எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 மார்ச், 2021

பொன்முடி - 2 , மை க்ளிக்ஸ். PONMUDI - 2 MY CLICKS.

பொன்முடி - 2 , மை க்ளிக்ஸ். PONMUDI - 2 MY CLICKS.

கேரளாவின் திருவனந்தபுரத்தில்  அமைந்துள்ளது பொன்முடி. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சி இது. கடல் மட்டத்தில் இருந்து 1100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

இங்கே ஒரு சம்மருக்கு நண்பர் குடும்பத்தோடு சென்று வந்தோம். மிக இதமான குளிர். பகலில் சிறிது வெய்யில் அதிகம்தான். இங்கே ட்ரெக்கிங் செய்பவர்கள் அதிகம் என்று சொன்னார்கள். அகஸ்தியர் கூடம் , வனவிலங்கு சரணாலயம் பார்க்க வரும் கூட்டம் அதிகமாம். ஆயுர்வேத சிகிச்சைக்கூடங்களும் உள்ளன என்றார்கள்.

அதோ தெரிவதுதான் தங்கச்சிகரம் பொன்முடி.


கலெக்‌ஷன்ஸ் - 1. மை க்ளிக்ஸ், COLLECTIONS. MY CLICKS.

கலெக்‌ஷன்ஸ் - 1. மை க்ளிக்ஸ், COLLECTIONS. MY CLICKS.

கோவளம் பீச்சின் கடைகளில் எடுத்தது இந்தப் புகைப்படம்.



இதுவும் கோவளம்தான். மரச் சிற்பங்கள்.

ரயில்வே ஸ்டேஷன். மை க்ளிக்ஸ். RAILWAY STATION. MY CLICKS.

ரயில்வே ஸ்டேஷன். மை க்ளிக்ஸ். RAILWAY STATION. MY CLICKS.

பயணங்களில் எனக்கு மிகப் பிடித்தது ரயில் பயணமே. அதிலும் தென்னிந்திய ரயில்வேதான் பரவாயில்லை. தென்மேற்கு, வடமேற்கு, மத்திய கிழக்கு, மத்திய வடக்கு, மத்திய தென்கிழக்கு, ஈஸ்ட் கோஸ்ட், மத்திய கிழக்கு என அனைத்து ( ஏழுவகையான ) டிவிஷன் ரயில்களிலும் பயணம் செய்த அனுபவம் உண்டு.

அதிலும் செண்ட்ரல், ஹைதை, பெங்களூரு, மும்பை, டில்லி அடிக்கடி பயணம் செய்திருக்கிறேன். நான் படித்த வரையில் ரயில்வே & ரயில் வாழ்க்கை சம்பந்தமாக ஒரு முழுமையான நாவல் கூட இதுவரை வெளிவரவில்லை என நினைக்கிறேன்.

ரயிலே ஒரு சரித்திரம்தான். அதில் பயணம் செய்வதும் கூட. அந்த இன்பத்தை அனுபவிப்போம் வாருங்கள். :)

இது எக்மோர். இதில் முழுமையாக அனைத்தையும் பகிர முடியவில்லை எனவே இன்னும் சில இடுகைகள் தொடரும் :)




நம்ம கம்பீர எக்மோர்தான்.

அட்லாண்டிஸ். மை க்ளிக்ஸ். ATLANTIS MY CLICKS.

அட்லாண்டிஸ். மை க்ளிக்ஸ். ATLANTIS MY CLICKS.

 



ஜுமைரா பீச். மை க்ளிக்ஸ். JUMEIRAH BEACH. MY CLICKS.

ஜுமைரா பீச். மை க்ளிக்ஸ். JUMEIRAH BEACH. MY CLICKS.




பஞ்சவர்ணக் கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.

பஞ்சவர்ணக் கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.

பேசுவதி கிளியா பெண்ணரசி மொழியான்னு பாட்டு கேட்டிருப்பீங்க

இங்கே கோவை கண்காட்சியில் எடுத்த பத்துவித பஞ்சவர்ணக் கிளிகளின் படங்களைப் பகிர்ந்திருக்கிறேன். பார்த்துக் களிங்க :)

இது ப்யூர் பச்சைவர்ண பஞ்சைக்கிளி. அலகு ஐவரி கலர்ல இருக்கு. கன்னமிரண்டும் பொன் மஞ்சள். அமேசன் கிளியா தெரில.

கிளிகள் பொதுவா கொட்டைகள் பழங்கள் தானியங்கள் சாப்பிடும். ஜோசியம் சொல்லனு கூண்டுக்குள்ள அடைச்சுக் கொண்டு வருவாங்க கிளி ஜோசியர்கள். ஒரு நெல்மணிக்காக சீட்டெடுத்துக் கொடுக்கும் கிளிகள் திரும்ப கூண்டுக்குள்ள போயிடும். இதோட சிறகுகளை வெட்டிருவாங்களா இல்லை கூண்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கதால அதுக்கு பறக்க மறந்து போயிடுமான்னு தெரில.

விக்கிரமாதித்தன் கதைகள் இன்னும் சில கதைகளில் பேசும் கிளிகள் பத்தி படிச்சிருக்கேன். கிளி பேசுமான்னு தெரியாது. ஆனா ரஃபா கீ கீ ந்னு சவுண்ட் விடும் பார்த்திருக்கேன்.

