எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
CHENNAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CHENNAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 அக்டோபர், 2024

ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள்.

ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள்.

 சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியான அகாமடேஷன் மற்றும் உணவுகள். அவை பற்றிப் பார்க்கலாம்.


முகப்புத் தோற்றம். 

வியாழன், 1 ஜூலை, 2021

ஹைதை டு சென்னை செண்ட்ரல். மை க்ளிக்ஸ். HYDAI TO CHENNAI CENTRAL. MY CLICKS.

ஹைதை டு சென்னை செண்ட்ரல். மை க்ளிக்ஸ். HYDAI TO CHENNAI CENTRAL. MY CLICKS.

 ஹைதையிலிருந்து சென்னை செண்ட்ரல் வரும்வரை எடுத்திருந்தேன். வழியெங்கும் மலைகளும் ஆறுகளும் வெகு அழகு.  ஆனால் இங்கே ஸ்டேஷன்களை மட்டும் கொடுத்துள்ளேன். 

ஹைதை ஸ்டேஷனை முன்னொரு இடுகையில் போட்டிருப்பதால் இது ட்ரெயின் கிளம்பியபின் எடுத்தது. அங்கே எல்லாமே மஸ்ஜித்தின் டூம் வகை சுவர் அலங்காரம்தான். ! 


காம்பவுண்டில் கூட மசூதியின் அமைப்பில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். இது ஹைதை எங்கள் கோட்டை என்னும் அடையாளத்துக்கோ, அழகுக்கோ.. ? தெரியவில்லை. 

வெள்ளி, 19 மார்ச், 2021

சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

ஒரு ஃபேமிலி கெட்டுகெதர் சரவணபவன்ல நடந்தது. அங்கே எப்பவுமே பாசந்தியும் ரவா கிச்சடியும் சூப்பரா இருக்கும். அவங்கவங்களுக்குப் பிடிச்சத ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம். அதுனால எல்லாமே வந்தது டேபிளுக்கு.

ஸ்டார்ட்டர் :) ஸ்ப்ரிங் ரோல்ஸ் வித் டொமட்டோ கெச்சப்.

எங்க டேபிள்ல எல்லாருக்கும் டொமாட்டோ சூப்.

செவ்வாய், 9 மார்ச், 2021

பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பெல்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது  நியூ பார்க் ஹோட்டல். முதன் முதலாக இங்கேதான் பெண்கள் ரூம் க்ளினிங்குக்கு வருவதைப்  பார்த்தேன். அதனால் அங்கே தங்குவது எனக்கு மகிழ்ச்சியையே தந்தது.
இதன் அருகிலேயே பஸ் ஸ்டாப்பும் இருக்கிறது !.

சனி, 6 மார்ச், 2021

சொர்ரென்டோ கெஸ்ட் ஹவுஸ்.

 சொர்ரென்டோ கெஸ்ட் ஹவுஸ்.

சென்னை அண்ணா நகர் பாலாஜி பவனின் மேல் அமைந்திருக்கும் சொர்ரென்டோ கெஸ்ட் ஹவுஸ் நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்ற அழகான தங்குமிடம். இருவர் தங்க ஒரு நாளைக்கு ரூ 900/- மட்டுமே. ஏதாவது  விசேஷம் என்றால் சென்னை செல்பவர்கள் அங்கே தங்கலாம். காலை மட்டுமே என்றால்  இன்னும் இருவரும் கூட தங்கலாம்.

ட்ரெயினை விட்டு இறங்கியதும் கால்டாக்சியில் அண்ணாநகர் வந்தாச்சு. ரவுண்டானா அருகில் என்கிறார்கள். எம்மாடியோ அண்ணா நகரில் எத்தனை ரவுண்டானா . அத்தனையும் தாண்டி சிந்தாமணி அருகில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது.

