எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

காதல் வனத்தில் நாச்சியாள் சுகந்தி.

 

காதல் வனத்தில் நாச்சியாள் சுகந்தி.

அழகப்பா பல்கலையில் நடைபெற்ற ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் 36 தமிழ்க் கவிதாயினிகள் கலந்து கொண்டோம். அதில் நாச்சியாளும் ஒருவர். பத்ரிக்கை நிருபர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகம் வாய்ந்தவர். 

இவர் என்னுடைய நூலைப் படித்து விட்டு விமர்சித்ததை இங்கே நான் கூறினால் நல்ல தட்டு எனக் கூறுவீர்கள். 

செவ்வாய், 2 ஜூலை, 2024

உணவுப் பழமொழிகளும், பயன்களும்

உணவுப் பழமொழிகளும், பயன்களும்

 நொறுங்கத்தின்றவனுக்கு நூறு ஆயுசு

உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டுலயும் சாப்பிடலாம்
சீரகம்= சீர் அகம் =  உடல்நலத்தை சீராக வைக்கும். 
சீரகம் இல்லா உணவும் சிறுகுழந்தை இல்லா வீடும் சிறப்பதில்லை.
காட்டுலே புலியும் வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
போன ஜுரத்தைப் புளியிட்டு அழைக்காதே
பொங்குற காலத்தில் புளி, மங்குற காலத்தில் மாங்கா
நெய்க்குடத்தைச் சுற்றிய எறும்பு போல
நெய் வயிற்று அக்கினியை அணைக்கும்
தன் காயம் காக்க வெங்காயம் போதும்
வாழை வாழ வைக்கும். 
வாழையடி வாழை
அவசரச் சோறு ஆபத்து
ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
முடக்கை நீக்குவது முடக்கற்றான் கீரை
வாய்ப்புண் நீக்கும் மணத்தக்காளி
இரப்பைப் புண்ணுக்கு எலுமிச்சைச் சாறு
ரத்தக் கொதிப்புக்கு அகத்திக் கீரை
கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராக்ஷை
சித்தம் தெளிய வில்வம்
சிறுநீர்க் கடுப்புக்கு அன்னாசி
சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு
மூலம் போக்கும் கருணைக்கிழங்கு மசியல்
ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்
நோய் எதிர்ப்பு சக்திக்கு முந்திரி பாதாம் பிஸ்தா அக்ரூட்
மலச்சிக்கல் போக்கும் கிஸ்மிஸ் 
இருமல் நீக்கும் கற்பூர வல்லி. 
உஷ்ணம் தணிக்கும் வெந்தயம். 
உடல்குளிர்ச்சிக்குச் சின்ன வெங்காயம்
தொண்டைக்கரகரப்பை நீக்கும் பனங்கல்கண்டு
குடல்புழு நீக்கும் வேப்பம்பூ
சர்க்கரை நோய்க்குப் பாகற்காய்.
பித்தம் தணிக்கும் நெல்லிக்காய்
இரத்த விருத்திக்கு கருப்பட்டி வெல்லம் 
இரும்புச் சத்துக்குக் கருவேப்பிலை
கண்பார்வை தெளிவாயிருக்கப் பொன்னாங்கண்ணி.
பசியைத் தூண்டுவது இஞ்சி
வாய் நாற்றம் போக்கும் புதினா
குடிவெறி நீக்கும் கொத்துமல்லி
வயிற்றுப்புண் நீக்குவது மஞ்சள்
தலைவலி நீங்க முள்ளங்கிச் சாறு
தேனுடன் இஞ்சி இரத்தத்தூய்மை
பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
மூலநோய் தீர வாழைப்பூக் கூட்டு
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
குழந்தைப் பேறுக்கு சோம்புக் கசாயம்
வாயுத்தொல்லை நீக்கும் பெருங்காயம்
வாத நோய் தடுக்க அரைக்கீரை
சளியைப் போக்கும் வெற்றிலை ரசம்
வாய் துர்நாற்றம் நீக்கும் ஏலக்காய்
பருமன் குறைய முட்டைக் கோஸ்
உடல் எடை குறைய கீரைகள்

திங்கள், 3 ஜூன், 2024

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

 அதிசயமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது காதல் வனம் நூலை வெளியிட்டவர்கள் , பெற்றுக் கொண்டவர் இருவருமே மணிமேகலைகள். காதலை வெறுத்த துறவி மணிமேகலையின் பெயர் கொண்ட இருவரும் எனது காதல்வனம் நூலைப் படித்துப் பார்த்தார்கள் வெளியிடும் முன். :) 

ஒருவர் எனது அன்பிற்குரிய தோழி சாஸ்திரி பவன் பெண்கள் சங்கத் தலைவி, தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி மணிமேகலை. இன்னொருவர் பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன். ( இவரது பெயரில் இருவரின் பெயருமே காதலையும் இல்வாழ்வையும் துறந்தவர்களாக இருப்பது ஆச்சர்யத்துக்குரியது ) 


என்னப்பா நம்மளக் கூப்பிட்டுத் தேன் இப்பிடி ஒரு புக்கை வெளியிடுறா.. என்று கூறுகிறார் தோழி மணிமேகலை :) 

வியாழன், 2 மே, 2024

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒரு இடுகையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

2018 ஃபிப்ரவரி 14 ஆம் தேதி அன்று எனது நூலான காதல்வனம் டிஸ்கவரியின் படி வெளியீடாக வெளிவந்தது. அந்நிகழ்வில் உறவினர்களும் முகநூல் வலையுலக நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். 



அன்று வந்த அவர்களில் இன்னும் சிலரை இங்கே பகிர்ந்துள்ளேன்.

அன்பிற்கினிய ஆசிரியை அலமு அத்தை.

 அன்பிற்கினிய ஆசிரியை அலமு அத்தை.