பயிர்களை நாசப்படுத்துதான்னு தெரியாது. ஆனா தினைப்புனங்களைக் காத்த வள்ளி இந்தக் கிளிகளோட கிள்ளை மொழி பேசி இருக்கணும். பொதுவா கிளிக்குத் தினை தானியம் பிடிக்கும்னு நினைக்கிறேன். எங்க அம்மா வீட்டில் ஒருமுறை அம்மா தினைச் செடி வைச்சிருந்தபோது அதன் நுனியில் இருக்கும் கதிர்களை உண்க கிளிகள் மாடியில் கத்தியபடி இருப்பது கண்கொள்ளாக் காட்சி.

பொண்ணு கிளிமாதிரி இருப்பான்னும் , கிளிமாதிரிக் கொஞ்சிப் பேசுவான்னும் சொல்றதுண்டு பேச்சு வழக்குல. கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுத்தாப்புல என்று பழமொழியும் உண்டு. ( கொசுறு தகவல்கள் :)



இதுவும் நாலஞ்சு வர்ணத்தோட இருக்கு. இதுக்கு நீல மஞ்சள் வண்ணக் கிளின்னு சொல்லி இருக்காங்க கூகுள் இமேஜ்ல .

ப்ரேக்ஃபாஸ்ட் மை க்ளிக்ஸ். BREAKFAST. MY CLICKS.

ப்ரேக்ஃபாஸ்ட் மை க்ளிக்ஸ். BREAKFAST. MY CLICKS.

காலை உணவைத் தவிர்க்காம உண்ணுங்க. மதியம் மாலை கூட குறைச்சு சாப்பிடலாம். ஆனால் காலை உணவை மஹாராஜா போல விமர்சையா சாப்பிடுங்க. 

ஏன்னா இரவு ஒன்பது மணியிலிருந்து காலை ஒன்பது மணி வரை பன்னிரெண்டு மணி நேரம் வயிறு காலியா இருக்கும். அப்போ நிறைய சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்துக்களை குடல் ஈசியா உறிஞ்சிக்க முடியும்.  முடிந்தால் பழங்களும் பழச்சாறுகளும், ட்ரைஃப்ரூட்ஸ் & நட்ஸ் வகைகளும் சேர்த்து எடுத்துக்கலாம். 

அவித்த முட்டையோ ஆம்லெட் ஒன்றோ தினம் எடுத்துக்கலாம். இது ஆர்வி ல சாப்பிட்டபோது எடுத்தது. அங்கேதான் இதுபோல் முழுமையான காலை உணவு கிடைக்கும். 



ரெண்டு மூணு ஆப்ஷன். இட்லி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார், சட்னிகள்.& காபி. 

இல்லாட்டா ப்ரெட் பட்டர் ஜாம் பழச்சாறு அவிச்ச முட்டை அல்லது ஆம்லெட், பழங்கள். 

இல்லாட்டி கார்ன்ஃப்ளேக்ஸ் பால் ஊற்றி சாப்பிடலாம். 

செவ்வாய், 30 மார்ச், 2021

அட்லாண்டிஸ். குடியிருப்புகள், மை க்ளிக்ஸ். ATLANTIS, VILLAS, MY CLICKS.

அட்லாண்டிஸ். குடியிருப்புகள், மை க்ளிக்ஸ். ATLANTIS, VILLAS, MY CLICKS.

அட்லாண்டிஸ் செல்லும் பாதை. துபாய் மெட்ரோவிலிருந்து.


வழியெங்கும் கட்டிடங்கள்.

திங்கள், 29 மார்ச், 2021

பொன்முடி , மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.

பொன்முடி , மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.

கேரளாவுக்குச் சென்றிருந்தபோது பொன்முடியை தரிசித்தோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த இந்தச் சிகரம் நிஜமாகவே பொன்முடிதான்.


திருவனந்தபுரத்தில் இருந்து பாலோடு போய் அதன் பின் பொன்முடி போனோம்.  அதன் பல்வேறு படங்களைப் பகிர்ந்துள்ளேன். பல அடுக்கு மலைத்தொடராக அமைந்தது பொன்முடி. பாறை, மண், பசுமை என வெரைட்டியான மலை.


மைசூர் அரண்மனை. மை க்ளிக்ஸ். MYSORE PALACE. MY CLICKS.



மாமனிதர்கள்.மை க்ளிக்ஸ். GREAT PERSONALITIES. MY CLICKS.

மாமனிதர்கள்.மை க்ளிக்ஸ். GREAT PERSONALITIES. MY CLICKS.

பெங்களூரு ஷில்பாராமம் எதிரில் கம்பீர நடை போடும் இந்திராகாந்தி அம்மையார்.


சென்னை போர்ட் ட்ரஸ்டில்.

குழந்தை மாந்தமும் கறுப்புத் தங்கமும்.

குழந்தை மாந்தமும் கறுப்புத் தங்கமும்.

 இது பிடிக்கும் அது பிடிக்காதுன்னு சாப்பாட்டை ஒதுக்குபவர்கள் இதைக் கட்டாயம் படிச்சே ஆகணும். எல்லா உணவிலும் என்ன சத்து இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டோம்னா அதைத் தவிர்க்காம சாப்பிடப் பழகிக்குவோம். இன்னும் கொஞ்சம் மருத்துவ உணவுகள் பற்றிப் பார்ப்போம். 

