பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
எத்தனையோ இடங்களில் காஃபி, டீ குடிச்சிருப்பீங்க. ஆனா நான் குடிச்ச காஃபிலயே பெஸ்ட் காஃபி எதுன்னு கடைசில சொல்லி இருக்கேன். ட்ரெயினில் ஏசியில் பயணிக்கும் போதும் வெளியூர் போகும்போதும் தங்கும் ஹோட்டல்களில் காஃபி/ஃப்ளாஸ்கில் பார்சல் காஃபி வாங்கி அருந்தியது உண்டு. முக்காவாசி கச்சடா காஃபியாதான் இருக்கும். அந்த நேரத்துக் கடமையைத் தீர்க்கன்னு. கட்டாயமா காலை, பத்து மணிக்கு, மாலைன்னு மூணு நேரம் காஃபி குடிக்காட்டா எனக்கு பயங்கர டென்ஷயாயிடும் :) :) . அதுனால எது கிடைக்குதோ இல்லையோ ரங்கமணி காஃபியை ஃப்ளாஸ்க் ஃப்ளாஸ்கா ஆர்டர் பண்ணிடுவார். :)
பொதுவா ஃபில்டர் காஃபி குடிச்சவங்களுக்கு எந்த காஃபியும் ஒத்துப் போறது கஷ்டம். ஹைவேல பூரா கும்பகோணம் டிகிரி காஃபின்னு போட்டிருப்பாங்க. எல்லாம் கன்னா பின்னான்னு சிக்கிரி போட்ட காஃபி.
மதுரையிலயும் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன்லயும் ஃபில்டர் காஃபி பேஷ் பேஷ். நன்னாயிருக்கும். சென்னைல புரசைவாக்கம் ஸ்கை வாக்ல கல்மனே காஃபி சூப்பரா இருக்கும். காரைக்குடி ஜெய்னிகாவிலும் இனிய காஃபி சர்ப்ரைஸ்.
சீக்கிரம் டிக்காக்ஷன் இறங்குதுன்னு காஃபிக்கு இப்ப பர்கொலேட்டர் பயன்படுத்தினாலும் ஃபில்டர்ல போடுற காஃபிக்கு ஈடு இணை இல்லை. வாரம் ஒரு முறை பீபெரி & செலக்டோ காஃபித்தூள் ஃப்ரெஷா நரசூஸ்லயும் காஃபிடேலயும் வாங்கணும் .
ஃபில்டர வாட்டிட்டு அதுல துளி சர்க்கரை போட்டுட்டு அதன் மேல் ஐஞ்சு ஸ்பூன் நரசூஸ், ஐஞ்சு ஸ்பூன் காஃபிடே, அதும் மேலே கால் டீஸ்பூன் சிக்கிரி தூவி கொதிக்கிற வெந்நீரை ஊத்தி மூடி வைக்கணும். அதே போல மூணு தரம் அஞ்சு நிமிஷத்துக்கு ஒருக்கா தண்ணி ஊத்தி டிக்காஷன் எடுத்து ஃப்ரெஷா காய்ச்சின பசும்பால்/ஆவின் பால்ல ( கொஞ்சம் தண்ணி சேர்த்துக் காய்ச்சலாம் .. இல்லாட்டி குண்டாயிடுவீங்க :) ரெண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஆத்திக் குடிக்கணும்
இதுக்கும் ஒரு விதிமுறை இருக்கு. முதல்ல ஒரு டம்ளர்ல சர்க்கரையை போட்டு அதுல டிக்காக்ஷன விட்டு அதும் பின்னாடி பாலை சூடா ஊத்தி நல்லா நுரை வர டபரால ஆத்தி குடிச்சா .. இந்த ருசியான காஃபி குடிக்கவே ஆத்தை விட்டே போமாட்டேள்.. வீடே சொர்க்கம்னு ஆயிடும்.
ஆனா ஒரு அக்கப்போர் நடந்து போச்சு சில வாரம் முன்னாடி.. ஆத்தைவிட அருமையான காஃபி போட்டு காஃபிக்காகவே ரூம்போட்டுத் தங்கலாமான்னு பண்ணிட்டாங்க ஒரு ஹோட்டல்காரங்க. அவங்க அருமை பெருமை எல்லாம் கடோசில சொல்லியிருக்கேன். :)
இது ஏதோ ஏர்போர்ட்ல குடிச்சதுன்னு நினைக்கிறேன்.பெங்களூரான்னு சரியா ஞாபகம் வரல.