மைசூர் அரண்மனை. மை க்ளிக்ஸ். MYSORE PALACE. MY CLICKS
பெங்களூரில் இருந்தபோது மைசூருக்கு ஒருமுறை சென்று வந்தோம். தசராவின் போது பெருங்கூட்டம் இருக்குமாம். எப்போதுமே போக வாய்க்கவில்லை.
பள்ளிப்பருவத்தில் கேரளா மைசூர் சுற்றுலா சென்று வந்திருந்தாலும் தற்போதும் ஒரு தரம் சென்று பார்த்துவந்தோம். அதே பிருந்தாவன், அதே அரண்மனை, அதே கோட்டை கொத்தளங்கள். செல்ஃபோன் காலமென்பதால் இன்னும் கெடுபிடியும் செக்யூரிட்டி செக்கும் ஜாஸ்தி . அங்கே இருக்கும் லாக்கரில் செல்ஃபோன்களை வைத்துவிட்டுச் செல்லவேண்டும்.
மைசூரில் ஏழு அரண்மனைகள் இருக்கின்றனவாம். அதில் இதுதான் உடையார் வம்சாவளி அரசர்கள் வசிக்கும் அரண்மனை.
பெங்களூரில் தினமும் பாதிப்பேர் மைசூருக்குச் சென்றுவிட்டுத் திரும்புவார்கள். அந்த அளவு மயிலாடுதுறை மைசூர் செல்லும் ட்ரெயின் அதிகாலை 6 மணிக்கே நிரம்பி வழியும்.
மன்னர் குடும்பத்தினரிடம் பக்தி கொண்ட மக்கள். பெங்களூரில் வேலை செய்யும் நிறையப்பேரின் பூர்வீகம் மைசூர்பக்கம்தான். ஏனெனில் மைசூரை விட பெங்களூரில் சாஃப்ட்வேர் தொழிலால் வேலை வாய்ப்புகள் ஜாஸ்தி. பெங்களூரின் பருவநிலையும் எல்லா ஊர் , எல்லா தேச மக்களையும் ஈர்க்கிறது.
தஸராவின் ஆரம்பம்தான். கோட்டையுடன் கூடிய அரண்மனை வெகு அழகு. உடையார்களின் சாம்ராஜ்யம். வாயிலில் கோபாலன் புல்லாங்குழல் இசைக்கிறான். இங்கேயே நமக்கு பிருந்தாவன் எஃபக்ட் கிட்டிவிடுகிறது.
மெயின் வாயில் அடைத்திருக்க சைட் கேட் வழியாகத்தான் செல்லவேண்டும். எண்ட்ரன்ஸ் டிக்கெட் உண்டு. இந்தியர்களுக்கு 40 ரூபாயும் வெளிநாட்டினருக்கு 200 ரூபாயும் நுழைவுக் கட்டணம்!.
பதினாலாம் நூற்றாண்டில் யதுராயா என்ற மன்னர் முதன் முதலில் கட்டியதுதான் இந்த அரண்மனை. அதன் பிறகு பல்வேறு முறை இடித்துக் கட்டப்பட்டுவிட்டது.
பழைய கோட்டையில் ஒருமுறை தீப்பிடித்ததும் 1897 இல் இந்த அரண்மனை புதுப்பித்துக் கட்டப்பட்டது. அதைக் கட்டி முடிக்க பதினைந்து வருடம் ஆச்சு. அன்றைக்கே இதைக் கட்ட 41 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆயிற்றாம். பதினெட்டாம் நூற்றாண்டில். கிட்டத்தட்ட 1930 வரையுமே தொடர்ந்து இதனோட தர்பார் ஹால் எல்லாம் அமைச்சிருக்காங்க.
இந்த அரண்மனைக்குள்ளேயே ஐந்து நிலை கோபுரம் கொண்ட விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. கோபுரச் சிற்பங்களும் மதில் சுவர் சிற்பங்களும் கொள்ளை அழகு.
பிங்க் நிற டோம்களுடன் ( முகலாய பாணி உருண்டை கோபுரங்கள் ) அரண்மனை காட்சி அளிக்குது. அங்கங்கே உப்பரிகைகள் வேற கவர்ச்சிகரமா அமைக்கப்பட்டு இருக்குது. யாரும் இளவரசிகள் தலை உலத்துறாங்களோன்னு கூட ஆவலா பார்த்தேன் . ஆனா அவங்க எல்லாம் இங்கேயிருந்து இடம் பெயர்ந்து வேறு இடத்தில் இருக்காங்க. இப்ப முழுக்க முழுக்க இந்த அரண்மனை சுற்றுலாப்பயணிகளின் காட்சிக்கு மட்டுமே வைக்கப்பட்டிருக்கு.
