எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 பிப்ரவரி, 2021

நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.

நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.

ஒரு வாரம் பொள்ளாச்சி நிவேதா இன்னில் தங்கும் சந்தர்ப்பம் அமைந்தது. இது காந்தி ரோட்டில் இருக்கு. இதன் கீழேயே நமக்கு மிகவும் பிடித்த கௌரி கிருஷ்ணா ஹோட்டல். இந்தக் காப்பிக்காகவே இங்கேயிருந்து கிளம்பவே பிடிக்கலை.

ரூம் வாடகை இருவருக்கு  ரூ990/- தான். அதுனால இங்கே காலையில் பஃபே எல்லாம் கிடையாது. ஆனால் கீழே தோசைரோஸ்டும். அதன் பக்கவாட்டில் இருக்கும் குட்டி ஹோட்டலில் இருந்து தயிர்வடையும் ராகி வடையும் காஃபியும் ஆஹா ஓஹோதான். இங்கே உள்ள உணவுகள் பத்தி தனி இடுகை போடுகிறேன் பின்பொருமுறை.

சில தினங்களைக் கறுப்பு தினங்கள் என்பார்கள். இங்கே நிவேதா இன்னில் எல்லாமே வண்ணமயமான தினங்கள்தான். ஒரு வாரம் இருப்பதால் அங்கே டாப் ஸ்லிப், திருமூர்த்திமலை எல்லாம் போகலாம் என்றிருந்தோம். நவம்பர் எட்டு அன்று இரவு தொலைக்காட்சியில் பிரதமர் தோன்றி ஐநூறு ஆயிரம் செல்லாது என்கிறார். ஒரே அல்லோல கல்லோலம்தான். அன்று நிறமிழந்த தினமாக இருந்தது.

சுற்றிலும் இருக்கும் ஹோட்டல்கள் , கடைகள், மனிதர்கள் எல்லாம் ஒரே பரபரப்பு.  இருக்கும் ஐநூறு ஆயிரத்தை மாற்ற முடியாமல் சாப்பாடு அத்யாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமம்.ஆனால் நாம் யாரு சிறுவாட்டில் கில்லியாச்சே.

நிவேதா இன்ன் ஹோட்டலில் ரெண்ட் எல்லாம் கார்டு பரிவர்த்தனை. அதனால் பிரச்சனை இல்லை. ஆனால் புவா ??. ரங்க்ஸிடம் ஓரளவு இருந்தது. ஆனால் அவர் நண்பர் ஒருவருக்கு அத்யாவசியத் தேவை . அவரிடம் ஐநூறு ஆயிரம் தவிர வேறில்லை. என்னிடம் இருப்பதை சொல்லியாச்சு. உடனே அவசரத்துக்கு  உதவணும் என்று சொல்லி இருந்ததில் கணிசமான நூறை ( நமக்கு வேணுமே என்று மொணமொணத்துக் கொண்டே , இன்னொரு பர்சிலும் சேமித்து வைத்திருந்தேன் :)  ) கொஞ்சம் எடுத்துக் கொடுத்தேன்.

சொல்லப் போனா அந்த ஒரு வாரமும் நம் வாழ்க்கையில் வாங்கிய வைத்திருக்கும் தங்கம் வெள்ளி வைரம் கூடப் பொருட்டில்லை கொடுத்திருவோம் போல ஆனா நூறு, ஐம்பது ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிய விதம் இருக்கிறதே அப்பப்பா. நம்மை நமக்கு இனம் காண்பித்த நிகழ்ச்சி.

அது போக திருடன் வந்தா வால்யுபிள் எல்லாம் திருடாம ரூபாய் நோட்டைத் திருடிக்குவானோ என்று அதை பர்ஸுக்குள் போட்டு இன்னொரு பர்ஸுக்குள் போட்டு பேகில் மடித்து சூட்கேஸில் வைத்து நம்பர் லாக் போட்டு ஹிஹி இதெல்லாம் நாம்தான் செய்தது. ரூபாய் முக்கியமில்லா மக்கா. அப்பத்தானே அடுத்த வேளை புவா வாங்க முடியும். :) கீழே உணவு ஹோட்டல்காரர்கள் கார்டுக்கும் ஒப்புக்கல.

