எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

பிரியாணி மேளா.

பிரியாணி மேளா.

நளாஸ் பிரியாணி
ஈத் ன்னாலே பிரியாணியத்தான் எதிர்பார்ப்போம். விதம் விதமான பிரியாணிய ருசி பார்த்திருப்போம், ஒவ்வொன்றும் ஒருசுவை

ஆம்பூர் பிரியாணி
ஆம்பூர் பிரியாணி, செட்டிநாட்டு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, காஷ்மீரி பிரியாணி, திர்லிக்கேணி பிரியாணி, ராவுத்தர் பிரியாணி , அங்கணன் விலாஸ் பிரியாணி, தலைப்பாகட்டி பிரியாணி, தாகிணி பிரியாணி இன்னும் எத்தனையோ பிரியாணி சாப்பிட்டிருப்போம். இதுல முக்கியமா மட்டன் வைச்சு செய்ற பிரியாணிதான் செம டேஸ்ட்.

ஃபிஷ் பிரியாணி

பெங்களூர்ல நந்தினில ஃபிஷ் பிரியாணி சாப்பிட்டிருக்கோம், நளாஸ் ல ப்ரான் பிரியாணி, இதெல்லாம் சாப்பிட்டாலும் பிரியாணின்னாலே முக்கியமா சிக்கனும் மட்டனும்தான் ருசியான பிரியாணி கொடுக்கும்.
தலப்பாகட்டு பிரியாணி

சீரகச் சம்பா அரிசி, பாசுமதி அரிசி, பொன்னி பச்சரிசி, ( டபிள் டீர், இந்தியா கேட், கோஹினூர்,ஷக்தி போக், ராயல், கஸானா, டுனார் ) எல்லாம் இருந்தாலும் இந்தியா கேட் பாசுமதி ரைஸ்தான் என்னோட சாய்ஸ்.
செட்டிநாட்டு பிரியாணி
புகாரி பிரியாணி

பார்பக்யூ பிரியாணி.

ஹைதராபாதி பிரியாணி.

தாகிணி பிரியாணி.

அங்கண்ண விலாஸ் பிரியாணி.
ஏன் அக்கா கூட நல்ல நல்ல சிக்கன் பிரியாணி செய்வேன். கேரளா சிக்கன் க்ரேவியும் கூட
அதேபோல மட்டன் பிரியாணியும் செய்வேன் முட்டை மசாலாவும் மட்டன் மிளகுக் கறியும். :)

நல்ல பாசுமதி அரிசி , மட்டன்/சிக்கன், இஞ்சி பூண்டு பேஸ்ட், பெரிய வெங்காயம் தக்காளி, புதினா கொத்துமல்லி மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள், உப்பு, பச்சைமிளகாய், எண்ணெய், எலுமிச்சை சாறு, பட்டை இலை, கிராம்பு ஏலக்காய் இது போதும் நல்ல பிரியாணி செய்ய.

தேங்காய்ப் பால் எடுத்து செய்றது,. நெய்யில தாளிக்கிறது, முந்திரிப் பருப்பு போடுறது ரோஸ்வாட்டரோ குங்குமப்பூவோ சேர்க்குறது இதெல்லாம் அவரவர் விருப்பம்.

குக்கர்லேயே அரை மணி நேரத்துல அருமையான பிரியாணி செய்யலாம். சிலர் தனித்தனியா அரைச்சுக் கரைச்சு தம் பிரியாணி செய்வாங்க . அது செம ருசி. ஆனா குக்கர்ல செஞ்சாலும் பக்குவம் வசப்பட்டா அதே போல செய்யலாம். மிக அதிக அளவுன்னா அலுமினிய தேக்ஸாவுல ( ராயப்பேட்டைல செய்வாங்க. :) ) செய்யலாம்.

எனக்கு என்னவோ இந்த காஷ்மீரி, ஹைதராபாதி பிரியாணி அவ்ளவா பிடிக்கிறதில்லை. காஷ்மீரி பிரியாணி இனிச்சு கிடக்கும். ஹைதராபாதி பிரியாணி பாசுமதி சாதத்தை நெய்யில வதக்கி  மட்டன் மசாலாவோ சிக்கன் மசாலாவோ போட்டுப் பிசைஞ்சு சாப்பிடுறமாதிரி இருக்கும்.

ஆனா இந்த மாதிரி பிரியாணிக்காக மக்கள் பிரயாணம் கூட செய்து சாப்பிடுறாங்க ட்ராவல் & லிவிங் சேனல் ல. முக்கியமா மிடில் ஈஸ்ட் ல இருக்க அரேபியன் நாடுகள்ல ரொம்ப மசாலா இல்லாம மட்டனை பெரிய துண்டுகளா பாசுமதி அரிசியோட வேகவைச்சு செய்றாங்க. அது ரொம்ப மஸ்தா இருக்கும்னு சொல்வாங்க. ( ஒரு மாதிரி கொஞ்சம் சாப்பிட்டாலே மதமதப்பு )

நல்ல பிரியாணிக்கு தயிர்ப்பச்சடி சிப்ஸ் போதும். சிக்கன் இல்லாட்டி மட்டன் குருமா கிடைச்சாலும் யதேஷ்டம். ஆனா கத்திரிக்காய் கொத்ஸையோ இல்லாட்டி தால் எலும்புக்குழம்பையோ ஃபங்க்‌ஷன் டைம்ல வைச்சிறணும். அப்புறம் முக்கியமான விஷயம் பிரியாணி சாப்பிட்டுட்டு டீ சாப்பிடணும். அதான் நம்ம பிரியாணி சாப்பிடுற கல்சரோட முக்கிய அம்சம். கொஞ்சம் சூடா டீய ஊத்துனா சாப்பிட்ட பிரியாணியோட கொழுப்பு எல்லாம் கரைஞ்சா மாதிரி ஒரு திருப்தி. ஏவ்.. பிரியாணி சாப்பிடாமலே பேசி பேசி ஏப்பம் வந்திருச்சி. சீக்கிரம் போய் பிரியாணி வருதான்னு பாருங்க.

பாய் ஃப்ரெண்ட்ஸ் இருந்தா பிரியாணி கட்டாயம் கிடைக்கும் அப்பிடின்னு முகநூல்ல போட்டிருந்தாங்க.. அட அப்துல் பாய், அஹமத் பாய், ரஹ்மத் பாய் மாதிரி பாய் சகோதரர்கள் பத்தி சொல்றாங்கங்க. சரி சரி கிடைச்சா ஓசி பிரியாணியை சாப்பிடுங்க. இல்லாட்டி வீட்லயே செஞ்சு சாப்பிடுங்க. ஹாப்பி ரமலான் :)

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்7 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:03
    இதோ சீக்கிரம் போய் பிரியாணி வருதா என்று பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்7 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 10:24
    பிரியாணி.... :)

    ஒரு கட்டு கட்டி இருக்கீங்க போல! நடத்துங்க!

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்7 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 1:12
    ஆஹா பிரியாணி...

    என் மனைவி மிக அருமையாக சமைப்பார்... பிரியாணியில் பல வெரைட்டி செய்வார்...
    நானும் செய்வேன்... இங்கு சாப்பிட மட்டும்... :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 11:55
    பிரியாணி கிடைச்சுதா ஜெயக்குமார் சகோ :)

    ஆமாம் வெங்கட் சகோ

    அஹா குமார் சகோ :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 11:55
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...