எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பயிர்ப்பச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயிர்ப்பச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஏப்ரல், 2021

பயிர்பச்சை . மை க்ளிக்ஸ்.3. GREENS. MY CLICKS - 3.

பயிர்பச்சை . மை க்ளிக்ஸ்.3. GREENS. MY CLICKS - 3.

வீட்டுத்தோட்டங்களில் அபூர்வமாகக் காணப்படுகிறது இந்த விசிறி வாழை. ஆனால் பெட்ரோல் பங்க். ஹோட்டல்.நிறுவனங்கள் போன்றவற்றில் இதை அலங்காரத்துக்காக வளர்க்கிறாங்க. பயிர்ப்பச்சையைப் பார்ப்பது கணினியையே பார்த்துக்கிட்டு இருக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சி. எனவே கொஞ்சம் பயிர்ப்பச்சையைப் பார்த்துக் கண்ணைக் குளிர்விங்க :)


தர்மபுரியில் ஹோட்டல் அதியமானில் தங்கியிருந்தபோது பக்கத்து பில்டிங்கிலிருந்த இந்த விசிறிவாழையை என் காமிராவால் கவர்ந்து கொண்டேன். :) இரண்டு விசிறி வாழைகள். இது நடுவிலிருந்து இருபக்கங்களிலும் இலைகளை விசிறிபோல் விரிப்பதால் இதுக்கு விசிறி வாழைன்னு பேர் போல. )

பயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 1. GREENS. MY CLICKS - 1.

பயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 1. GREENS. MY CLICKS - 1.

பயணப் பொழுதுகளிலும் சரி, உறவினர் வீட்டிற்குச் செல்லும்போதும் சரி. மிக அழகாய்த் தலையசைத்து வரவேற்கும் , புன்னகைக்கும் பூச்செடிகளையும் பயிர்பச்சைகளையும் படம் பிடிப்பது எனக்குப் பொழுது போக்கு.

இன்றைக்கு இந்தப் பயிர்பச்சைகளைப் பார்த்துக் கண்களைக் குளிர்வித்துக் கொள்வோம் வாங்க.

மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்ப்ரஸ்ஸில் செல்லும்போது எடுத்தது இந்தப் படம். அநேகமாய் தஞ்சாவூர் அல்லது கும்பகோணமாய் இருக்கலாம். தென்னைகள் வரிசை கட்டி நின்று தலையாட்டி வரவேற்றது இன்பமாய் இருந்தது.

ஔவையாரின் மூதுரை ஞாபகம் வந்தது.

///நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.///



வயல்வரப்புகளில் தென்னைகள் வைத்திருப்பது நல்ல கலையுணர்வு. இடம் மிச்சமும் கூட. ஆமா எத்தனை தென்னைகள் இருக்குன்னு எண்ணிச் சொல்லுங்க பார்க்கலாம். :)

அம்மாவீட்டின் பலாமரம்.கோரிக்கையற்றுக் கிடக்குதம்மா வேரில் பழுத்த பலா. :)

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...