எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 மே, 2026

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவுச் சிறுகதைப் போட்டி - 2016.

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவுச் சிறுகதைப் போட்டி - 2016.

வருடாவருடம் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பெயரால் குழந்தைகளுக்காக கோகுலத்தில் நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கு இந்த வருடம் உங்க வீட்ல இருக்க எழுத்துத் திறமையுள்ள சுட்டீஸ் குட்டீஸ்களை எழுதச் சொல்லி அனுப்பி வைங்க. அல்லது அனுப்பச் சொல்லுங்க. ப்ளஸ்டூவரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம்.



வெள்ளி, 29 மே, 2026

மங்கையர் மலரில் ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி - 2016.

மங்கையர் மலரில் ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி - 2016.

மங்கையர் மலரில் ஒரு சிறுகதைப் போட்டி. ஜெயஸ்ரீராஜ் அவர்கள் ஒரு எழுத்தாளர்.அவர் கல்கி , மங்கையர் மலரில் நிறைய எழுதி இருக்கிறார். அவரது நினைவைப் போற்றும் விதத்தில் அவரது கணவர் திரு ராஜகோபாலன் அவர்கள் இப்போட்டியை நடத்துகிறார்கள்.



புதன், 27 மே, 2026

அசடன் மொழியாக்கம் (முன்பதிவு..) என் அம்மாவின் அற்புதமொழிவளத்தில்..:)

அசடன் மொழியாக்கம் (முன்பதிவு..) என் அம்மாவின் அற்புதமொழிவளத்தில்..:)


என் அன்பி்ன் சுசீலாம்மாவின் புத்தகம் குற்றமும் தண்டனையும் குமுதத்தில் பெஸ்ட் செல்லரில் 2008 இல் 9 வது இடத்தைப் பிடித்தது.. அதைப் படித்தபின் டில்லியில் இருந்த அவர்களோடு தொடர்பு கொண்டு பின் நானும் ஒரு வலைத்தளம் .,ஆரம்பித்து ., புத்தகங்கள் என இந்த அளவு வந்துள்ளேன்...

2015 இன் சிறந்த நூல்களுக்கான போட்டிகள் - தமிழ் வளர்ச்சித் துறை.

2015 இன் சிறந்த நூல்களுக்கான போட்டிகள் - தமிழ் வளர்ச்சித் துறை.

தமிழ் வளர்ச்சித்  துறை வெளியிட்டிருக்கும் போட்டியினை எனது முகநூல் நண்பர் திரு குருப்ரசாத் அவர்கள் அனுப்பி இருந்தார்கள்.

2015 இல் நூல் வெளியிட்டவர்களின் கவனத்துக்காக அனுப்பி உள்ளேன். 33 வகைப்பாடுகளின் கீழ் பரிசு வழங்கப்படுகிறது. எழுத்தாளருக்கு 30 ஆயிரமும், பதிப்பகத்தாருக்கு 10 ஆயிரமும் பரிசு.

பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் & விதிமுறைகளை www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

வியாழன், 21 மே, 2026

உங்கள் கருணையே எங்கள் வாழ்வு.

உங்கள் கருணையே எங்கள் வாழ்வு.

மகளிர் தின நல்வாழ்த்துகள் மங்கைஸ், தங்கைஸ் , அம்மாஸ் & பாட்டீஸ் :)
'''இம்மகளிர் தினத்தில் எம் மூதாய் கிழவிகளுக்கு எம்மாலான சமர்ப்பணம்'''
-வரிகளுக்கு நன்றி -அக்கா Thozhar Jeevasundari Balan & மங்கை குழுவினருக்கும் கீதாமதிக்கும் அன்பும் நன்றியும்.

ஆயா அப்பத்தா பாட்டியாயா பேர் முதற்கொண்டு கேட்டுப் பதிவு செய்து வாழ்த்தி இருக்கும் மங்கை குழுவினருக்கு அன்பும் நன்றியும் அணைப்பும்..

செவ்வாய், 19 மே, 2026

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும்.

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும்.

அசடன் நூல் மொழிபெயர்ப்புக்காக எங்கள் தமிழன்னை எம். ஏ. சுசீலாம்மா அவர்களுக்கு கனடா  இலக்கியத் தோட்ட விருதும்,பாஷா பூஷண்  விருதும்,  ஜீ.யூ. போப் விருதும் கிடைத்திருக்கிறது.

எங்கள் அம்மா எஸ் ஆர் எம்  பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராய  (ஜீ. யூ. போப்) விருதுபெற்றமைக்காக  இந்த ஆசிரியர் தினத்தில்  வாழ்த்துச் சொல்லி மகிழ்கிறேன்..

