எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 மார்ச், 2021

ஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சியும் சாரங்கபாணி கோயிலருகில் சுடச்சுட இட்லியும்

ஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சியும் சாரங்கபாணி கோயிலருகில் சுடச்சுட இட்லியும

கும்பகோணம்வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். ஊர்தான் நாற்றம் பிடித்த ஊர்.  ( ஆசிலேட்டிங் பாப்புலேஷன் அதிகம் என்பதால் இருக்கலாம். ) ஆனால் உணவுவகைகளோ அட்டகாசம். காசுக்கேத்த பலகாரங்கள்.கிடைக்கும். அங்கே ரயில்வே ஸ்டேஷனில் கிடைக்கும் அருமையான பில்டர் காபியில் உற்சாகமான நாள் ஆரம்பிக்கும்.

எல்லா ஹோட்டல்களிலும் இட்லி  சாம்பார் நல்லா இருக்கும். ஆனா எக்ஸ்பெஷலி சாரங்கபாணி கோயிலுக்கருகில் இட்லி சாப்பிட்டுப் பாருங்க. அசந்து போவீங்க ஆனா அதுக்கு நீங்க இரவுவரை காத்திருக்கணும். ஏன்னா ராத்திரி ஆறு மணியிலிருந்து பத்து மணிவரைதான் இட்லி கிடைக்கும். இதுபோக பட்டர் ரோஸ்ட், பொடி தோசை,மசால்தோசை, அடை , பரோட்டா என விதம் விதமான விருந்து உண்டு. சாம்பார் சட்னியுடன் மிளகாய் சட்னியும் ஸ்பெஷல். அதோடு முக்கியமான விஷயம் இட்லிப்பொடி  நல்லெண்ணெயும் உண்டு.  மறக்காம கேட்டு வாங்கி  சாப்பிடுங்க.
என்னடா வெங்கட்ரமணா பத்தி சொல்ல வந்துட்டு சாப்பாட்டுப் புராணமா இருக்கேன்னு பார்க்குறீங்களா முதல்ல சோறு முக்கியம் அமைச்சரே. :)

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...