1. கருணை:- மூலநோய், மலச்சிக்கல், போக்கும். பசியைத் தூண்டும். குடலுக்கு ஆற்றல். நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். புளி, காரம், புலால், மது நீக்க வேண்டும். 


கருணைக்கிழங்கு இது நம் உணவில் இன்றியமையாதது. மூலத் தொந்தரவு உள்ளவர்கள் கட்டாயம் உண்ணவேண்டிய கிழங்கு இது. வேறு எந்த உடல் உபாதை உள்ளவர்களும் உண்ணலாம். நன்கு வேகவைத்து லேசாகப் புளி விட்டுச்செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நாக்கை அரிக்கும். குழம்பு , மசியல் போன்றவை நல்லது.

கீரை உணவுகள் - 2.

கீரை உணவுகள் - 2.

 கருவேப்பிலைக் குழம்பு. இது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். சின்ன வெங்காயம் பூண்டைப் பொடிப்பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி அரைத்த கருவேப்பிலை சாம்பார்பொடி உப்பு புளி மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும். கருவேப்பிலையோடு சோம்பு சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும். நன்கு பசியைத் தூண்டும் குழம்பு இது. 

பொரிச்சுக் கொட்டித் தேங்காய்த்துவையல் ( கருவேப்பிலை கொத்துமல்லி சேர்த்தது )

கீரை உணவுகள் - 1.

 கீரை உணவுகள் - 1.

கீரை உணவுகள் நம் செரிமானத்தை சீராக்குகின்றன. விட்டமின் மினரல்ஸ் போக இரும்புச்சத்தும் கிடைக்கிறது. கீரைகள் உண்பதால் முடி நன்கு வளரும்.  கண்பார்வை தெளிவாகும்.  நார்ச்சத்து என்பது நம் குடலுக்குத் தேவை. 

இங்கே சில கீரை உணவுகளைப் பகிர்ந்துள்ளேன். 

கருவேப்பிலை கொத்துமல்லி தேங்காய்த்துவையல். கடுகு உளுந்து பச்சைமிளகாய் தாளித்து உப்பு, புளி, வெங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லியைத் தேங்காயோடு வைத்து வதக்கி அரைக்க வேண்டும். 

தூதுவளை ரசம். எப்போதும் வைக்கும் ரசத்தைத் தாளிக்கும்போது தூதுவளைக் கீரையைத் தட்டிப் போட வேண்டும். சள்ளைக்கடுப்பு, சளிக்கு ஏற்றது

சாய் பிறந்த நாளில் கொஞ்சம் இனிப்பு.

சாய் பிறந்த நாளில் கொஞ்சம் இனிப்பு.

இன்னிக்கு பாபாவோட (ஷிர்டி சாய் பாபா ) பிறந்தநாள்னு மகன் சொன்னான். மருமகள் பக்தை என்பதால் நானும் பக்தையாயிட்டேன். ஜெய் ஸ்ரீ சாய் மகாராஜ் கீ. அவருக்கும் கொடுத்ததா நினைச்சுக்குறேன்.

இனிப்பு அதிகம் சாப்பிடுபவர்களை ஸ்வீட் டூத் கொண்டவர்கள் என்று சொல்வார்கள். இனிப்பு நீர் இருந்தாலும் ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக் கொள்ளும் மக்கள் நிரம்பிய சமுதாயம் நம்மளது :) அதுனால என்னிக்கோ ஓரிரு ஸ்வீட் எடுத்துக்கலாம் பயமில்லாம சாப்பிடுங்க.

அர்ச்சனா ஸ்வீட்ஸில் வாங்கிய ட்ரை ஜாமூன்.


அங்கேயே வாங்கிய பால்அல்வா.

காஃபி (& டீ .)

காஃபி (& டீ .)

என்ன செய்றதுன்னே தெரில. நிசப்தம் காதை அறையுது. தலை வலிக்கிறா மாதிரி இருக்கு. சூடா ஒரு கப் காஃபியோ டீயோ குடிப்போமா..

டிஃபன் சாப்பிட்டதும் நுரை பொங்க ஒரு சின்ன கப்பில் கசப்பும் வாசனையும் தூக்கலா ஒரு  காஃபி குடித்தால்தான் சாப்பிட்ட நிறைவு வரும். இனி என் காஃபி நினைவுகளும் புகைப்படங்களும். சில ஆண்டுகளாக அவ்வப்போது ஊர் சுற்றிப் பார்க்கச் சென்று தங்கிய ஹோட்டல்களில் எடுத்தது.

கோவை விஷ்ணுப்ரியா அருகில் உள்ள கடையில் பித்தளை டவரா டம்ளரில் ப்ரமாதமாக ஃபில்டர் காஃபி கிடைக்கிறது.


காலைக் காஃபி சுவாசப் புத்துணர்ச்சி :)

பிஸ்குட்ஸ் & அஸார்ட்டட் குக்கீஸ்.

பிஸ்குட்ஸ் & அஸார்ட்டட் குக்கீஸ்.

