எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

பெங்களூரு டு பிருந்தாவன். மை க்ளிக்ஸ். BENGALURU TO BRINDHAVAN. MY CLICKS.

பெங்களூரு டு பிருந்தாவன். மை க்ளிக்ஸ். BENGALURU TO BRINDHAVAN. MY CLICKS.

பெங்களூரூ டு பிருந்தாவன். மை க்ளிக்ஸ். 

பெங்களூருவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டினா வழியாக மைசூரை அடைந்தோம். வழியில் பத்மநாப ஸ்வாமி கோவில், சாமுண்டி ஹில்ஸ், திப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில் ஆகியவற்றை இடுகைகளாகவே போட்டிருக்கிறேன்.

எனவே சாலையில் பயணிக்கும்போது பேருந்திலிருந்து எடுத்த புகைப்படங்கள் இங்கே அணிவகுக்கின்றன. பெங்களூருவும் மைசூருவும் செடி கொடி வகைகள் நிறைந்து கானகம் போல் செழிப்பானவை. 

மசூதி, சர்ச், இந்துக் கோவில்கள் என அனைத்துக்குமே பஞ்சமில்லை. நீர் வளத்தாலும் நல்ல செழிப்பமான ஊர்கள். மன்னராட்சி இல்லாவிட்டாலும் மைசூரு உடையார் மன்னர்களின் மேல் மிகுந்த அபிமானம் கொண்ட மக்கள். 



ஸ்ரீரங்கப்பட்டினாவில் ஒரு கடையின் முன்புறம் குழலூதும் கிருஷ்ணன்.


செழித்துக் கிடக்கும் வயல்வெளிகள்.

பஸ் நிறுத்தம்தான். அதன் உள்புறம் காற்றோட்டத்துக்காக ஜாலிகளை அடுக்கியதோடு இல்லாமல் மேல்புறமும் கலைநயத்துடன் கோபுரம் போல் ஜாலிகளை அடுக்கி அழகாக்கி இருக்காங்க. ஆனால் நிறுத்தம் முழுக்க விளம்பரத்தை ஒட்டி அதை அசிங்கமாக்கியும் இருக்காங்க.

தூரத்தில் இருந்து பார்த்தால் கோட்டை போல் இருந்தது. ஆனால் கிட்டே போனதும் பார்த்தால்  ஃபன் கோட்டையாம். ஃபன் ஃபோர்ட்.

கன்னடத்தில் இருப்பதால் தெரில. ஆனால் ஒரு அம்மன் கோவில்.

கர்நாடகாவில் ஓரிடத்தில் சுப்ரமண்ய சுவாமி கோவிலும் புற்றுடன் அமைந்துள்ளது. குக்கே சுப்ரமணியசுவாமி என்கிறார்கள். ஐந்துதலைப் பாம்பினுள் அரங்கன் போல் அமர்ந்திருக்கிறார் சுப்ரமண்யர். !


சர்ச் ஆஃப் அவர் லேடி ஆஃப்  த புவர்.

ரவுண்ட் டாணாவில் லைட்டிங் அட்டகாசம்.

இந்துக் கோவில், அடுத்து சர்ச். அடுத்து மசூதி அடுத்தடுத்துப் பார்வையில் தட்டுப்பட்டன. இவ்வாறு அமைந்துள்ளது வித்யாசம்.

போறபோக்கில் கொஞ்சம் க்ரொட்டன்ஸையும் எடுப்போம். நாலைந்துவித க்ரோட்டன்ஸ் அருகருகே.

இது பிருந்தாவனுக்கு எதிரே உள்ள ரவுண்டாணா. குதிரை ரேஸ் பிரியர்களோ அல்லது மன்னராட்சியின் மிச்சமோ. நடுவில் துள்ளிப் பாயும் குதிரை.?!

சுற்றியும் இரும்புப் பட்டாம்பூச்சிகளும் பூக்களும் பல வண்ணச் சாயங்களில் தோய்ந்து தலையாட்டின.

பாண்டுரங்க விட்டலன் கோவில். எதிரே சந்தனப் பெட்டிகள், பொருட்கள் விற்பனைக்கு.

இதோ வந்துவிட்டது மைசூர் அரண்மனை. !

என்ன ஒரு எழில்.

அரண்மனையின் வெளிப்பகுதியில் குட்டி(டீஸ்)க் குடைகளையும், ஆளுயர பலூன்களையும் விற்றுக் கொண்டிருந்தார்கள் வியாபாரிகள்.

உள்ளே உள்ள அரண்மனைக் கோவில்.

எழுநிலை ராஜ கோபுரத்தில் விநாயகர் நடுநாயகமாய்.

அடுத்து வாங்க அப்பிடியே காத்தாட சாமுண்டி ஹில்ஸுக்குப் போயிட்டு பிருந்தாவனுக்கும் போயிட்டு வருவோம்.

கிருஷ்ணராஜ சாகர் டேம் இருப்பதால் எங்கெங்கும் பசுமைதான்.


கண் நிறைந்த பசுமை.


பச்சைக் கேக் துண்டுகள் போல வயல்கள்.


நடுவில் இளைப்பாற தென்னைக் கூ(ட்)டம்.

இதோ வந்தாச்சு கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு.

கார் பார்க்கிங்கே எத்தனை தடங்கள் , எவ்ளோ பெரிசா இருக்கு பாருங்க !!! டூரிஸ்ட் கூட்டம் அள்ளுமிடம் இது.

டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போவோம்.



டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1 

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4 

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை. 

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி. 

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக். 

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள். 

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

25.  லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்

26.  லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .

27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

28. லால் பாக். பசுமை வளைவுகள்.

29. அழகழகாப் பூத்திருக்கு. ! 

30. மொக்கும் மலரும்.

31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.

32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.

33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.

34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.

35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.

36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

1 கருத்து:


  1. வெங்கட் நாகராஜ்4 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 6:54
    படங்கள் அனைத்தும் சிறப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:37
    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...