மித்தாய், வேஃபர்ஸ், கேக். மை க்ளிக்ஸ். CHOCOLATES, WAFERS, CAKE. MY CLICKS,
மிட்டாய் , கேக், கூல்டிரிங்க்ஸ் , ஐஸ் விரும்பாதவர்கள் இருக்க முடியுமா. அதுவும் ஆரஞ்ச் ஐஸ்.. ஆமா ஆரஞ்ச் ஐஸேதான் அது என்னன்னு பார்க்கலாம் வாங்க. அதுபோக ஐஸ்க்ரீம் கேக்கும்.
முன்ன எல்லாம் ஃப்ளைட்டில் ஏறினவுடனே மிட்டாய் கொடுப்பாங்களாம். சரி போஸ்டுக்குப் போறதுக்கு முன்னாடி இனிப்பா இருக்க ஆளுக்கொண்ணு எடுத்துக்குங்க.
ஜெர்மனி போன்ற நாடுகளில் இதுபோன்ற கேக் கம் பேக்டு உணவுகள் பிரசித்தம். கிஸ்மிஸ் வைத்துச் செய்யப்பட்ட ஒரு ஸ்டஃப்ட் ரோல்.
இதுவும் காயின் சாக்லெட்தான். எடுத்துக்குங்க.
குல்பர்க்காவில் காமத் ஹோட்டலில் சாப்பிட்ட முந்திரிகூட இல்லாத சூஜி.
ஆஹா இதுதாண்டா கேக்கு. ரோல் ரோலா ஸ்ட்ராபெர்ரி க்ரீமோட மேலே சாக்லேட் & செர்ரியோட அசத்தல் கேக். இன்னும் இன்னும்னு சுவைமொட்டுக்கள் கேட்டுதுங்க. ஐஸ்க்ரீம் கேக் மாதிரி ரொம்பவே ருசி.
கராச்சி பேக்கரி சாக்லெட் சிப்ஸ் தூவிய சாக்லெட் குக்கீஸ்.
பிறந்ததிலிருந்தே சாப்பிட்டு வரும் மேரி பிஸ்கட். :)
கிஸ்மிஸ் உள்ளே வைத்த சாக்லெட்டுகள்.
பஞ்சு மிட்டாய் ! லால்பாக் ஸ்பெஷல்.
இது ஏதோ ஒரு பெல்ஜியன் க்ரீம் பிஸ்கட். ஜெர்மனியின் தயாரிப்பு.
பால்பேடா...
ஆரஞ்ச் ப்ரெட் லோஃப். ஜெர்மனிதான்..;)
பொம்மை பிஸ்கட்..
மூன்றுவிதம், வேஃபர்ஸ், பிஸ்கட்ஸ் & சாக்லேட்.
கோவில்பட்டி/ராஜபாளையம் கடலைமிட்டாய் !
பெர்க்.
அஸார்ட்டட். ஹேஸல்நட்ஸ், மஞ்ச் , மில்கிபார், ஓரியோ, ஃபைவ் ஸ்டார்,டெய்ரிமில்க் & டூரிஸ்ட். !
ரோண்டா சாக்லேட்டுகள்.
க்ரஞ்ச் வேஃபர்ஸ்.
பெல்ஜியன்சாக்லேட்ஸ். ஜெர்மனியில் வாங்கியது.
பெக்மான் ஆரஞ்ச்சாஃப்ட் ட்ரிங்க். யூரோப் டூரில் லூசனில் வாங்கி அருந்தியது.
கேக்- வெனிலா க்ரீம் வித் டார்க் சாக்லேட் சாஸ்.
ரோஸ் வெல்வெட் கேக். ராஸ்பெரி க்ரிம் வித் சாக்லேட் பார்.
இது பீடாவுக்குப் பதிலா சாப்பிடும் தாம்பூலம் இப்பிடி லாலிபாப் டைப்பில்.
இதோ வந்திருச்சு ஆரஞ்ச் ஐஸ்க்ரீம். நிஜமாவே ஆரஞ்ச் பழத்துக்குள்ள ஆரஞ்ச் ஐஸ்க்ரீம் ரொப்பி வைச்சிருந்தாங்க ஒரு திருமண வீட்டில்.
ஃபினிஷிங்கில் ஒரு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கோட முடிப்போம். சாக்லேட் கேக்குப்போலவும் இருந்தது இது.
Thenammai Lakshmanan12 அக்டோபர், 2020 ’அன்று’ பிற்பகல் 11:43
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!