நாம் பிஸ்கட் என்றழைப்பதை வடநாட்டார் பிஸ்குட் என்பார்கள். மேற்கொண்டு நம் உச்சரிப்பை எல்லாம் கேலி செய்வார்கள். :) அதனால் இங்கே கொஞ்சம் பிஸ்குட்ஸ், அஸார்ட்டர் குக்கீஸ், சாக்லேட்ஸ், டெஸர்ட்ஸ் உங்களுக்காக.

இந்த டார்க் ஃபேண்டஸியில் என்ன இருக்குதுன்னு தெரில. ஆனா என் பசங்களுக்கு மிகப் பிடிச்ச பிஸ்குட் இது. ஏன்னா இது டூ இன் ஒன். பிஸ்குட்டுக்குள்ள சாக்கிலேட். :)


நம்ம காட்பரீஸ்தான். முந்திரி &டார்க் சாக்லேட், & டெய்ரி மில்க்.

ஞாயிறு, 28 மார்ச், 2021

நெய் ரோஸ்ட்.. GHEE ROAST.

நெய் ரோஸ்ட்.. GHEE ROAST.

எல்லா ஹோட்டல்களிலும் நெய் தோசை/நெய் ரோஸ்ட் என்று மட்டும் கேட்டுடாதீங்க. நெய் பேப்பர் ரோஸ்ட் என்றே அழுத்தம் திருத்தமா கேளுங்க. அப்பத்தான் மொறு மொறுன்னு மேனி மினுங்க நெய் ரோஸ்ட் கிடைக்கும்.

ஜெய்னிகாவின் நெய் ரோஸ்டுக்கு ஈடு இணையாக எதுவுமே இல்லை. இருந்தும் சில ஹோட்டல்களின் நெய் ரோஸ்ட்களோடு கம்பேர் செய்து ஒரு உணவு ( ஜொள்ளுப் ) பதிவு. :)


ஜெய்னிகாவிலேயே ஐந்தாறு முறை தோசை சாப்பிட்டு இருப்பதால் இந்த மினு மினுப்பை விட்டு நீங்கக் காலம் பிடிக்கும்.

20 வகை தோசைகளும் 30 வகை சட்னிகளும்

20 வகை தோசைகளும் 30 வகை சட்னிகளும்.

தோசையம்மா தோசை.
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
அரைச்சு சுட்ட தோசை
அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு மூன்று
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒண்ணு..

இதுதான் தோசையைப் பத்தி முதல்ல படிச்ச பாடல் :)

அரிசிமாவுலயும் பச்சரிசி புழுங்கல் அரிசி ( சில சமயம் ஜவ்வரிசி அல்லது அவல் கூட மெத்து மெத்துன்னு இருக்க சேர்க்கிறாங்கன்னு கேள்விப்பட்டதுண்டு. ) அதோட வெந்தயம் உளுந்து இந்தக் கலவைல ( 1:1:1/16:1/2 ) என்ற ப்ரபோஷன்ல ஊறவைச்சு அரைச்சு சுட்டா தோசை பட்டு பட்டா இருக்கும்ங்க.

இங்கே விதம் விதமான தோசைகளையும் அதற்குத் தொட்டுக் கொள்ளும் பக்க பதார்த்தங்களையும் பார்ப்போம் வாங்க. காரைக்குடி மக்கள் விதம் விதமான தொட்டுக்க வைப்பதில் ஸ்பெஷலிஸ்ட்  இட்லி தோசைக்கு 30 விதமான தொட்டுக்க வகையறாக்களை இங்கே பார்ப்போம் வாங்க.




1. இளந்தோசை தோசை - 1. பச்சைமிளகாய் மல்லித் துவையல்.

ஸ்லேட் மெனு கார்டும், மரப்பெட்டியில் பில்லும்.

ஸ்லேட் மெனு கார்டும், மரப்பெட்டியில் பில்லும்.

சுவாமிமலை ஸ்டெர்லிங் ஹோட்டலில் வித்யாசமான ஒரு காட்சி.

புராதனப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பாரம்பரிய மியூசியம் போல இருக்கு. அதோடு ஸ்லேட்டில் மெனு கார்ட், மரப் பெட்டியில் பில் என்று பழமையின் அம்சங்கள் கவர்ந்திழுத்தன. 


மெனு என்னவோ வழக்கம்போல உள்ள மெனுதான். டொமேட்டோ சூப். 

சனி, 27 மார்ச், 2021

ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல், ஹோசூர்.

ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல், ஹோசூர்.

ஹோசூர் பஸ்நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ளது இந்த கௌரி கிராண்ட் ஹோட்டல். குடும்பமாக வந்தால் கூட எந்தவித தயக்கமும் இல்லாமல் தங்கலாம்.

இதன் ஓவியங்கள் என்னைக் கவர்ந்தன. எங்கு நோக்கினும் ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகவும் அமைந்தன.

எனக்குப் பிடித்த காரிடார்.

எவ்வளவோ ஓவியங்கள் இருந்தும் ஒன்றிரண்டை மட்டுமே க்ளிக்கினேன்.

ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

தினமணியின் சிறுகதைக்கான ஆறுதல் பரிசைப் பெற  ( நாரத கான சபாவில் சிவசங்கரி கையால் பரிசு வாங்க ) சென்னை சென்றிருந்தபோது ஹோட்டல் சென்னை கேட்டில் தங்க நேரிட்டது.

எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிரிலேயே உள்ளது இந்த ஹோட்டல். இருவர் தங்க 1300/- ரூபாய் ஒரு நாளைக்கு.

கண்கவர் எக்மோரின் காட்சியைக் கண்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம்.  


டபுள் காட் & பெட், ஏசி, ஹாட்வாட்டர், வைஃபை வசதி இருக்கு. 

கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.

கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.




வெள்ளி, 26 மார்ச், 2021

கோரமங்களா ஃபோரம் மாலும் மல்லேஸ்வரம் மந்திரி மாலும். FORUM MALL & MANTRI MALL.

கோரமங்களா ஃபோரம் மாலும் மல்லேஸ்வரம் மந்திரி மாலும். FORUM MALL & MANTRI MALL.





விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

திருச்சி பஸ் ஸ்டாண்டின் எதிர்ப்புறம் பல்வேறு ஹோட்டல்கள் உள்ளன. ராஜ சுகம் என்ற ஹோட்டலின் அருகில் அமைந்துள்ளது இந்த விஜெய் ஹோட்டல்ஸ்!.

மூன்றடுக்கு மாடி உள்ளது. பக்கவாட்டுகளில் எல்லாம் சிங்கிள் ஸ்டேயிங் ரூம். இதுவே 1150/- ரூபாய் டாரிஃப்.

தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.

தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.





வியாழன், 25 மார்ச், 2021

கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.

கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.

காரைக்குடிக்கருகே கோவிலூர் கோபுரம்.  


காரைக்குடி சின்ன முத்துமாரியம்மன் கோவில்.

தாய்லாந்து பிரம்மாவும் மதங்கநர்த்தன கிருஷ்ணனும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

தாய்லாந்து பிரம்மாவும் மதங்கநர்த்தன கிருஷ்ணனும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

Summer vanthachu. Cool cool

குன்றக்குடி கீழப்பாடசாலை, கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளின் மைந்தர்கள், மாமாவின் ஆயுஷ்ஹோமத்தில்.

துபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.

துபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.

துபாயின் கட்டிடங்கள்  ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.

இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்.

புதன், 24 மார்ச், 2021

சூரியன் முத்தமிட்ட பாய்மரப்படகு. மை க்ளிக்ஸ். YACHT & SUNSET AT ATLANTIS. MY CLICKS.

 சூரியன் முத்தமிட்ட பாய்மரப்படகு. மை க்ளிக்ஸ். YACHT & SUNSET AT ATLANTIS. MY CLICKS.

ஒரு மாலை இளவெய்யில் நேரம் அட்லாண்டிஸில் எடுத்த புகைப்படங்கள் இவை.  லைட்டா ஹார்ட் மாதிரி தெரியுதுல்ல. 

கடலுக்குள்ள மணல் கல் கொட்டி நிலப்பரப்பை உண்டாக்கிக் கட்டப்பட்ட கட்டிடம் இது.

ஈஸ்ட்மென் கலரில் ஒரு பாஸ்கரன்.

ஈஸ்ட்மென் கலரில் ஒரு பாஸ்கரன்.

சாதாரணமான ஊர்ல ஒரு அசாதாரணமான வசதியோட ஹோட்டலைப் பார்த்தா சந்தோஷமா இருக்கும்தானே. அதிலும் இங்கே காலை பஃபே கிடையாது. ரூம் ரெண்ட் ஆயிரம் ரூபாய்தான்/ஒரு நாளைக்கு.

திருநெல்வேலியின் கல்லிடைக்குறிச்சியில் செட்டிப் பிள்ளை தெருவில் இருக்குது இந்த ஹோட்டல். ஃபேமிலியோடு தங்க டீஸண்டான ஹோட்டல். பேரு பாஸ்கர் ஹோட்டல்.

ஆனா ஹோட்டல் ரூம் ஒரே வண்ணமயமா இருக்குது. அது தலைவருக்குப் பிடிச்சிது. அதுனால எனக்கும் பிடிக்குது :) இப்பிடி ஒரு ஈஸ்ட்மென் கலரில் பொருட்களும் லைட்டிங்கும் இருக்குற ஹோட்டலை நாங்க பார்த்ததேயில்லை. நல்ல வசதியான பெரிய அறை. உள்ளே டபிள்/ட்ரிபிள் பெட். கபோர்ட், டிவி, சர்வீஸ் டேபிள். ஏசி, குடி தண்ணீர், ப்ளேட்டுகள்.

பெட்டின் மேல் மூன்று தலையணைகள், எக்ஸ்ட்ரா திண்டும் இருக்கு. பக்கத்தில் இண்டர்காம். பெட்டின் மேல் தேங்காய்ப்பூத் துவாலை.

மாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்.

மாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்.

ஆயுளை அதிகமாக்கும் ஆனந்த முனீஸ்வரர்.

மாத்தூர் கோவில் பற்றியும் ஸ்தலவிருட்சங்கள், விடுதி பற்றியும் முன்பே எழுதி இருக்கிறேன்.

இப்போது அங்கே அனுவலுக்குச் செல்பவர்கள் தங்க அறைகளும் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறன.அவற்றைப் பார்ப்போம்.

நகர விடுதியின் முன்புற புகைப்படம் முன் இடுகைகளில் இடம்பெற்றுள்ளது.

இது குறுக்குவெட்டுத் தோற்றம். பாத்ரூம் & சமையற்கூடத்தின் பக்கம் இருந்து வந்தால் உள்ளே ஒரு வளவும் பக்கத்தில் ஒரு பெரிய கூடமும் மூன்று அறைகளும் கொண்டது இவ்விடுதி. பின் புறம் மாபெரும் போஜன் ஹால் உள்ளது. ஒரே நேரத்தில் 200 பேருக்கு மேல் சாப்பிடலாம்.

இக்கோயிலில் மகிழமரத்தடி ஆனந்த முனீஸ்வரர் குடி கொண்டிருப்பதால் இது திருக்கடையூருக்கு நிகராக சொல்லப்படுகிறது. இங்கே  59, சாந்தி , பீமரத சாந்தி, சதாபிஷேகம் , கனகாபிஷேகம் ஆகியன செய்து கொண்டால் அடுத்தடுத்து கனகாபிஷேகம் மகுடாபிஷேகம் செய்து கொள்ளும் அளவுக்கு ஆனந்த முனீஸ்வரர் ஆயுள் வழங்குவார்,  மிருத்யு நெருங்காது. ஆரோக்யம் நீடிக்கும் என்கிறார்கள்.

செவ்வாய், 23 மார்ச், 2021

மௌண்ட் ரோடு ஹோட்டல் ப்ளானட் க்ராண்டே.

மௌண்ட் ரோடு ஹோட்டல் ப்ளானட் க்ராண்டே.

அண்ணாசாலையில் தேனாம்பேட்டை டி எம் எஸ்ஸுக்கு எதிரில் அமைதிருக்கும் இது பட்ஜெட் ஹோட்டல். 2 ஸ்டார் ஹோட்டல். OYO மூலம்தான் புக் செய்ய முடியும். ரூம் ரெண்ட் 1400/- என நினைக்கிறேன்.

 தேனாம்பேட்டை டி எம் எஸ் எதிரில் இதன் மெயின் டோர் பக்கவாட்டில் உள்ளது. தங்கும் அறைகள் மேலே. மேல்மாடியில் காலை பஃபே.  தினம் காலையில் சப்ளிமெண்ட்ரி ப்ரேக்பாஸ்ட் உண்டு. ஆனால் இரண்டு மூன்று ஐட்டங்கள் மட்டும்தான். காஃபியோ டீயோ உண்டு.

இது ஏர்போர்ட் போக பக்கம்.பஸ் ஸ்டாப் எதிரில் உள்ளது. இங்கிருந்து பீச்சுக்கும் செல்லலாம்.

பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

 பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

பொன்னாங்கண்ணிக் கீரை. கண் பார்வைக்கு நல்லது. மண்டி , பொரியல் வைத்து சாப்பிடலாம்.


கொடிப்பசலை, மசிக்கலாம். குடல் புண்ணை ஆற்றும்.

என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS

 என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS

தினமும் காலையில் எழுந்ததும் எழும் கேள்வி ’இன்று என்ன சமைப்பது. ?’

அதே போல் மிகவும் அறிமுகமாக இல்லாத  இருவர் ( இருவரும் பெண்கள் அல்ல :) நண்பரான பின் கேட்கும் முதல் கேள்வி “இன்னிக்கு என்ன சமையல். ?”

தினம் தினம் மூன்று வேளையும் விதம் விதமாகப் பலகாரங்களும் தொட்டுக்கொள்ளும் வகையறாக்களும் வேண்டியிருக்கிறது நமக்கு.தினமும் ஒரே மாதிரியான சப்பாத்தி& ப்ரெட்டில் அடங்கிவிடக்கூடியதல்ல நம்முடைய பசி. நமக்கு வெரைட்டி வேணும். போகும் நாட்டில்/ஊரில் செய்யும் ரெஸிப்பிக்களையும் கேட்டு நமதாக்கிக் கொள்வோம்.

தினம் தினம் சமைத்ததுதான். அதை அவ்வப்போது எடுத்த படங்களோடும் சில விசேஷங்கள் & ஹோட்டல்களின் உணவோடும் பகிர்ந்திருக்கிறேன்.

ஒரு நிகழ்ச்சியில் சமைத்துக் காட்ட அக்கா ஒருவர் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். கருணைக்கிழங்கை குழம்பு வைத்தால் நல்லா இருக்கும். ஆனால் அன்று மசித்தார்கள். இது குழந்தைகள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட சமையல் வகை. செட்டிநாட்டின் ஸ்பெஷலான தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளும் வகையான மண்டி என்பதையும் அன்று செய்தார்கள்.


இது வீட்டில் செய்தது.  சின்னவெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு, முளைக்கீரை மசியல்,பீட்ரூட் வடை, கத்திரி முருங்கை பச்சடி, அவிச்ச முட்டை, தயிர், சாதம்.

ஞாயிறு, 21 மார்ச், 2021

குமரகம். ஆலப்புழா. நீர்ப்பறவைகள். மை க்ளிக்ஸ். AZHAPUZHA . WATER BIRDS. MY CLICKS.

குமரகம். ஆலப்புழா. நீர்ப்பறவைகள். மை க்ளிக்ஸ். AZHAPUZHA . WATER BIRDS. MY CLICKS.

