எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 ஏப்ரல், 2021

லால்பாகில் ஒரு சாரல் நடை.

லால்பாகில் ஒரு சாரல் நடை.

லால்பாகில் தினம் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் ஏராளம். வாங்க நாமும் போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வரலாம். :) 





இது ஒரு மாலை நேரம். அதனால் காய்கனி விழாவுக்கும், மலர்க்கண்காட்சிக்கும்  வந்தவங்க ஃபோட்டோ எடுத்துக்கிட்டு இருக்காங்க. :) தூரத்தே மண்ணின் மைந்தராம் உழவரின் சிலையைப் பாருங்க 




போன்ஸாய் செடிகளுக்கென்று ஒரு பகுதி இருந்தது. அதில் பிரம்மாண்ட விருட்சங்கள் எல்லாம் தொட்டியில் குட்டியாய். 







இவை பூமியில் வேரூன்றிய மிகப் பிரம்மாண்ட விருட்சங்கள். 


பல்வேறு வகையான நாட்டு மரங்கள் இங்கே அதிகம். எந்தப் புயலையும் தாக்குப் பிடிக்கும். 


க்ரீன் ஹவுஸ். இதனுள்ளே ரோஜாக்கள் குடும்பம் பாதுகாப்பாய். 




தாவரவியல் மாணாக்கருக்கு இந்தப் பூங்கா ஒரு சொர்க்கம். 









இலைகளில் எத்தனை விதம், பூக்களில், மரத்தண்டுகளில், வேர்களில் என்று பார்த்துப் பார்த்துக் கண்ணே பூத்துப் போனது. 







ஃப்ளவர் பெட். 


இரு நிறக் குரோட்டன்ஸ்.




இது ஏதோ கள்ளிச் செடி வகை. வித்யாசமாய் இருந்தது. 








வெண்கொத்துப் பூக்கள். புங்கை போல இருந்தன.ஆனால் புங்கை இல்லை. 




ஆங்கிலேயர் காலத்து அலங்காரத் தெரு விளக்கு. 


நம்ம மதுரை மீனாக்ஷி கோவில் விருட்சம் வன்னி மரம்தாங்க. 


தத்ரூபமாய் ஒருவர் போர்ட்ரெய்ட்ஸ் வரைந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.  பக்கத்தில் ஒரு குட்டிப் பெண்ணும் வரைந்து தருகிறாள்.




சரி வாங்க நடைப் பயிற்சி முடிஞ்சுது. இந்த ஃபவுண்டன் அருகில் கொஞ்ச நேரம் குளு குளுன்னு சாரல் வாங்கிட்டு வீட்டுக்குப் போவோம்.




டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1 

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4 

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை. 

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி. 

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக். 

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள். 

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

25.  லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்

26.  லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .

27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

28. லால் பாக். பசுமை வளைவுகள்.

29. அழகழகாப் பூத்திருக்கு. ! 

30. மொக்கும் மலரும்.

31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.

32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.

33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.

34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.

35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.

36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

1 கருத்து:

  1. மாதேவி19 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 5:22
    விண்ணப் பூக்களின் காட்சிகள் மனதுக்கு இன்பம்.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்19 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 7:53
    மலர்களே... மலர்களே...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:56
    நன்றி மாதேவி

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...