குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.
மயிலே மயிலே உன் தோகை எங்கே என்ற பாடலும், மயில்தோகையை நோட்டுப் புத்தகத்தில் குட்டிபோட வைத்து பதுக்கியதும் பால்ய நினைவுகள். குவாலியர் சூரியனார் கோவில் போயிருந்தபோது இந்த ஆண் மயிலைப் பார்த்தேன். ஆண்மயில்னு ஏன் சொல்றேன்னா இதன் தோகை நான்கடி நீளம் இருந்தது.
சூரியகாந்திப் பூப் பூத்திருக்கத் தென்னையும் வாழையும் சூழந்த தோட்டத்தில் இந்த மயில் முதலில் ஒரு மரத்தின் கிளையில் செம்மாந்து அமர்ந்திருந்தது.