சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
மணி இரண்டாகப் போகுது . பசி வயித்தைக் கிள்ளுது. சிங்காநல்லூர் ரோட்டில் ஆட்டோ பறந்துகிட்டு இருக்கு. இன்னும் வேகமா போனாத் தேவலை.
சாப்பாடு சாப்பாடுன்னு வயிறு கூப்பாடு போடுது. சிங்காநல்லூர் சிக்னல்ல நிக்கிது வண்டி. இன்னும் கொஞ்சம் தூரம்தான்னு சமாதானப்படுத்திட்டு ட்ராஃபிக்கைப் பார்த்துட்டு இருக்கோம்.
டக்குன்னு கிளம்புது வண்டி . அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் ஷாந்தி கியர்ஸ் வாசல். யே யப்பா என்னா பிரம்மாண்டமா இருக்கு.
இங்க ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு. இங்கேதான் ரங்கமணி பெட்ரோல் போடுவார். ஏன்னா என்ன விலை ஏறினாலும் ஸ்டாக் தீரும்வரை பழைய விலைதான்.
அதே போல மருந்துகளும் ரீடெய்ல் விலையை விட 20 பர்சண்ட் குறைத்துக் கிடைக்கும் என வாங்குவார்.
அங்கே ஒரு முறை சாந்தி காண்டீனில் சாப்பிட்டதாகவும் விலை மிகக்குறைவாக இருந்ததாகவும் சொன்னார். பலமுறை கோவை சென்றும் போக இயலவில்லை . ஆனால் போனமாதம் ஒருநாள் செல்ல வாய்ப்புக் கிட்டியது. ஆனால் மணியோ இரண்டை நெருங்கிட்டிருந்தது. சாப்பாடு மிச்சம் இருக்குமா.
3000 பேருக்குத்தான் டோக்கன் கொடுக்கப்படுமாம். முதலில் வருபவர்களுக்கு அனைத்தும் கிடைக்கும். கடைசியில் வந்தால் வெரைட்டி ரைஸ்தான் கிடைக்கும். என்றார். ஒரே பதக் பதக்.
ஆட்டோவுக்கு 200 ரூ செலவழித்து ( ஆர் எஸ் புரத்திலிருந்து இன்னிக்குத்தான் போணுமா இன்னொரு நாள் போலாமே என்ற விவாதங்களில் இருந்து தப்பி என் பிடிவாதத்துக்காக ) 20 ரூபாய் சாப்பாடு சாப்பிடச் சென்றோம். :)
கிடைச்சுச்சோ தப்பிச்சேன். இல்லாட்டி என்ன செய்ய . ரங்க்ஸுக்கும் எனக்கும் நல்ல பசி. உள்ளே நுழைந்தால் அப்பாடா இன்னும் போர்டு ஒளிர்ந்தது. 350 டோக்கன் இருப்பதாக.
அட இதென்ன அனுமார் வாலாட்டம் க்யூ. 400 பேர் இருக்கும் போலிருக்கே. வண்டி நிறுத்தும் இடங்களில் எல்லாம் வரிசை. க்யூ நகர்ந்தது. திருப்பதி க்யூ மாதிரி. பெருமாளே இன்னிக்கு அன்னம் கிடைக்குமா. என நகர நகர கிட்டத்தட்ட 35 ஆவது டோக்கன் பாக்கி இருக்கும்போது உள்ளே நுழைந்தோம். வெரைட்டி ரைஸ்தான் கிடைக்குமோ..
அந்த சீட்டைக் கொடுத்து பஞ்ச் பண்ணி திரும்ப வரிசையில் நுழைந்தால் டப் டப் என ஒரு கிண்ணத்தில் தட்டிய தயிர்சாதமும் , ஒரு கப் புலவும் கிடைத்தது.
மிகப் பெரும் உணவு அரங்கம். ருசி மிகுந்த உணவுகள். வைக்கப்பட்டிருப்பதோ சுத்தமும் சுகாதாரமும் மிகுந்த சில்வர் ப்ளேட்டுகள், கப்புகளில். தண்ணீர் ஜக்கும் டம்ளர்களும் கூட மின்னின.
ஆனால் உட்காரத்தான் இடமில்லை. ஜாதி மத இன பேதமற்று சமரசம் உலாவும் இடமாக இருந்தது. ஒரு வழியாக சீட்டைப் பிடிச்சோம். அப்பாடா அரசாங்கத்துல ஒரு சீட் கிடைச்சிருந்தா கூட இப்பிடி சந்தோஷம் இருக்காது.
சாப்பிட்டதும் சென்று சிறிது ப்ளெயின் ரைஸ், சாம்பார், மோர், கீரை வாங்கி சாப்பிட்டோம். அவ்ளோதான் இருந்தது. ஆனால் வயிற்றுக்குப் போதுமான அளவு கிடைத்தது.
திருப்தியுடன் வெளியே வந்து ஒரு ஐஸ்க்ரீமை வெட்டினோம். பார்க் போல மக்கள் கும்பல் கும்பலாக உக்கார்ந்திருந்தார்கள். ஐஸ்க்ரீமுக்கும் க்யூ. ஒன்றை வாங்கி ரங்க்ஸும் நானும் சாப்பிட்டோம். இல்லாட்டி வெயிட் போட்டுடும்ல. :)
அடிதடி இல்லாக் கூட்டம். மெல்லிய இசை, ஏசி.!!!