சனி, 16 மே, 2026

திரு ஞானக்கூத்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

திரு ஞானக்கூத்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

எனது பெருமதிப்பிற்குரிய சுசீலாம்மாவின் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த அழைப்பிதழை வெளியிடுவதில் மகிழ்கிறேன். மேலும் விருதுபெற்ற திரு ஞானக்கூத்தனுக்கு வாழ்த்துகள்.

நான் ரசித்த அவருடைய கவிதை ஒன்று.

//// உயர்திரு பாரதியார்

July 30, 2006
சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்.

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்,

வியாழன், 14 மே, 2026

ஈரோடு வாசிக்கிறது. புத்தகங்களை சுவாசிக்கிறது.

ஈரோடு வாசிக்கிறது. புத்தகங்களை சுவாசிக்கிறது.

மஞ்சளுக்கு மகிமை பெற்ற ஈரோடு அதிக புத்தக வாசிப்பாளர்களையும் உடையது. மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட்3ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இது 8ஆம் ஆண்டாக நடைபெறுகிறது.. ஈரோடு வாசிப்பு இயக்கம் 2 ஆண்டு காலமாக இயங்குகிறது...

செவ்வாய், 12 மே, 2026

கயலுடன்..

கயலுடன்..

 கயலுடன் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எடுத்த ஃபோட்டோக்கள் இருக்கு. சுமார்100க்கு மேல் தேறும். அவற்றில் சிலதை மட்டும் இங்கே பகிர்கிறேன் :) 

இது கயல் பிறந்தநாளின் போது எடுத்தது. லாமிக்கிளில்தான். நிறைய பிரபலங்கள் இருக்காங்க. யார்னு சொல்லுங்க பார்ப்போம் :)

திங்கள், 11 மே, 2026

டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.

டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.

டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.



தினமலர் நிறுவனர், அமரர் திரு இராமசுப்பையர் அவர்களின் நினைவாக 30 ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடத்திவரும் தினமலர் குழுமத்துக்கு முதலில் பாராட்டுகள்.

சனி, 9 மே, 2026

புதினம். உலகளாவிய சிறுகதைப் போட்டி.-1,00,000 /- ரூபாய் பரிசு.

 புதினம். உலகளாவிய சிறுகதைப் போட்டி.-1,00,000 /- ரூபாய் பரிசு.

இமேஜாக மாற்றி அனுப்பிய சகோ ராம்ப்ரசாத்துக்கு நன்றி. :)
லண்டனில் இருந்து 20 ஆண்டுகளாக வெளிவரும் புதினம் என்ற இலவச மாதாந்திர தமிழ் சஞ்சிகைக்காக உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாய்மையின் சிறப்புப் பற்றி, “ தாயெனும் கோயில் ”என்னும் தலைப்பில் இன்னுமொரு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.உங்கள் நெஞ்சைத் தொட்ட தாயின் நினைவையும் எழுதி அனுப்புங்க. ஏ -4 ஷீட்டில் 3 முதல் 4 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பனும். ( அமரர் சின்னத்தங்கம் ரத்னம் நினைவாக அவரது புத்திரர் ரத்னம் சிவானந்தன் ( KINGSBURY ) இந்தப் போட்டிக்கான ஆதரவை வழங்குகிறார்.

வியாழன், 7 மே, 2026

அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

அனைத்துலத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான திரு பாரதிசுகுமாரன் ஐயா அவர்களின் முகநூல் பதிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

///// *மகாகவி பாரதி பிறந்த நாளை எழுத்தாளர் தினமாக அறிவிக்க வேண்டும்...*
*அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் தொடக்க விழாவில் கோரிக்கை.*
சென்னை.11, சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது..

ஞாயிறு, 3 மே, 2026

அம்மா இலக்கிய விருது:-

அம்மா இலக்கிய விருது:-

அம்மா இலக்கிய விருது.

வரும் சித்திரைத் திருநாள் பெண்களுக்கு இன்னும் சீரையும் சிறப்பையும் கொண்டு வருகிறது.அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது ( 10 பேருக்கு ) , உலகத் தமிழ்ச்சங்க விருது என முப்பெரும் விருதுகளை அறிவித்து நம் தமிழக முதல்வர் என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஜெயா அம்மா மகளிருக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துகள் அவர்களுக்கும் பரிசு பெறப்போகும் எழுத்துலக ஜாம்பவதிகளுக்கும். :)

சனி, 2 மே, 2026

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப் போட்டி.

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப் போட்டி.

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப்போட்டிக்கான அறிவிப்பை எனது மாமா லயன் வெங்கட் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள்.

அமேஸானில் எனது நூல்கள் 21 - 24.

அமேஸானில் எனது நூல்கள் 21 - 24. ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் https://www.amazon.in/dp/B07SBH9ZK4 எனது இருபத்தி ...