எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஜூலை, 2026

சீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))

சீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))



இந்த சம்மருக்கு இங்கே போகலாம் அங்கே போகலாம்னு ஆயிரத்தெட்டு ப்ளான் வச்சிருப்பீங்க ..எங்கே போகப் போறீங்க நீங்க எல்லாம். இந்த வருடம் கொஞ்சம் வித்யாசமான ஊரு ட்ரை பண்ணுங்க. ஜெயா டிவியில் ஸ்டார்ஸ் உங்களுடன் நிகழ்ச்சி நடத்தும் வினோ சுப்ரஜா இந்வருடம் சீனா போய் வந்து இருக்காங்க . அவங்க அனுபவத்தை இங்கே நம்ம இவள் புதியவள் வாசகர்களுக்காக சொல்றாங்க..ஆர்வமாயிட்டீங்கள்ல கேக்க...

திங்கள், 29 ஜூன், 2026

ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டு பொங்கல் அனுபவம். இவள் புதியவளில்.

ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டு பொங்கல் அனுபவம். இவள் புதியவளில்.


இது ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம். :-

ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்ட கதிர் கிராமமும் வயலும் வயல் சார்ந்த வாழ்வை விரும்புவர். இயற்கையோடு இயைந்த பொங்கல் கொண்டாட்டாத்தையும் ., விவசாயிகளுக்கே உரித்தான மாட்டுப் பொங்கலையும் சிறப்பாகப் பகிர்ந்து உள்ளார். ”உழுதுண்டு செல்வாரே செல்வார் ,, மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்பது இங்கு பொருத்தமாய் இருக்கிறது.

************************************************

கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம்:-
******************************************************
அவை இப்போது போல் தொலைக்காட்சிகளையும், சினிமாவையும் தொங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பண்டிகை தினங்கள் அல்ல. அப்போதெல்லாம் பொங்கல் பண்டிகையை குதூகலமாக வரவேற்க பல காரணங்கள் இருக்கும். முதல் காரணம் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் உடனடியாக வரும் விடுமுறை வாரம். அதற்குப் பின் முழு ஆண்டுத்தேர்வுக்கான படிப்புகள் விறுவிறுப்பாக(!!!) தொடங்கிவிடும்.

சனி, 27 ஜூன், 2026

மீனா லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல். இவள் புதியவளில்.

மீனா லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல். இவள் புதியவளில்.


மீனா லெட்சுமணன் சென்னையைச் சேர்ந்தவர். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்து வருகிறார். தன் தந்தையின் ஊரான திண்டிவனம் கிராமத்துக்கு பாட்டி வீட்டுக்குப் போனபோது கொண்டாடிய பொங்கலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

சனி, 1 மார்ச், 2025

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்..

கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக இருக்க பயணம் மேற்கொண்டு தன்னைத் தொலைக்க விரும்புறாங்க.”

தன்னைத் தொலைத்தல் அல்லது தன்னைக் கண்டடைதல் இந்த வார்த்தைகளை நினைக்கும்போது புத்தர் ஞாபகம் வந்தார். எதிலோ ஒன்றிலிருந்து விடுதலை. அது ஆன்ம விடுதலையை நோக்கி இட்டுச் செல்கிறது சிலருக்கு.

எல்லாருக்கும் இது வாய்க்கிறதா.. ஒரு ஆண் இது போலப் பயணங்களை மேற்கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணால் முடியுமா..

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்   நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என்...