எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
GREENS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
GREENS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஏப்ரல், 2021

பயிர்பச்சை . மை க்ளிக்ஸ்.3. GREENS. MY CLICKS - 3.

பயிர்பச்சை . மை க்ளிக்ஸ்.3. GREENS. MY CLICKS - 3.

வீட்டுத்தோட்டங்களில் அபூர்வமாகக் காணப்படுகிறது இந்த விசிறி வாழை. ஆனால் பெட்ரோல் பங்க். ஹோட்டல்.நிறுவனங்கள் போன்றவற்றில் இதை அலங்காரத்துக்காக வளர்க்கிறாங்க. பயிர்ப்பச்சையைப் பார்ப்பது கணினியையே பார்த்துக்கிட்டு இருக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சி. எனவே கொஞ்சம் பயிர்ப்பச்சையைப் பார்த்துக் கண்ணைக் குளிர்விங்க :)


தர்மபுரியில் ஹோட்டல் அதியமானில் தங்கியிருந்தபோது பக்கத்து பில்டிங்கிலிருந்த இந்த விசிறிவாழையை என் காமிராவால் கவர்ந்து கொண்டேன். :) இரண்டு விசிறி வாழைகள். இது நடுவிலிருந்து இருபக்கங்களிலும் இலைகளை விசிறிபோல் விரிப்பதால் இதுக்கு விசிறி வாழைன்னு பேர் போல. )

பயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2.

பயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2.

பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழியாக உங்கள் பார்வைக்கு. :)

இது கானாடு காத்தான் மங்கள ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போனபோது அதைச் சுற்றி இருந்த பயிர்ப்பச்சையைப் பார்த்து மயங்கி எடுத்தது :)


இது கானாடு காத்தானிலிருந்து காரைக்குடி வரும் வயலில் பள்ளத்தூர்ப் பக்கம் ஏதோ ஒரு வயல்.

பயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 1. GREENS. MY CLICKS - 1.

பயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 1. GREENS. MY CLICKS - 1.

பயணப் பொழுதுகளிலும் சரி, உறவினர் வீட்டிற்குச் செல்லும்போதும் சரி. மிக அழகாய்த் தலையசைத்து வரவேற்கும் , புன்னகைக்கும் பூச்செடிகளையும் பயிர்பச்சைகளையும் படம் பிடிப்பது எனக்குப் பொழுது போக்கு.

இன்றைக்கு இந்தப் பயிர்பச்சைகளைப் பார்த்துக் கண்களைக் குளிர்வித்துக் கொள்வோம் வாங்க.

மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்ப்ரஸ்ஸில் செல்லும்போது எடுத்தது இந்தப் படம். அநேகமாய் தஞ்சாவூர் அல்லது கும்பகோணமாய் இருக்கலாம். தென்னைகள் வரிசை கட்டி நின்று தலையாட்டி வரவேற்றது இன்பமாய் இருந்தது.

ஔவையாரின் மூதுரை ஞாபகம் வந்தது.

///நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.///



வயல்வரப்புகளில் தென்னைகள் வைத்திருப்பது நல்ல கலையுணர்வு. இடம் மிச்சமும் கூட. ஆமா எத்தனை தென்னைகள் இருக்குன்னு எண்ணிச் சொல்லுங்க பார்க்கலாம். :)

அம்மாவீட்டின் பலாமரம்.கோரிக்கையற்றுக் கிடக்குதம்மா வேரில் பழுத்த பலா. :)

திங்கள், 29 மார்ச், 2021

கீரை உணவுகள் - 2.

கீரை உணவுகள் - 2.

 கருவேப்பிலைக் குழம்பு. இது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். சின்ன வெங்காயம் பூண்டைப் பொடிப்பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி அரைத்த கருவேப்பிலை சாம்பார்பொடி உப்பு புளி மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும். கருவேப்பிலையோடு சோம்பு சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும். நன்கு பசியைத் தூண்டும் குழம்பு இது. 

பொரிச்சுக் கொட்டித் தேங்காய்த்துவையல் ( கருவேப்பிலை கொத்துமல்லி சேர்த்தது )

கீரை உணவுகள் - 1.

 கீரை உணவுகள் - 1.

கீரை உணவுகள் நம் செரிமானத்தை சீராக்குகின்றன. விட்டமின் மினரல்ஸ் போக இரும்புச்சத்தும் கிடைக்கிறது. கீரைகள் உண்பதால் முடி நன்கு வளரும்.  கண்பார்வை தெளிவாகும்.  நார்ச்சத்து என்பது நம் குடலுக்குத் தேவை. 

இங்கே சில கீரை உணவுகளைப் பகிர்ந்துள்ளேன். 

கருவேப்பிலை கொத்துமல்லி தேங்காய்த்துவையல். கடுகு உளுந்து பச்சைமிளகாய் தாளித்து உப்பு, புளி, வெங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லியைத் தேங்காயோடு வைத்து வதக்கி அரைக்க வேண்டும். 

தூதுவளை ரசம். எப்போதும் வைக்கும் ரசத்தைத் தாளிக்கும்போது தூதுவளைக் கீரையைத் தட்டிப் போட வேண்டும். சள்ளைக்கடுப்பு, சளிக்கு ஏற்றது

செவ்வாய், 23 மார்ச், 2021

பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

 பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

பொன்னாங்கண்ணிக் கீரை. கண் பார்வைக்கு நல்லது. மண்டி , பொரியல் வைத்து சாப்பிடலாம்.


கொடிப்பசலை, மசிக்கலாம். குடல் புண்ணை ஆற்றும்.

வெள்ளி, 19 மார்ச், 2021

வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

கீரையில் வடை பஜ்ஜி போண்டா என்று எண்ணெயில் குளிக்காமல் எளிதாய் செய்து சாப்பிட இதோ சில கீரை உணவு வகைகள்.

கருவேப்பிலை சட்னியுடன் இட்லி. பெஸ்ட் அப்படைஸர். இரும்புச் சத்து. இரத்த விருத்தி, சுத்திகரிப்பு செய்யும், பசி தூண்டும் , முடி வளரும். ஜீரணம் சமப்படும். துர்நாற்றம் போக்கும்.
மேத்தி பரோட்டா. வெந்தயக்கீரை ரொட்டி. குளிர்ச்சி, குடல்புண் ஆற்றும். டயபடீஸ் பேஷண்டுகளுக்கு நல்லது.

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்   நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என்...