எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

நண்பர் ஒருவரின் மகனது திருமண ரிசப்ஷன் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடந்தது. சினிமாக்களில் வருவது போல உள்ளே நுழைந்ததும் ரொம்ப க்ராண்ட் பால் ரூம். அங்கங்கே தீ லாவுவது போன்ற செட்டிங்ஸ் ’கொஞ்சம் நெருப்பு, கொஞ்சம் நிலவு” பாடல் பார்த்தது போன்ற சிலிர்ப்பையும் பரபரப்பையும் ஊட்டியது. சென்னையில் இருக்கும் மிகப் ப்ரமாதமான ஹோட்டல்களில் ஒன்று.
கலைமாமணி ராஜேஷ் கவுரவிக்கப்படுகிறார். வெளிநாட்டு விருந்தினர்கள் கூட்டம் அதிகம். என்னைஅதிகம் கவர்ந்தது பர்ப்பிள் கலரில் அமைக்கப்பட்ட திருமண மேடையும் அந்த ஷாண்ட்லியர்களும் . :).


கலைமாமணி ராஜேஷ் வைத்யாவின் இன்னிசைக் கச்சேரி.
'புதிய பூவிது பூத்தது' என்ற பாடலையும் இன்னபிற 90 களின் பாடல்களையும் அட்டகாசமாக வாசித்தனர். அப்ளாஸ்.
திருமண ஜோடிகளை வாழ்த்தி வந்ததும் டின்னர். பஃபே சிஸ்டம். அடுத்து நம்ம விருப்பங்களை அடுக்க வேண்டியதுதானே ப்ளேட்டுகளில் :)
கண்ணு வெச்சிறாதீங்க. ஒரே ஒரு பட்டர் குல்சா, இடியாப்பம்,ஒரு ஸ்பூன் வெஜ் பிரியாணி, பனீர் பட்டர் மசாலா, அவியல், பேபி ஆலு ஃப்ரை, அப்புறம் கோங்குரா ரைஸ், கல்யாண ரசம், 20 விதமான சாலட்ஸ், மசாலா & பொடி தோசைஸ் இருந்தது. எல்லாத்திலேயும் துளி துளி ட்ரை பண்ணேன். :)
பாவ் பாஜி.
டெஸர்ட்ஸ். பாதாம் அல்வா,அடைப் பிரதமன், ஐஸ்க்ரீம்ஸ் வித் சாஸஸ்.
அப்புறம் அதே மாதிரி ஸ்வீட்டான கப்பிள்ஸ் என்னோட ஃப்ரெண்ட்ஸ் டாக்டர் உதயராஜா & மிஸஸ் உதயை சந்திச்சேன். பக்கத்தில் இருக்கும் நண்பரும் பின்னர் முகநூல் நண்பரானார். செல்வம் அழகப்பன் & கண்ணன், ராணி ஆகியோரையும் மீட் பண்ணேன். நிறைய ரோட்டரி மெம்பர்ஸ். புகைப்படங்களில் மட்டுமே பார்த்தவர்களை அங்கே நேரில் பார்த்தேன். :)
ஒழுங்கான வடிவமைப்பில் நாற்காலிகள். யூனிஃபார்மோடு  அட்டென்ஷனில் :)
ராஜாவும் ராணியும் அமர்ந்த அழகான மேடை. ஃபேரிடேல்ஸில் வருவது போன்ற கற்பனை அரங்கம். ரொம்பவே ஸ்வீட் :)

 A LIVING GIFT FROM THEM :) மண்ணையும் மரத்தையும் நேசிப்பவர்களிடமிருந்து கிடைத்த அழகான திருமணத் தாம்பூலம். கிட்டத்தட்ட 10, 12 வெல்கம் கேர்ள்ஸ் இருந்தார்கள். அவர்கள் தாம்பூலம் கொடுத்த போது இதன் பேர் கேட்டேன்.

“தேன் பூ “ செடி என்றார்கள் :)


வாழ்க வளமுடன் மணமக்கள். 

                *                *               *               *             *

ரூம் டாரிஃப் எல்லாம் தெரில. 8,000 Rs/Day இருக்கலாம்.

நாம ரிஸப்ஷனுக்குத்தானே போனோம். அதுனால தெரில. பட் தாராளமா ஃபைவ் ஸ்டார் என்ன அதுக்கும் மேலே கொடுக்கலாம்.

என்னோட ரேட்டிங்ஸ் *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1.  சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5.  ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6.  கேரளா சோழா & ஹைலாண்ட். 

7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8.  பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10.   குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29.  சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33.  லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்15 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 1:32
    அருமை

    பதிலளிநீக்கு

    Nagendra Bharathi15 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 2:42
    அருமை

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்15 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 6:24
    பிரமாண்டம்...

    பதிலளிநீக்கு

    மலரன்பன்15 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 9:34
    In this hotel, Presidential suite Rs 2.5 lakh per night. It is the highest. The lowest is Rs.7650 per night which is delux city view. Presidential suite is ok as a President of a Country requires that style. Unless we are children, it is difficult to enjoy living in such hotels - not because it is expensive but simply it is impossible to lie on the bed watching the same channels and going down to the restaurant where everything is chemicalised. At the end, you will like to forget the bitter experience. Wherever you go and live in, you should feel relaxed and enjoy the circumstances and such experience comes only in circumstances suitable. But this theory does not apply to business travelers because whereever they are, their minds are on the business going and to come and a hotel is nothing but for stay and their lodging is paid for by others.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam16 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 3:15
    அந்த மாதிரி ஹோட்டலிலும் இடங்கள் காலி இருக்காது ஹு செட் இந்தியா இஸ் அ புவர் கண்ட்ரி

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 7:30
    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி நாகேந்திர பாரதி சகோ

    நன்றி டிடி சகோ

    கருத்துக்கு நன்றி மலரன்பன்

    நன்றி பாலா சார். உண்மைதான்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...