எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 பிப்ரவரி, 2021

கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

சேலத்தில் ஓமலூர் ரோட்டில் அமைந்திருக்கிறது ஹோட்டல் கற்பகம் பேர்ல் இண்டர்நேஷனல்.மிக அருமையான ஃபேமிலி ரூம்.  வாடகை ரொம்ப சீப்தான். ஆயிரம் ரூபாய்தான். நெசம்தான் நம்புங்க. ( மித்த ஹோட்டல்களில் 1200 இல் இருந்து 1750 வரை டாக்ஸ் லொட்டு லொசுக்கு என்று இருவருக்கு 2500 ஆக்கிடுவாங்க. )
ரிஸப்ஷனில் செம்புத் தகட்டில் எம்போஸிங் பிள்ளையார்.
ரூமில் வழக்கம் போல் டிவி, அலமாரி, ( கப்போர்டு )  கண்ணாடி, தண்ணீர், கெட்டில், பெட், சேர், அழகான விளக்குகள், பெயிண்டிங். சுத்தமான பாத்ரூம்  எக்செட்ரா..இதில் ஃப்ரீ வைஃபையும் அடக்கம் !!
நல்ல அடர்த்தியான திரைச்சீலை.

நல்ல நீட்டான உறுத்தாத பெட்டிங். இரு பக்கமும் படிக்க ஏதுவாய் லைட்டுகளும் ஸ்விச்சுகளும் . பக்கத்தில் இண்டர்காம். பெட்டில் டவல், ரிமோட் ( ஏசி, டிவிக்கு )
ஸ்ப்ளிட் ஏசி நாற்புறமும் லைட்ஸ்.
காஃபி டேபிள். :) கல் பதித்து அழகா இருந்தது . ரொம்பப் பிடிச்சிருந்தது.
பெட்டிலிருந்து எடுத்தேன்.
பாத்ரூம்கள் ஹோட்டல்களில் க்ளாமரூம்கள்தான். அதிலும் இங்கே ரொம்ப சுத்தமா இருந்தது. ஹேண்ட் ஷவர், துணி போடும் பிடி, எக்ஸாஸ்ட் ஃபேன், ஹாட் வாட்டர்,
வாஷ் பேஸின், சில்வர் டஸ்ட் பின், கண்ணாடி பர்ஃபெக்ட். நல்ல ஸ்பேசியசா இருந்தது. 
திரைச்சீலையில் ஒரு அற்புதம். டபுள் திரைச்சீலை. இது வெளிச்சம் வேண்டுமென்றால் ப்ளூவை சுருக்கி வெள்ளையை மட்டும் விரித்துக் கொள்ளலாம். பகலிலேயே இருட்டாக்கி தூங்க வேண்டுமென்றால் லைட்ஸ் ஆஃப் & ப்ளூ கர்டன் இழுத்துவிட்டுத் தூங்கலாம். ஜில் ஜில் என்று ஏசியில் கரு கும்மிருட்டு ஜோர்.

ஹோட்டல்களில் என்னைக்கவர்ந்த விஷயங்கள் ஓவியங்கள். மிக அருமையான பூக்கள் எனாமல் பெயிண்டிங்கா இல்ல வாட்டர் பெயிண்டிங்கா தெரில.
அடுத்து இங்கே என்னைக் கவர்ந்த முக்கிய அம்சம் லாக்கர். கப்போர்டில் லாக்கர் இருக்கு. அதுக்கு நம்பர் லாக் இருக்கு. ஒரு ஃபங்க்‌ஷன் என்றால் ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்க வருபவர்களுக்கு இது மிக உதவியாக இருக்கும். குட் ஐடியா.