உள்ளே எதையும் எடுக்க முடியல. ராஜாவின் தங்க சிம்மாசனம்,தங்கச் செங்கோல், மற்ற ஆடை ஆபரணப் பொருட்கள் எல்லாம் கண்ணாடிக்குப் பின்னே காட்சிக்கு இருக்கு. மிக அழகான விதான, சுவர் ஓவியங்கள் அழகூட்டுது. அங்கங்கே ஷாண்ட்லியர் விளக்குகள், மற்ற அலங்கார விளக்குகள் ஒளிருது.
தங்கநிற, பிங்க் நிற பெயிண்டுகளால் உட்புறமும் வெளிப்புறமும் அரண்மனை கம்பீரமா ஜொலிக்குது. அரண்மனைக்கு முன்னே மாபெரும் புல்வெளி & அலங்காரச் செடிகள்.
மக்கள் இயற்கை உபாதையைக் கழிக்க ரெஸ்ட்ரூம்கள் உண்டு. தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் இருக்குது. உணவுப் பொருட்கள் கொண்டு செல்லவோ உண்ணவோ அனுமதி இல்லை. பாலிதீன் பொருட்களுக்குக் கட்டாயம் அனுமதி இல்லை.
இந்த அரண்மனை இந்து, முகல், ராஜ்புத், கோதிக் எனப்படும்பல்வகையாக கட்டிடக் கலைகள் இணைந்து கட்டப்பட்டது. இதை இந்தோ சரசெனிக் வகை கட்டிட அமைப்பு என்கிறார்கள்.
மூன்று வாயில்கள் உண்டு இந்த அரண்மனைக்கு. தெற்கு வாயில் மட்டும் சுற்றுலாப்பயணிகளுக்குத் திறந்து விடப்பட்டிருக்கு. கிழக்கு மற்றும் மேற்கு வாயில்கள் தஸராவின் போது மட்டும் திறக்கப்படும். அரண்மனையைச் சுற்றிலும் எல்லாப் பக்கமும் தோட்டத்தால் சூழப்பட்டிருக்கு. ஒரே பசுமைதான் எங்கும்.
இந்த உடையார் ராஜாக்கள் எல்லாரும் சாமுண்டி பக்தர்கள் என்பதால் இந்த அரண்மனை கூட சாமுண்டி ஹில்ஸ் இருக்கும் திசை பார்த்து அமைக்கப்பட்டிருக்கு.
ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆண்டுவந்த திருமலை ராஜா நோய்வாய்ப்பட அவர் அரசாட்சியை தன் இரண்டாவது மனைவி அலமேலம்மாவிடம் கொடுத்துவிட்டு வைத்தியத்துக்காக முதல் மனைவியுடன் வைத்தீஸ்வரன்கோவில் போகிறார். அப்போது உடையார்கள் அங்கே படையெடுத்து ஸ்ரீரங்கபட்டிணத்தைக் கவர்கிறார்.
அப்ப அலமேலம்மா தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் எடுத்துக்கிட்டு போய்விட அதை எல்லாம் வாங்கிவரச் சொல்லி ராஜா வீரர்களை அனுப்புகிறார். அப்போ தப்பிச்சு ஓடி அலமேலம்மா காவிரியில் விழுந்து இறக்குறாங்க.
அப்போ இந்த தலக்காடு மணல் மேடாகட்டும், உடையார் வம்சத்துக்கு ஆண்வாரிசு இல்லாம போகட்டும்னு சாபம் விட்டுட்டு இறக்குறாங்க, அதன் படி ஆண் வாரிசே பல நூற்றாண்டுகளுக்கு இல்லாம உறவினர்களுக்குள்ள இருக்கும் ஆண்குழந்தைகளைத் தத்தெடுத்து ராஜாவாக்கிட்டு வந்தாங்க . பிறகு யதுவீர்னு ஒரு ராஜா இதுக்குப் பரிகாரமெல்லாம் பண்ணி அலமேலம்மா சிலையை தலக்காட்டுல வச்சப்புறம் அவங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குது.
அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்படுது இந்த அரண்மனை இப்போது. மைசூரை ஆண்ட கிருஷ்ண ராஜ உடையார்தான் வாணி விலாஸ சாகரா அப்பிடிங்கிற அணையைக் கட்டினவர். கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டும் இவர் கட்டியதுதான். மேலும் பொதுமக்களுக்கு இவர் ஆட்சிக்காலத்தில்தான் பல்வேறு வசதிகள் கிடைச்சிருக்கு.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University7 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 5:48
பதிலளிநீக்குஇரு முறை மைசூர் அரண்மனை சென்றுள்ளேன். அரண்மனையின் அழகை ரசித்துக்கொண்டேயிருக்கலாம். குறிப்பாக மின்னொளியில் அதன் அழகு அளப்பரியது. அதனை குடும்பத்தாரோடு பார்த்துள்ளேன்.
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்7 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 9:23
அழகான படங்கள்.....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 4:24
நன்றி ஜம்பு சார்
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!