்து இருந்ததும் ஔரங்கசீப் இங்கே குத்பா செய்ததும் அதிசயத் தகவல்கள்.

டெல்லி முகல் கார்டன் அமைப்பில்  14 ஆம் நூற்றாண்டு சுல்தான் அஹ்மத் ஷாவால் கட்டப்பட்டது இந்தக் கோட்டை. பஹாமனியர்களின் ஆட்சிக் காலத்தில் ரொம்பவே பவர்ஃபுல்லா இருந்திருக்கு..

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...