அதன் பின் நாம சுகமா சௌக்கியமா ஊர் வந்து சேர்ந்தோம். முடிந்தவரை தேவைப்பட்டவருக்குக் கொடுக்கவும் செய்தோம். ஆனா மனதுக்குள்ள நாம் எப்பிடிப்பட்ட ஆளுன்னா நமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்பது புரிந்துவிட்டது.  :) :) :)

இப்போ நிவேதா இன்ன் பத்தி.

அங்கே ரிஸப்ஷனில் வரவேற்கும் விநாயகர். கெபி போன்ற அமைப்பு.
மிக விசாலமான அறைகள். முதலில் தங்கின ரூம் கீழே இருந்த கிச்சனுக்கு அருகில். அதனால் சத்தம் அதிகம் கேட்டது.


இண்டர்காம், டீப்பாய், சேர். இங்கே தினம் ரூம் க்ளினிங் உண்டு. ரூம் சர்வீஸ் ஆட்களை நாம் ஃப்ளாஸ்கில் காஃபி வாங்க மட்டும்தான் அழைப்பது.
டிவி.
பாத்ரூம் .
நீட் & க்ளீன். எல்லா ஹோட்டல்களிலும் ஒரு குறை உண்டு எனக்கு. ஒரு மூணு நாலு பக்கெட் தண்ணீரை வீணாக்கினால்தான் வெந்நீர் வரும். அது ஏன் என்று தெரில. தண்ணீர்க் கஷ்டம் இருக்கும் நாளில் இதை எப்படியாவது சரி செய்யலாமே என்பது என் சஜஷன்.
அழகான கபோர்ட்ஸ் வித் ஹேங்கர்ஸ் & ட்ரெஸ்ஸிங் டேபிள் & கண்ணாடி.
லாம்ப்.
அழகான வேலைப்பாடு உள்ள ஃபால்ஸ் சீலிங் வித் ஃபேன்.
இன்னும் சில ஹோட்டல் ரிவியூ இருக்கு.பேர் மறந்துரும்னு பெட்ஸ்ப்ரெட்டை எடுத்து வைச்சனாக்கும். :)
இது இன்னொரு ரூம். ஏசி ரூம் என்பதால் கம்பிளி அவசியம். நன்றாகவும் இருந்தது. தினம் இதை விரித்து யோகாவும் செய்தேன் :)
a
எனக்குப் பிடித்த நீண்ட காரிடார்

ரங்க்ஸ் நிற்பது ரிஸப்ஷன் சைடு. மிக அழகான எண்ட்ரன்ஸ். இரண்டாவது மாடியில். இருந்தோம். எதிரே தெரிவது பிள்ளையார்.
 அங்கே இருந்தபோது நிறையப் படித்தேன். நிறைய எழுதினேன். ஒரு வாரம் ஓடினது தெரில. ரொம்ப ஹோம்லியான ஹோட்டல்தான் !

என்னோட ரேட்டிங்ஸ். நாலரை. *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1.  சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5.  ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6.  கேரளா சோழா & ஹைலாண்ட். 

7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8.  பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10.   குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29.  சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33.  லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்2 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 6:14
    நல்ல அறிமுகம். பொள்ளாச்சி சென்றால் இங்கே தங்கலாம்....

    பதிலளிநீக்கு

    ADMIN3 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 4:42
    அருமை. நல்ல விமர்சனம். பொள்ளாச்சி சென்றால் இங்கேதான் தங்க வேண்டும் என்ற முடிவு எடுத்திருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University3 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 8:15
    பயணத்தின் போது உதவியாக இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 4:30
    நன்றி வெங்கட்சகோ

    நன்றி தங்கம் பழனி சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu6 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 6:03
    அட! பொள்ளாச்சியில் உள்ள ஒரு அழகான ஹோட்டல் அறிமுகம். நன்றாக இருக்கு சீப்பும் கூட...சரி சீக்கிரம் உணவு வகைகள் பத்தி போடுங்க...இல்ல போட்டுட்டீங்களா? நாங்க லேட்டோ...


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 11:44
    உணவு வகை பத்தி இன்னும் போடலை சகோ :)

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...