கடவுளின் தேசத்தில் ஓரிரு நாட்கள் வசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவில், ஆற்றுக்கால் பகவதியை தரிசனம் செய்தபின் கொச்சுவேளி, கோவளம் பீச் சென்றோம்.

மறுநாள் பாலோடு சென்று அங்கிருந்து பொன்முடி சென்று சிகரம் தரிசித்தோம்.

மூன்றாம் நாள் கொயிலோன் வந்து குமரகோமில் உலா. மாலையில் கொச்சின் வந்து கோவை வந்து கும்பகோணம் வந்தோம். :)

குமரகோமில் பகல் நேரம் மட்டுமே தங்கல் என்பதால் போட் ஹவுஸ் எல்லாம் போய் தங்கவில்லை. ஒரு போட்டை நான்கு மணி நேர வாடகைக்கு ( சுமார் 900/- ரூ - அடிஷனலா படகு ஓட்டிக்கு பணம் ) கொடுத்து எடுத்துச் சுற்றி வந்தோம்.

நாம் ஒண்ணும் ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராஃபர்கள் இல்லைன்னாலும் ஆசை யாரை விட்டுது.

ஆனாலும் இந்த மரம் செடி கொடியை எடுப்பது போல் எளிதில்லை பறவைகளை புகைப்படம் எடுப்பது என்று புரிந்தது.

கிடைச்சதை சுட்டிருக்கேன். சுவைச்சிட்டு சொல்லுங்க. இப்பைக்கி படத்தைப் போட்டுட்டு எஸ்கேப் :)

குமரகோமில் பறவைகள் சரணாலயம் இந்த 14 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரிதான்.  ஏரியில் அங்கங்கே திட்டுத் திட்டாக பச்சைத் தாவரங்கள். நன்னீர் உயிரிகள்.

சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.

 சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.

சென்னை ஏர்ப்போர்ட் மை க்ளிக்ஸ்.

அழகான புலர் காலைப் பொழுதில் புதுமயமான சென்னை ஏர்ப்போர்ட்டில் சில ஆண்டுகளுக்குப் பின் காலடி எடுத்து வைத்தோம்.

எதிரே பரங்கிமலை தெரியும் அளவு பிரம்மாண்டக் கண்ணாடிகள் கொண்டு மிரட்டியது சென்னை ஏர்ப்போர்ட்.

நொறுங்கி விழுது. இடிஞ்சு விழுதுன்னு பயமுறுத்திய ஏர்ப்போர்ட் இப்போ கம்பீரமா நிக்குது. பில்லர்கள் படு ஸ்ட்ராங்க். :)

இண்டர்நேஷனல் ஏர்போர்ட் பகுதி மாடியில் ரொம்ப விசாலமாக்கப்பட்டிருக்கு. ஹைதை ஏர்ப்போர்ட் மாதிரி  வசதிகள் பெருகி இருக்கு. கார் அல்லது டாக்ஸி மேலே கொண்டு வந்து நம்மை ட்ராப்பலாம்.

அதே பில்லர்கள்தாம்பா.

விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

ஆர்வியில் ரூம் ரெண்ட் அதிகமாகிவிட்டது. அதனால் கோவை பஸ் நிலையத்துக்கு அருகில் இருக்கும் விஷ்ணுப்பிரியாவில் ரூம் ரெண்ட் குறைவு என்பதால் தங்குவதுண்டு. அதிகமில்லை. இங்கேயும் இருவருக்கு 1500 இலிருந்து 1700 வரை.

காலையில் பஃபே உண்டு உண்டு. கோவையே ஒரே ஜிலு ஜிலு குளு குளுவென இருப்பதால் ஏசி ரூம் எடுத்தது வேஸ்ட்தான். பக்கத்திலேயே சவுத் இந்தியன் ஃபில்டர் காஃபி பித்தளை டவரா டம்பளரில் ( டபரா டம்ளர் ) அட்டகாசம்.

இங்கே ஒரு குறிப்பிட்ட சிறப்பு அம்சம். எல்லா ஃபர்னிச்சரும் லெதரால் செய்யப்பட்டது போல் இருந்தது.

இங்கே தீபிகா படுகோனேவைப் பார்த்து அசந்தேன். அத பின்னாடி போட்டிருக்கேன். :)


லிஃப்ட் .. கண்ணாடி.

சனி, 20 மார்ச், 2021

தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

தென்காசி மிக அழகான ஊர். எங்கும் பச்சைப் பசுமை. தூரத்து வயல்கள், பசும் மலைகள். இந்த மேற்குத்தொடர்ச்சி மலைகளைத் தாண்டினால் கேரளாவாம்.

எங்கெங்கு நோக்கினும் அருவிகளில் குளியலாடச் செல்லும் மக்கள். ஜூலை, ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் இங்கே ஒரே கூட்டமும் போக்குவரத்து நெரிசலுமாக இருக்கிறது.

ஆடி வெள்ளியும் அதுவுமாக அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து இங்கே வருபவர்கள் அதிகம்.

உலகம்மன் காசி விசுவநாதர் ஆலயம் ஒன்பது நிலைகளுடன் மிகக் கம்பீரமாக நிற்கிறது. பதிநாலாம் நூற்றாண்டுக் கோயில் . அம்மனுக்கு, பெருமானுக்கு, சோமாஸ் ஸ்கந்தனுக்கு என்று தனித்தனிக் கோவில்களுடன் கூடிய கோவில். மிகப் பெரும் பிரகாரங்கள் கொண்ட பிரகாரங்கள்.