அலமாரியிலேயே ட்ரெஸ் ஹேங்கரும் கோட்ஸ்டாண்டும் இருக்கு . எக்ஸ்ட்ராவா ஒரு ட்ராவரும் இருக்கு.
சரி வந்த களைப்புக்கு சூடா ஒரு காஃபி குடிப்போம். அப்புறம் தூங்கிட்டு காலையில் ப்ரேக்பாஸ்டுக்கு டயத்துக்கு போயிடணும். இல்லாட்டி சில ஐட்டம் தீர்ந்து போயிடும் :)
மாடியில் காரிடார். எனக்கென்னவோ எல்லா ஹோட்டல்களிலும் இந்த மாதிரி காரிடாரும் இந்த வெளிச்சமும் பிடிக்கும்.
சரி ப்ரேக்ஃபாஸ்டுக்கு வந்தாச்சு. இங்கே எல்லா ஹோட்டலும் போல இட்லி, தோசை, பொங்கல் போக எங்க ஊரு  மசாலா பணியாரமும், பச்சைப் பயறு சுண்டலும் கூட வைச்சிருந்தாங்க. சுண்டல் வெச்சது பிடிச்சிருந்தது ஹெல்தியாச்சே. அதிலும் பச்சைப் பயறுதான் ஒரு தொந்தரவும் இல்லாதது. ஹாஸ்பிட்டல்களில் கூட மாலையில் இந்த சுண்டல்தான் தருவாங்க. அப்புறம் எல்லாரும் சாப்பிட மாலையில் இதுதான் சத்துன்னு ( பெரியவர், சிறியவர், நடுவிலவர் -- நாமதான்  எல்லாருக்கும் உகந்ததுன்னு ) செய்து தர சொல்வாங்க. அத அங்கே பாத்ததும் ஆனந்த் பாஷ்பம் :) அப்புறம் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார்.
கொஞ்சம் ஃபோட்டோ எடுக்க கார்ன்ஃப்ளேக்ஸும் தர்பூசணி ஜூஸும் எடுத்துக்கிட்டேன். ஹிஹி :) எத்தனை கோர்ஸ் டிஃபன். யம்மாடி. இதுதான் வெயிட் போடுது :)அப்புறம் அங்கே ஃப்ரெட்டும், (கேட்டா சுடசுட ஆம்லெட்டும்  ) எல்லாம் இருந்துச்சு அத எல்லாம் எடுத்துக்கலையாக்கும். :)
அட நம்ம ஃபேவரைட் காஃபி இல்லாமலா. ஃபினிஷ்ட். திருப்தியா கிளம்பியாச்சு எங்கேயா தர்மபுரிக்குத்தான் ஔவையையும் அதியனையும் பார்க்கிறேன்னு அன்னிக்கு வாக்கு கொடுத்திருந்தேன். சோ ஒரு கால் டாக்ஸியில் விடு ஜூட்.
அப்புறம் கால் டாக்ஸிக்காக வெயிட் செய்த போது அங்கே ரிசப்ஷனில் இருந்து இந்த கண்ணாடி டோரும் கண்ணாடி டீப்பாயும் அழகா இருந்ததால இரண்டு ஃபோட்டோ சுட்டேன். :)
சரி கிளம்பலாம். தாங்க்ஸ் கற்பகம். பேருக்கேத்தமாதிரி நல்லா இருந்துச்சுன்னாலும் லிஃப்டுக்கு போற வழி குறுகல், & லிஃப்டுமே சின்னம். ( ஹிஹி நம்ம சைஸை குத்தம் சொல்லாதீங்க :)


சரி எல்லாம் சூப்பர்தான் எனவே வழக்கம் போல இந்த ஹோட்டலுக்கு நாலரை ஸ்டார் கொடுக்கலாம். :)


 டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1.  சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5.  ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6.  கேரளா சோழா & ஹைலாண்ட். 

7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8.  பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10.   குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும். 

16. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

17. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து .

18. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும்.

19.  கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்31 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:11
    அருமையாக அழகாக நகைச்சுவை கலந்து எழுதி அசத்தியுள்ளீர்கள். படங்கள் இணைப்புகளும் பிரமாதம். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    Unknown31 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:59
    ohh the rent...damn cheap man..
    so visit to salem is definite
    when i visit india....

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்31 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:02
    தங்கும் விடுதியில் லாக்கர் வசதி
    புதுமைதான் சகோதரியாரே

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 2:09
    நன்றி விஜிகே சார்

    நன்றி சந்தர்

    நன்றி ஜெயக்குமார் சகோ.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 2:09
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...