உதிரிப்பூக்கள்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
லால் பாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லால் பாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 9 ஏப்ரல், 2021
அஸ்டில்ப் , டயாந்தஸஸ் & மாஸஸ் ப்ளூ.
அஸ்டில்ப் , டயாந்தஸஸ் & மாஸஸ் ப்ளூ.
இவைதான் அஸ்டில்ப்ஸ். இதுக்கு பேர் தேடி காடு மேடெல்லாம் அலைஞ்சேன். ஹாஹா. ஆனா இது வயலோரம் வளரும் செடியாம். மேலும் கம்மாக்கரை ( வெளிநாட்டில் ) யை ஒட்டி வளரும் புதர்ச் செடி வகை. இதை புஷஸ், ஷ்ரப்ஸ், நீடில் ஃப்ளவர் என்றெல்லாம் செர்ச் செய்து அதன் பின் ஃபோட்டோவை அப்லோடிக் கண்டுபிடித்தேன். :)
புசு புசுன்னு கொள்ளை அழகுல்ல.கண்கவர் வண்ணங்கள் வேறு.
புசு புசுன்னு கொள்ளை அழகுல்ல.கண்கவர் வண்ணங்கள் வேறு.
வியாழன், 8 ஏப்ரல், 2021
புதன், 7 ஏப்ரல், 2021
ரோஜாப் பூந்தோட்டம் - 2.
ரோஜாப் பூந்தோட்டம் - 2.
ரோஜா என்றதும் நேரு மாமா நினைவுக்கு வந்தால் நீங்கள் 70ஸ் கிட் என்று அர்த்தம். :) இங்கே அநேக நிற ரோஜாக்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
ரோஜா இதழ்களை நீரில் போட்டு அருந்தினாலே சுவாசப் புத்துணர்ச்சியும் வாயில் நறுஞ்சுவையும் கிடைக்கும்.
திருமணங்களில் ஜோதிகா மாலை என்று ஒன்று ரோஜாவின் இதழ்களைக் கொண்டு தயாரிப்பதுதான்.
கோவில் மாலை அல்லது திருமண மாலையில் உதிர்ந்த ரோஜா இதழ்களைக் காயவைத்து ஸ்நானப் பொடி, சீகைக்காய்ப் பொடி ( இதனுடன் போட்டு அரைப்பார்கள் ) தயாரிக்க உபயோகிப்பார்கள்.
அலமாண்டா சைஸ்லில் மஞ்சள் ரோஜாக்கள்.

செவ்வாய், 6 ஏப்ரல், 2021
ரோஜாப் பூந்தோட்டம் - 1
ரோஜாப் பூந்தோட்டம் - 1
முள்ளில்லா ரோஜா,ரோஜாப் பூந்தோட்டம், ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம், ரோஜா ரோஜா, ரோஜா மலரே ராஜகுமாரி.. என்றெல்லாம் பாடல்கள் கேட்டிருப்பீர்கள். தோட்டத்தின் ராஜா என்றைக்கும் ரோஜாதான்.
ரோஜாவைப் பதியமிட்டு வளர்த்தாலே வளரும். செடியின் தண்டை வெட்டி ஊன்றுதல்தான் பதியமிடுதல். இது தொட்டியிலும் வளரும் செடி.பால்கனிச் செடின்னும்சொல்லலாம். வீட்டுக்கு அலுவலகத்துக்கு அழகூட்டக்கூடியது மட்டுமல்ல. நறுமணமும் நிறைந்தது. இதிலிருந்து செண்ட், ஸ்ப்ரே எல்லாம் தயாரிக்கிறாங்க. குல்கந்து, ரோஸ்வாட்டர் ( ரோஸ் மில்க் ) போன்றவையும் தயாரிக்கிறாங்க. இதில் சிறிதளவு விட்டமின் சி யும் இருக்குங்குறது ஆச்சர்யப்படத்தக்க செய்தி. இனி லால் பாகில் ஃப்ளவர் ஷோவில் நான் எடுத்த விதம் விதமான ரோஜாக்கூட்டத்தைப் பார்ப்போம் வாங்க.
வெள்ளை, வெளிர் மஞ்சள், வெளிர் பிங்க் நிற ரோஸ்கள்.

