எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நீரின்றி அமையாது உலகு - 4. துங்கபத்ரா.

 நீரின்றி அமையாது உலகு - 4. துங்கபத்ரா.

மந்திராலயத்துக்கு இருமுறை சென்று வரும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது அங்கே துங்கபத்ரைக்குச் சென்று ப்ரோக்‌ஷணம் செய்து கொண்டோம். அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருக்குது. எனவே இரண்டாம் முறை ஹைதையில் இருந்து சென்றபோது மந்திராலயம் & துங்கபத்ராவை எடுத்த படங்கள் பார்வைக்கு. 


துங்கபத்ரையைக் கடக்கும் பாலம். 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

நீரின்றி அமையாது உலகு. - 3.ஹுசைன் சாகர் ஏரி.

 நீரின்றி அமையாது உலகு. - 3.ஹுசைன் சாகர் ஏரி.

ஹைதையில் செண்டர் ஆஃப் அட்ராக்‌ஷன் ஹுசைன் சாகர் லேக். 

டோமல் குடாவில் இருந்து ஒருமுறை போட்டிங்க் சென்று வந்திருக்கிறோம். அடுத்து எல்லாம் பயணப் பாதையில் தட்டுப்பட்ட ஏரியைத்தான் பார்க்க முடிந்தது. எங்கே ஏரி என கேக்குறீங்களா பாழாய்ப் போய் பேப்பர் குப்பைகளோடு பின்னாடியே வருது. 

இது ஹைதராபாத் செகந்திராபாத் ரயில் செல்லும் பாதையில் உள்ள மசூதி. இதைக் கடந்ததும் ஏரிதான். ரயில்வே ஸ்டேஷன் பக்கம் சுவர் அமைத்து அதோடு கம்பி வலையும் போட்டிருப்பது கண்ணைக் கவர்ந்தது. 

ஞாயிறு, 5 ஜூன், 2022

நீரின்றி அமையாது உலகு - 1.

 நீரின்றி அமையாது உலகு - 1.

நீரின்றி அமையாது உலகு. உண்மைதான். நதிக்கரையோர நாகரீகம் மட்டுமல்ல. இன்றைய மெட்ரோ சிட்டி வாழ்விலும் கூட புழல் நிரம்பியதா வீராணம் வருமா என்றெல்லாம்தான் யோசிக்க வேண்டி இருக்கு. எனவே பயணப் பொழுதுகளிலும் ஆன்மீகத் தலங்களிலும் நான் பார்த்த புஷ்கரணி, தீர்த்தங்கள், நீர் நிலைகள், கம்மாய்கள், ஊருணிகள், நதிகள், கடல் இவற்றை ( பம்ப்செட், கிணறு கூட வரலாம். ) ஆகியவற்றைக் க்ளிக்கி இங்கே பகிர்ந்துள்ளேன். 

இது வைவரன் கோவில் புஷ்கரணி. வைரவ தீர்த்தம். தீர்த்தக் கரைதனில் ஐந்து ரிஷபங்கள் காவல் வேறு. இதுவே அழகாக இருந்ததால் இப்படி எடுத்துள்ளேன். 

மேலே காண்பது அரியக்குடி பெருமாள் கோவிலின் கருட தீர்த்தம். கிணறு வடிவில் உள்ளது இத்தீர்த்தம். இறங்கிச் செல்லப் படிகள் உண்டு. வெளிப்பக்கம் கதவு போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். 

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...