சொர்ரென்டோ என்ற பெயர் இடாலியாக  இருந்தாலும் ரூமின் அமைப்பு ஏதோ கோவாவில் அமைந்திருந்த ஹோட்டல்கள் போல் போர்ச்சுக்கல்/ பிரெஞ்ச் பாணி கட்டிடக்கலையை ஞாபகப்படுத்தியது.    
பாலாஜி பவனில் காபி ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட அங்கே தங்க வைத்திருந்த ஹோஸ்ட் குடும்பத்தாரின் உறவினர் மிகப்பெரும் காபி பிளாஸ்க்குடன் கதவைத் தட்டினார். சாப்பிட்டுவிட்டோம் என்று கூறிவிட்டு ஃபங்க்ஷனுக்கு ரெடியானோம்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

நண்பர் ஒருவரின் மகனது திருமண ரிசப்ஷன் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடந்தது. சினிமாக்களில் வருவது போல உள்ளே நுழைந்ததும் ரொம்ப க்ராண்ட் பால் ரூம். அங்கங்கே தீ லாவுவது போன்ற செட்டிங்ஸ் ’கொஞ்சம் நெருப்பு, கொஞ்சம் நிலவு” பாடல் பார்த்தது போன்ற சிலிர்ப்பையும் பரபரப்பையும் ஊட்டியது. சென்னையில் இருக்கும் மிகப் ப்ரமாதமான ஹோட்டல்களில் ஒன்று.
கலைமாமணி ராஜேஷ் கவுரவிக்கப்படுகிறார். வெளிநாட்டு விருந்தினர்கள் கூட்டம் அதிகம். என்னைஅதிகம் கவர்ந்தது பர்ப்பிள் கலரில் அமைக்கப்பட்ட திருமண மேடையும் அந்த ஷாண்ட்லியர்களும் . :).

திங்கள், 15 பிப்ரவரி, 2021

எங்கும் பாரதி எதிலும் பாரதி.

எங்கும் பாரதி எதிலும் பாரதி.

பாரதியின் பெயரால் ஒரு உணவுக்கூடம். மிக அழகான சுத்தமான இடம். பரிமாறப்படும் உணவுகளும் சுவை. பாரதியின் கவிதைகளோடு -- கண்ணுக்கு உணவோடு சிறிது வயிற்றுக்கும் ஈந்து விட்டு சந்தோஷமாக வந்தோம்.

புதன், 27 ஜனவரி, 2021

கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS

கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS.

பல முறை ஹைதை ஏர்போர்ட் சென்றிருந்தாலும் சிலமுறையே சுதாரிப்பாக ஃபோட்டோ எடுத்தேன். ஹைதை ஏர்போர்ட் ஒரு டிலைட். ஓவியங்களும் சிலைகளுமாகக் கலக்கி இருப்பாங்க.

ஆகஸ்ட் 15 ஐ ஒட்டி காந்தி சிலை. 

வெள்ளி, 15 ஜனவரி, 2021

சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

சென்னையில் வசிக்கும் பெரும்பாலோர் கட்டாயம் சென்றிருக்கக்கூடிய இடம் திருவல்லிக்கேணியில் உள்ள ரத்னா கேஃப். இதன் இட்லி சாம்பார் சுவையில் மயங்காத சென்னைவாசிகளே இருக்க முடியாது. திருவல்லிக் கேணி என்றால் பீச், பார்த்த சாரதிப் பெருமாள் , இராகவேந்திரர் கோயில்களோடு ரத்னா கஃபேயிலும் எட்டிப் பார்த்துவிட்டு வரலாமே எனத் தோன்றும். பாரம்பரியப் பெருமை மிக்கது இந்த ஹோட்டல். எனக்கு தெரிஞ்சே 30 வருஷமா இதே இடத்தில் இருக்கு அந்த ஹோட்டல். இங்க இட்லிதான் ராஜான்னா சாம்பார் ராணி. எவ்ளோ வேணாலும் கிடைக்கும்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் வந்திருக்கு. சென்னை வரைக்கும் போயிட்டு அதுல போகாம வருவேனா.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...