சிவப்பு ரோஜாக்கள்.
சிவப்பு ரோஜாக்கள்.
சிவப்பு ரோஜாக்கள் என்றொரு மர்மப்படம் வந்து அனைவருக்கும் திகிலைக் கிளப்பியது. ரோஸ் நிற ரோஜாக்களை விட சிவப்பு ரோஜாக்களே காதலைச் சொல்லப் பயன்படுகின்றன. பள்ளி கல்லூரி படிக்கும்போது பின்னல் ஜடையில் வலது அல்லது இடது காதோரம் ரோஜாவை வைத்துக் கொள்வது அந்தக்கால ஃபேஷன். ரோஜா வைத்ததும் அந்தப் பெண்ணின் கவர்ச்சி அதிகமாகிவிடும் என்பது கண்கூடாகக் கண்ட உண்மை. பெண்களின் மனதை மென்மையாக்கும் காதலில் ஆழ்த்தும் சக்தி ரோஜாவுக்கு உண்டு. அதைக் காணும் ஆண்களின் மனத்தையும்.
க்ரேக்க காதல் தேவதை அப்ரோடைடின் கண்ணீரும், அவள் காதலன் அடோனிஸின் ரத்தமும் வீழ்ந்த மண்ணில் முளைத்ததுதான் சிவப்பு ரோஜா. அதனால் அது மகத்துவபூர்ணமானது.
க்ரேக்க காதல் தேவதை அப்ரோடைடின் கண்ணீரும், அவள் காதலன் அடோனிஸின் ரத்தமும் வீழ்ந்த மண்ணில் முளைத்ததுதான் சிவப்பு ரோஜா. அதனால் அது மகத்துவபூர்ணமானது.
திங்கள், 5 ஏப்ரல், 2021
லால் பாகில் சில காட்சிகள்.
லால் பாகில் சில காட்சிகள்.
பெங்களூரில் பி டி எம் லே அவுட்டில் இருந்தபோது இருமுறை லால்பாக் சென்று வந்திருக்கிறேன். கண்கவர் காட்சிகளைக் கண்டு களித்திருக்கிறேன். நகரின் நடுவே அமைதிருக்கும் லால் பாகில் ஏரி, குட்டி மலை, தாமரைக் குளம், ரோஜாத்தோட்டம், ஃப்ளோரல் க்ளாக் எனப் பல்வேறு டூரிஸ்ட் அட்ராக்ஷன் உண்டு. அதிலும் அந்த ஏரியில் வாத்துக்கள் நீந்துவது கொள்ளை அழகு.
என்றும் வாடாத ஆர்கிட்.
என்றும் வாடாத ஆர்கிட்.
சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் எத்தனையோ வித் ஆர்க்கிட்டுகள் பார்த்தோம். இங்கே பெங்களூரிலும் கூட. சுமார் 21, 000 இல் இருந்து 26, 000 க்கும் மேற்பட்ட ரகங்களில் ஆர்க்கிட் பூக்கள் இருக்கின்றனவாம்.
ஆமா என்றுமே வாடாத என்ன.. அதெல்லாம் இல்லை. சும்மா தலைப்புக்காகக் கொடுத்தது அது. இதுவும் வாடும். மற்ற பூக்கள் இரண்டு, நான்கு நாட்களில் வாடினால் இது ஒரு வாரத்துக்கு மேல் தாக்குப் பிடிக்கும். அவ்வளவுதான்.
இந்த வெளிர்நீல ஆர்க்கிட்டுகள் என்னவோ மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. திருமணம் மற்றும் உயர்ரக விருந்து விசேடங்களில் ஆர்க்கிட் மலரைத்தான் பரிசளிக்கிறார்கள். வெகு நாளாலும் வாடாதது ஆர்கிட் பூ என்பது விசேஷம். வாசமும் கூட மென்மையாக சுகந்தமாக இருக்கும் என்பது இதன் ஸ்பெஷாலிட்டி.
வெண்ணிற ஆர்கிட்டுகள்.

டேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 3.
டேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 3.
பதினையாயிரம் வெரைட்டி உள்ள டேலியாவில் பெங்களூரு லால் பாகிலேயே நான் நாற்பது ஐம்பது வெரைட்டி பார்த்துவிட்டேன். மலர்க் கண்காட்சியில் எந்தப் பூவை பார்ப்பது எந்தப் பூவை விடுவது என்பதே தெரியவில்லை. குட்டியாக இருக்கும் இதெல்லாமும் டேலியாதான் என்பதை கூகுள் செய்து தெரிந்து கொண்டேன். !
அகிடா, சிம்பொனியா, எல் நினோ, பூஹ் , இரவுப் பட்டாம் பூச்சி, சந்தோஷமான தோழர்களே, ஹேப்பி கிஸ் ஆகியனவும் பூக்கள் வகைகளே. !
காண்டஸா.
அகிடா, சிம்பொனியா, எல் நினோ, பூஹ் , இரவுப் பட்டாம் பூச்சி, சந்தோஷமான தோழர்களே, ஹேப்பி கிஸ் ஆகியனவும் பூக்கள் வகைகளே. !
காண்டஸா.
ஞாயிறு, 4 ஏப்ரல், 2021
டேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 1
டேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 1
டேலியா ஒரு குளிர்பிரதேசப் பூ. தோற்றப் பொலிவுடையது. ஒவ்வொரு பூவும் பிரம்மாண்டமாய் இருக்கும். தோராயமாக 8 முதல் 10 செமீக்கு மேல் இருக்கும். இதில் 15,000 க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றனவாம்.
இது அலங்காரத்துக்காகப் பயன்படுகிறது. லால்பாகில் மலர்க் கண்காட்சிக்குச் சென்றபோது 30 க்கும் மேற்பட்ட டேலியா வகைகளைப் படம் பிடித்தேன். அவை உங்கள் பார்வைக்கு. ஒவ்வொரு நிறப் பூவுக்கும் தனித்தனியாகப் பெயர் இருக்கிறது. முடிந்தவரை கொடுக்க முயல்கிறேன்.
சாண்டா க்ளாஸ்.

செவ்வாய், 16 மார்ச், 2021
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021
புதன், 10 பிப்ரவரி, 2021
வெள்ளி, 5 பிப்ரவரி, 2021
வியாழன், 4 பிப்ரவரி, 2021
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...

-
வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து. திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களா புதூர். ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு திருமதி சுபாஷிணி திருமலை ...
-
ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள். சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியா...