எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

கொஞ்சம் அசைவம். முஸ்லீம் மீலா, ஹிந்து மீலா.

 கொஞ்சம் அசைவம். முஸ்லீம் மீலா, ஹிந்து மீலா.

அசைவ உணவுகள் வாரத்துல ஒரு நாள் சமைப்பாங்க வீட்டுல. அதுனால சாப்பிட்டுப் பழகிடுச்சு. இன்னிக்கு என்னன்னா பேலியோ டயட்டுல தோல், கொழுப்போட சமைச்சு சாப்பிட சொல்றாங்க. இதுனால உடல் எடை குறையுதாம்.

மட்டன் சிக்கன் போன்றவற்றை சாதம் அல்லது சப்பாத்தி, இட்லி, தோசை கூட சாப்பிடும்போது எடை கூடிவிடும். மீன் இறால் நண்டு போன்ற கடல் உணவுகள் வெயிட் போடாது. ஆனால் உப்பு அதிகம் உள்ள கருவாடு , உப்புக் கண்டம் போன்றவை தோல் அலர்ஜி, சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றுக்கு ஆகாது என்பார்கள்.

மட்டன், சிக்கன், வஞ்சிர மீன், முட்டை, கருவாடு ( நெத்திலி , நெய்மீன் ), இறால், நண்டுஆகியன சாப்பிட்டு இருந்தாலும் மிச்சதெல்லாம் ( இனி என்ன மிச்சம் இருக்குங்கிறீங்களா.. :) சாப்பிட்டதில்லை.

ஆங். மறந்துட்டேன். சின்ன வயசில் ஒரு முறை புறாக்கறியும் ( மாமாவின் கால் வலிக்காக சமைக்கப்பட்டது ), முயல்கறியும் ( அதன் ரத்தம் முடி வளர்ச்சிக்கு உதவும்னு சொல்லி வளர்க்கப்பட்டது ) சாப்பிட்டதுண்டு. ஆனா இதுவரை பீஃபும், போர்க்கும் (பேகானும்)  சாப்பிட்டதில்லை.

வீட்லயும் சமைச்சாலும் சிலப்போ விருப்போடயும் சிலப்போ ஏனோ ஒரு பிடிக்காத தன்மையோடும் சாப்பிட்டதுண்டு. ( சமைச்சதுனால வந்த எஃபக்டோ என்னவோ :)

ஆனா பசங்க கூட சாப்பிட்டா எல்லா சாப்பாடும் அருமையாதான் இருக்கும். அது நூடுல்ஸோ, பாஸ்டாவோ, ஃபாஸ்ட் ஃபுட்டோ, நான்வெஜ்ஜோ, எல்லாமே ருசிக்கும். தனியா சாப்பிட்டா அமிர்தமே ஆனாலும் அது எல்லாமே வெஷந்தான்.

பசங்க பெரியவங்களாயிட்டாங்க. அதுனால இது எல்லாம் எனக்கு இப்போ விஷமாயிடுச்சு. சரி விஷம்னாலும் வலைத்தளத்துக்கான விஷயம் கிட்டியிருக்கே விட முடியுமா. சமைச்சத எடுத்தது ஹோட்டல்ல சாப்பிட்டது , உறவினர், நண்பர்கள் வீட்ல சாப்பிட்டது எல்லாம் வரிசையா வருது.

என் தம்பி துபாய் அழைச்சிட்டுப் போயிருந்தான். என் பையன் கூடப் போகும்போது எமிரேட்ஸ் ஃப்ளைட்ல நான் முஸ்லீம் மீல் புக் பண்ண சொன்னேன். என் பையன்  எனக்கு முஸ்லீம் மீல் புக் பண்ணிட்டு அவனுக்கு ஃப்ரூட் ப்ளேட்டர் ஆர்டர் பண்ணிட்டான். பையன் ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் ஆயிட்டான்.

எங்க அம்மா அப்பாவுக்கு ( ஏஷியன் வெஜிடேரியன் மீல் ) ஜீரா ரைஸும், டம் ஆலுவும், ஃப்ரூட் & வெஜ் சாலட்டும் , பனீர் டிக்காவும் வந்தது. எனக்கு குட்டி ப்ளேட்ல பிரியாணி வந்து அத ஆனியன் ரெய்தா, சின்ன பீஸ் சிக்கன் லாலிபாப், குட்டியூண்டு லாம்ப் மசாலா, குட்டித் துண்டு ஃபிஷ் கட்லெட், பாயில்ட் எக், வெஜ்சாலட்டோட வெட்டினப்போ ஏக்கமா பார்த்தான்கிறது தனிக்கதை. :) ஹிந்து மீலாவது ஆர்டர் பண்ணி இருக்கலாம். :) அதுல கொஞ்சம் நான்வெஜ்ஜும் இருக்கும்.

அது சரி, நான்வெஜ் எல்லாமே விஷம்னு ஒதுக்கிடாதீங்க. கூட்டமா வந்து சாப்பிட்டுப் போங்க. ஏன்னா எங்க கைப்பக்குவம் அப்பிடி. விஷத்தைக் கூட அமிர்தம் மாதிரி சமைப்போமாக்கும் :)

சிக்கன் லாலி பாப், வெஜ் பிரியாணி, வெங்காயத் தயிர்ப்பச்சடி, ஸ்லைஸ் ஆனியன், லெமன் ரிண்ட்.
நளாஸ் ஆப்பக்கடையில் ஒரு மதிய உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டோம். எக் ஃப்ரைட் ரைஸ், மட்டன் பிரியாணி, போன்லெஸ் சில்லி சிக்கன், ஃபிஷ் ஃப்ரை, ப்ரான் ஃப்ரை, மட்டன் க்ரேவி, சிக்கன் குருமா, பரோட்டா, ரெய்தா , சிக்கன் மஞ்சூரியன்.

வீட்ல சமைச்சது. சாதம் அப்பளம், தயிர், மட்டன் பிரியாணி, சிக்கன் மசாலா, ரசம், எக் மசாலா, தயிர்ப்பச்சடி, சிப்ஸ்( வாங்கினது )
பெங்களூர்ல பசங்க வாங்கித் தந்தது. ஹைதராபாதி கடையில் சிக்கன் லாலிபாப், ஃபுல்கா, ருமாலி ரோட்டி, சிக்கன் மஞ்சூரியன், மட்டர் பனீர்.
ஒரு லீவு நாள் சமையல். பெங்களூர்ல. இண்டக்‌ஷன் அடுப்புல இருந்த பாத்திரத்துல சமைச்சது. அதான் பாத்திரம் எல்லாம் இப்பிடி இருக்கு :)  ட்ரெயின் முட்டைக் குழம்பு ( கேரளா எக்ஸ்ப்ரஸ்ஸில - டெல்லிக்குப் போகும்போது இப்பிடியாப்பட்ட குழம்பு கொடுப்பாங்க. அந்தக் குழம்பு சின்னவனுக்குப் பிடிக்கும் பட் இதுல தேங்காய் அரைச்சி விட்டிருக்கேன். )

அந்த ட்ரெயின் முட்டைக் குழம்பு  சேப்பா பெரிய வெங்காயம் போட்டுத் தாளிச்சு தகதகன்னு இருக்கும். :) சாதம், தயிர், முட்டைக் குழம்பு, கீரை மசியல், முட்டைக் கோஸ் மசாலா, காலிஃப்ளவர் சூப்.
மித்த மீன்ல முள் இருக்கும் ஆனா வஞ்சிரத்துல ஒரே ஒரு முள்தான் இருக்கும். அதுனால அது மட்டும்தான் வாங்குவேன். வாங்கி சாப்பிட்டு முடிக்கிறவரைக்கும் எல்லாரும் முள்ளைப் பார்த்துச் சாப்பிடுறாங்களான்னு கவலைப்பட்டுட்டு இருப்பேன் :) சென்னையில் வஞ்சிரம் சூப்பரா இருக்கும். இது வஞ்சிரம் தலையும் வாலும் போட்டுக்குழம்பு, நடுவுல இருக்கது வறுவல்.
இதுவும் பெங்களூரு ஸ்பெஷல் தந்தூரி ஐட்டம். தங்கிடி கபாப் அல்லது கல்மி கபாப். நல்லா உப்புல ஊறவைச்சா மாதிரி சமைச்சிருப்பாங்க. அதுக்கு கொடுத்திருக்கும் நைஸா அரிஞ்ச பெரிய வெங்காயமும் அந்த புதினா லெமன் தஹி சட்னியும் சூப்பரோ சூப்பர். இத மட்டும் தனியா சாப்பிடணும். நோ சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி, ரோட்டி.
கேரளா போயிட்டு வந்தவுடனே கேரளா ஸ்டைலில் தேங்காய் எண்ணெயில் சிக்கன் செய்தேன். சின்ன வெங்காயம் அரை கிலோ உரிச்சு மிளகு சீரகம் போட்டு அரைச்சு சிக்கனை வேக விட்டு செமயா இருந்தது. அதோட கூட மட்டன் பிரியாணி, சாதம் , அப்பளம், ரசம், மாதுளை போட்ட தயிர்ப்பச்சடி, அவிச்ச முட்டை, தக்காளித் தொக்கு
காரைக்குடி சுபலெக்ஷ்மியில் வாங்கின சிக்கன் மஞ்சூரியன். செம காரம். பாக்கும்போதே கண்ணெல்லாம் எரியுதுல்ல :)
கோடைகாலத்துல ஒரு நாள் மீந்த சாதத்துல தயிர், பொடியா அரிஞ்ச சின்ன வெங்காயம் போட்டுப் பிசைந்து வைச்சிருக்கேன். முருங்கை சாம்பார், மரக்கறிக்காய் தோசை, உப்புக் கண்டம், பொடியா அரிஞ்ச வெங்காயம் வைச்சு சாப்பிட்டுப் பாருங்க. செம தூக்கம் வரும். :)
பெரிய வஞ்சிரம் வறுவல் . இன்னொரு லீவு நாள்ல செய்தது. கார சாரம்.
சிக்கன் பிரியாணி & சிக்கன் துகடா. பொரிக்க ஆரம்பிச்சதும் எடுத்தது.  இன்னும் வரும்.
பெங்களூருவில் பிடிஎம் லேஅவுட்டில் லோகல் கடை ஒன்றுக்குஃபோனில் ஆர்டர் செய்து வாங்கியது. சுக்கா ரொட்டி, சிக்கன் பிரியாணி, மட்டன் கிரேவி. குருமா/சால்னா, ஆனியன் ரெய்தா.
பசங்க ஃப்ரெண்ட் வீட்டு வேலைக்காரம்மா சமைச்சுக் கொடுத்துவிட்டது. சிக்கன் பிரியாணியும் குலோப்ஜாமூனும் :)

ஆம்பூர் தம் பிரியாணி, இது முஸ்லீம்ஸ் செய்யும் பிரியாணி, புதினா கொத்துமல்லி எல்லாம் கச முசன்னு இல்லாம ஜம்முன்னு சிவப்பா இருக்கும். பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட்,  & பிரியாணி மசாலா பொடியோட, தக்காளியும், லெமன் ஜூஸும்தான். தயிர்ப்பச்சடியும், தால் கத்திரிக்காயும்.
கீமா ரைஸ். ஹைதராபாதி பிரியாணி/பாரடைஸ் பிரியாணி. டைப்ல செஞ்சது. அவங்க தண்ணியா குருமாவும் மோர்ல வெங்காயமும் போட்டு சாப்பிடுறாங்க. !
கேரளா பாலோடு/பொன்முடி/திருவனந்தபுரம் போயிருந்தப்ப ஃப்ரெண்டோட மாமியார் வீட்டிலிருந்து இந்த சிக்கன் மசாலா, சிக்கன் க்ரேவி, கப்பக்கிழங்கு மசியல், கேரளா ரைஸ் செய்து கொடுத்தாங்க.
இந்த சிக்கன் போதுமா. ஹைதராபாத் ஹர்ஷா டொயோடொ எதிரில் இருக்கும் ஃபேமஸான சித்திக் கபாப் கடை. சுட சுட கோழிகள் கண்ணாடிக்குள்ள சிவப்புத் தீயோட சுத்திக்கிட்டே இருக்கும். கடையின் இரு பக்கமும் கூட்டம் அள்ளும் . கல்மி கபாப், சிக்கன் ஃப்ரை, கோங்குரா சிக்கன் க்ரேவி, ஆனியன், குக்கும்பர் ( வெள்ளரி, வெங்காயம் ).
சென்னையில் வாங்கிய ஃப்ரைட் ரைஸ், ஃப்ரைட் சிக்கன், ஃப்ரைட் எக் காம்போ.
புகாரி பிரியாணி, முட்டை, சிக்கன், ரெய்தா.

ஹலீம். இது ஸ்பெஷல் ஹைதராபாதி மட்டன் ஹலீம். ரம்ஜான் நோன்பு டைமில் வாங்கியது. ரெம்ப ஹெவி & டேஸ்டி.
வயக்கம்போல வூட்ல சமைச்சதுதான். சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாயிட்டேன்ன்னு இப்பல்லாம் இது எல்லாம் வாங்குறதோ சமைக்கிறதோ இல்ல. ஒன்லி ஃபோட்டோ மட்டும்தான் பாக்குறேன். ஆனா எப்பிடித்தான் குண்டாகுறேன்னே தெரில. ஹிஹி.
சரி வெயிட் போடாதுன்னா நீங்களும் வெட்டிட்டு நடையக் கட்டுங்க. நைட் ஆயிடுச்சு, இத எல்லாம் பாத்து பாத்து ஜொள்ளு விட்டுட்டு ஹ்ம்ம் நானும் குட் நைட் சொல்லிக்கிறேன் . நாளை புது இடுகையுடன் பார்ப்போம். :) 

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்9 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:11

    பிடித்தவர்கள் சாப்பிடட்டும்.... எஞ்சாய்! :)
    பதிலளிநீக்கு
    Thulasidharan V Thillaiakathu9 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:58

    துளசி : நாவில் நீர் !!!

    கீதா : சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம்!! மீ வெஜ்!! ஹிஹிஹி ஸோ வெஜ் ஐயிட்டம் மட்டும் எடுத்துக்கறேன் ஓகே??!!!
    பதிலளிநீக்கு
    G.M Balasubramaniam9 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:12

    இந்த நான் வெஜ்ஜில் என்னதான் சுவையோ என்று முன்பொரு முறை சாப்பிட்டுப்பார்த்தேன் ஏனோ பிடிக்கவில்லை. ஆனால் என் மக்கள் நான் வெஜ் சாப்பிடுவார்கள் என் மகன் சீனா போயிருந்தபோது அவர்கள் நடப்பன ஊர்வன பறப்பன அனைத்தையும் சாப்பிடுகிறார்கள் என்றான்
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan18 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:35

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ ஓகே கீத்ஸ்

    நன்றி பாலா சார். ஆம் சிலருக்குப் பிடிக்கும். :)
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan18 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:35

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
    பதிலளிநீக்கு
    வை.கோபாலகிருஷ்ணன்21 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 1:30

    முழுப்பட்டினி இருக்க வேண்டிய வைகுண்ட ஏகாதஸியும் அதுவுமா இன்று (08.01.2017) இதுபோன்ற N V Items பற்றியதொரு பதிவு தேவையா? :(
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:24

    மன்னிச்சூ விஜிகே சார். கைக்குக் கிடைத்ததை ப்லாகில் போட்டுட்டேன். அதான் அதுக்குப் பிறகு மூன்று அரங்கன் இடுகைகள் போட்டு ப்ராயச்சித்தம் தேடிக்கிட்டேன் :)
    பதிலளிநீக்கு
    வை.கோபாலகிருஷ்ணன்31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:26

    Thenammai Lakshmanan சொன்னது…
    மன்னிச்சூ விஜிகே சார். கைக்குக் கிடைத்ததை ப்லாகில் போட்டுட்டேன். அதான் அதுக்குப் பிறகு மூன்று அரங்கன் இடுகைகள் போட்டு ப்ராயச்சித்தம் தேடிக்கிட்டேன் :)//

    :))))))) இதெல்லாம் தாங்கள் சாப்பிடுவதோடு மட்டும் இருக்கட்டும். இங்கு பதிவினில் தயவுசெய்து கொண்டுவர வேண்டாம், ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)))))))

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...