எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஏப்ரல், 2022

எங்கே செல்லும் இந்தப் பாதை -3

பழனி போன்ற மலைகளில் ஏறுவது ஆறுமுகவேலவனைத் தரிசிக்கத்தான் என்றாலும் வழிப்பயணம் நமக்கு பல ஆன்மீகப் பாடங்களைப் போதிக்கும்.


அதேபோல்தான் ஒவ்வொரு பயணமும். பஸ்/ட்ரெயின்/கார்/ஃப்ளைட்டில் நாம் சென்று அடையும் ஊரில் பார்க்கும் விதம் விதமான இடங்கள் மால்கள், கோவில்கள், தீம் பூங்காக்கள் போல நாம் பயணம் செய்யும் சாலையும் சிறப்பு வாய்ந்ததே. பயணியர், வியாபாரியர், நடைப்பயணம் செல்வோர், விவசாயிகள் வண்டி வாகனங்கள் பறவைகள் கால்நடைகள் எனச் சாலைகளிலும் உயிரோட்டமுள்ள வாழ்வு நிறைந்துள்ளது.

நகருள் அன்றாடப் பணியில் ஈடுபடும் மனிதரையும் கடைகளையும் ஊர் முடிந்ததும் வரும் ஆறு குளம் ஏரி போன்றவையும் மரம் செடி கொடிகளையும் வானத்தையும் பூமியையும் பாறைகளையும் மலைகளையும் பார்க்கும்போது மனம் உற்சாகமடைவதை உணரலாம்.

சூரியன் நம்மோடு ஓடி வருகிறதோ இல்லையோ சந்திரன் கட்டாயம் இரவுப்பயணத்தில் கூடவே ஓடிவரும்.  இன்னும் சில பயணப் பாதைகளைப் பார்க்கலாம் வாங்க.

இது சென்னை டி நகரில் போத்தீஸுக்குச் செல்லும் சாலை. மேலே மேம்பாலத்தில் போனால் பனகல் பார்க் போகலாம். அதிகாலைப் போதில் பிகேஆர் ஹோட்டலில் இருந்து இந்தப் பார்க்குக்கு நடைபழகச் சென்றோம். அப்போது எடுத்தது. பகல் என்றாலோ இரவென்றாலோ கூட்டத்தில் எள் போட்டால் எண்ணெய் ஆகிவிடும்.


இது ஹைதையில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொண்டாப்பூர் மாதாப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு மேம்பாலம். ஓவியப் பாலம் :)

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...