ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
சென்னை தாம்பரத்தில் ரயில்வே ஸ்டேஷனை விட்டு இறங்கியதும் தங்க வசதியான இடங்களில் ஒன்று ராஜகோபால் ரெசிடென்ஸ்.
இங்கே ஒரு விடியல் நேரத்தில் சென்று தங்கி ( நாலு மணிக்கு ட்ரெயின் வந்தது மக்காஸ்) தூங்கி ஆறு மணிக்கு சென்னை மாநகருக்குக் கால்டாக்ஸி புக் பண்ணி வந்தோம்.
ஹோட்டல் படு பர்ஃபெக்ட் , நீட். வெளியே முற்றம் போன்ற அமைப்பு .
கீழ்த்தளத்தில் அமைந்திருந்தது நாங்கள் புக் செய்திருந்த ரூம். முன்பே அடிக்கடி கணவர் வந்து தங்கும் இடம் என்பதால் ரிஸப்ஷனில் புன்னகைத்தார்கள்.
ஏசி ட்ரெயினில் இருந்து இறங்கி வேர்க்க விறு விறுக்க நடந்து ஏசி ரூமுக்குள் புகுந்து கொஞ்சம் ஆசுவாசம். அப்போ கண்ணில் பட்டவைகளை கொஞ்சம் க்ளிக்கினேன்.
வழக்கம்போல் ஏசி, டிவி, ஹாட்வாட்டர், கட்டில், கண்ணாடி, ஸ்க்ரீன்ஸ், பாத்ரூம் எல்லாமே பர்ஃபெக்ட்.
கூடுதலா கவர்ந்தது அந்த ரெட் சாட்டின் அலங்காரத் துணி போர்வை மேல் வளைத்து பெட்டில் பெல்ட் போல அலங்கரிக்கப்பட்டிருந்ததுதான்
பாத்ரூம் & ரூம் மெயிண்டனென்ஸ் படு நீட்.
மிதமாக ஏசியில் கண்ணை அசரும் நேரம் கால்டாக்ஸி ட்ரைவர் அழைக்க உடனே ட்ராலிப் பெட்டிகளை நகர்த்திக் கொண்டு கிளம்பினோம் சென்னையைச் சுத்திப் பார்க்க. :)
இந்த ஹோட்டல் கணவரின் ஃபேவரைட் என்பதால் இதுக்கு தாராளமாவே ஐந்து ஸ்டார் கொடுக்கலாம்.
வாடகை ஒரு நாளைக்கு 1200/ ரூ. ஏசின்னா கூட இருக்கலாம். :)
ஹோட்டல் ரேட்டிங்க் :- ***** ! :)
'பரிவை' சே.குமார்1 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 9:51
பதிலளிநீக்கும்... படங்களைப் பார்க்கும் போதே அருமையா இருக்கு...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 3:04
நன்றி குமார் சகோ
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 3:05
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்4 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 7:32
நல்ல அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 2:49
நன்றி வெங்கட் சகோ