எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நம்மவீடு வஸந்த பவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்மவீடு வஸந்த பவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 பிப்ரவரி, 2021

வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.

வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.

சில மாதங்களுக்கு முன் சென்னை சென்றிருந்த போது சென்னை வடபழனி அம்பிகா எம்பயர் முன்னிருக்கும் நம்மவீடு வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்துக் கொண்டாட்டம்.

கிட்டத்தட்ட 2009 இல் முகநூலில் சந்தித்து இன்றுவரை அதே புரிந்துணர்வோடும் நட்போடும் இருக்கும் என் இரு தோழிகளைச் சந்தித்தேன். வசுமதி வாசன், கயல்விழி லெக்ஷ்மணன். இவர்கள் இருவரையும் பற்றிச் சொல்ல ஏராளமாய் இருக்கு. மிக இனிமையான தருணங்களிலும் மிக வருத்தமான தனிமையிலும் உடனிருந்தவர்கள். அநேக இடங்களுக்கு ஒன்றாகவே சென்றிருக்கிறோம். பேசிக் கொள்ளவே பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் திடீரென்று ஒரு நாள் பேசும்போது விட்ட இடத்தில் தொடர்வது போல ஒரு சௌஜன்யம் இருக்கும். எங்கே இருந்தாலும் எங்கள் வேவ்லெந்த் ஒன்று. எனது தன்னம்பிக்கைத் தோழிகள் என ஒரே வரியில் சொல்லி விடலாம். அன்பும் பாசமும் மிக்கவர்கள்.

சரி வசந்தபவன் விருந்துக்கு வருவோம். முதலில் ஸ்வீட் கார்ன் சூப் & கிளியர் வெஜ் சூப்..

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...