சாப்பாடு எல்லாம் சீப்தான். மீல்ஸ் 70. இட்லி தோசை எல்லாம் இருவருக்கு நூற்றைம்பது ரூபாய்க்குள் வரும். டீ 15 ரூ.

இந்த ஹோட்டல் சௌந்தர்யாவில் ஒன்லி போர்டிங்தான். மீல்ஸ் பஃபே எதுவும் கிடையாது. கேட்டால் ரூம் சர்வீஸில் சொல்லி வாங்கித் தருகிறார்கள்.

அமைதியான ஊர். ஒருவாரம் தங்கி ஒவ்வொரு அருவியாகக் குளிக்கலாம். மெயின் அருவியில் க்யூ, ஐந்தருவி பரவாயில்லை. ஆனால் வீட்டில் வெந்நீரில் குளியலாடியவர்களுக்கு ( அதாவது எனக்கு ) அங்கே அருவியில் நிற்பது சுவாசத்தை நிறுத்தி மூச்சுத் திணறியது.

திருஞான சம்பந்தருக்கும் கோவில் உள்ளது. ஐந்தருவி செல்லும் வழியில் அமைந்த சித்திர சபை பார்த்தோம் அபாரம் !

 குற்றாலம் இங்கிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த ஹோட்டல் மூன்றடுக்கு மாளிகை. வைஃபை, கார் பார்க்கிங், ரூம் சர்வீஸ், ஏசி, ஹாட்வாட்டர் அனைத்தும் உண்டு.

கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

ஹொகனேக்கலில் பரிசலில் செல்லுமுன் சில விபரங்களைத் தெரிந்துகொண்டு செல்வது நல்லது.

பத்துவயதுக்குட்பட்ட குழந்தைகள் பரிசலில் செல்ல அனுமதி இல்லை.


உயிர்காக்கும் சட்டை அணியாமல் பரிசலில் செல்ல அனுமதி இல்லை.  

பரிசல் ஓட்டிகள் பணம் கேட்க மாட்டார்கள். ஆனால் விருப்பப்பட்டால் கொடுக்கலாம்.

தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.

தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும்.

“தாலாட்டும் காற்றே வா.. தலை சாயும் பூவே வா.. “ என்று பாடிக்கொண்டே காரில் வரலாம். :)  ஏன்னா காரைக்குடி எங்க ஊராக்கும். கொள்ளை அழகாக்கும். :)

இந்த தாப்பா கார்டனில் ஒரு நாள் மதிய உணவருந்த சென்றோம்.

மிக அமைதியான சூழலில் தண்ணென்றிருக்கிறது தாப்பா கார்டன். இங்கே தங்குவதற்கும் அலுவலக மீட்டிங் போன்றவை நடத்துவதற்கும் பல்வேறு வசதிகளும் ஹால்களும் உள்ளன என்று சொன்னார்கள். ஏசி நான் ஏசி ரூம்ஸ், பார் வசதி, கார்பார்க்கிங் ( பிரம்மாண்டமான சோலையில் இதற்கென்ன பஞ்சம்  ) அமைதி, இயற்கை எல்லாம் இருக்கிறது.

உணவகம் தனியாக இருக்கிறது. அதன் எதிரேயே ஒரு நீச்சல் குளமும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. உணவகத்தில் அந்தக்கால ஓவியங்கள் அழகூட்டுகின்றன.
எடுத்தவுடன் விநாயகர் கோவில்.

பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

சதுரம், செவ்வகம் இவ்வடிவிலேயே நாம் கட்டிடங்களைக் கண்டு களித்திருக்கிறோம். ஆனால் இங்கே சிலிண்ட்ரிக்கல், எஸ்கிமோஸ் குடில் போல் அரைவட்டக் கோளவடிவில் மற்றும்  ட்ரை ஆங்கிள் ஷேப்பிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. எங்கே என்று கேட்கின்றீர்களா. இங்கேதாங்க இந்தியாவில்தாங்க அதுவும் நம்ம பெங்களூருவில்தாங்க. ஒரு உலா போய் வரலாம் வாங்க.

 பெங்களூருவில் பிடிஎம் லே அவுட்டில் சில காலம் இருந்தோம்.  சில்க் போர்ட், கே ஆர் புரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்போது எடுத்த வித்யாசமான கட்டிடங்களின்  சில புகைப்படங்கள் இங்கே. உலகத்தரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மட்டுமல்ல  வெளிப்புறத் தோற்றத்திலும் இவை மனம் கவரும்படி டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. இரு பில்டிங்குகளுக்கு இடையேயான ஒரு குட்டிப் பாலம் பாருங்கள். இவை ஆச்சன் மார்க்கெட்டுக்குச் செல்லும் வழியில் எடுத்தது.


சில்க் போர்ட் செல்லும் வழியில்

விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

பால் நினைந்தூட்டும் தாயினும்
சாலப்பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே !

-- மாணிக்கவாசகர் திருவிழா


யானைகளின் ஊர்வலம் :) கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகர் கோவில் வெளிப்புறப் பிரகாரம்.

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...