எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

 மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

ஆரோக்ய உணவுகள் என்ற தலைப்பில் தொகுத்து அளித்திருக்கிறேன். நம் நாட்டு பாரம்பரிய மாலை உணவுகளான அவிச்ச வேர்க்கடலை, பட்டாணி, கொண்டக்கடலை சுண்டல், பனங்கிழங்கு, சோளக்கருது, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கொழுக்கட்டை, ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ், இவையே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மாலை உணவுகளாகும்.

ஃபாஸ்ட் ஃபுட்டை எல்லாம் ஒதுக்கிட்டு இந்தப் பாரம்பரிய உணவை குழந்தைகளுக்குப் பழக்குங்க. அப்புறம் ஃபோலிக் ஆசிட் குறைபாடு, கண் பார்வைக்குறைபாடு, சத்துக்குறைச்சல் , ரத்தசோகை, எல்லாம் வரவே வராது.

இரும்புச்சத்து, புரதம், விட்டமின்ஸ், மினரல்ஸ்,துத்தநாகம், மக்னீஷியம் நிரம்பிய உணவுகள் இவை.

பிள்ளையார் பட்டியில் ஒரு சுண்டல் கடை. அந்தப் பல்லுப்பல்லா சீவின மாங்காய் நெம்ப அழகா இருக்கில்ல. :) சுண்டலுக்கு டேஸ்டே கீத்துத் தேங்காயிலும் பல்லு மாங்காயிலும்தான் ஒளிஞ்சிருக்கு. பட் ரங்ஸுக்கு வெங்காயம் கேரட் தக்காளி எலுமிச்சை கொத்துமல்லிக் கலவைதான் பிடிக்கும். :)
அவிச்ச பனங்கிழங்கு, இதுவும் பிள்ளையார்பட்டிதான்.
துபாய்லேருந்து தம்பி வாங்கி வந்த பேரீச்சை, பிஸ்தா ( இந்த பிங்க் கலர் சால்ட் கோட்டட் பிஸ்தா ரொம்ப ருசி ) . பேரீச்சையும் பிஸ்தாவும் 4 போதும். அதிகம் வேணாம்.

டெல்லி ஸ்பெஷல் இந்த சுட்ட சோளக்கருது. இத தணல்ல சுட்டுட்டு காலா நமக்கை எலுமிச்சைல தொட்டு உரசிக் கொடுப்பாங்க. நான் வீட்டுல கேஸ் அடுப்புல சுட்டுட்டு, இருக்க உப்ப ஒரசி வைச்சிருக்கேன் . :) இதுக்கு ஓரளவு பிஞ்சு சோளம் நல்லா இருக்கும்.

உப்புப் போட்டு அவிச்ச சோளக்கருது.
கல்கி பவளவிழாவுக்குப் போனபோது கொடுத்தாங்க ட்ரைஃப்ரூட்ஸ் & நட்ஸ் கிஃப்ட் பாக்ஸ்.
தரங்கம்பாடியா இருகலாம். மறந்திருச்சு. ஆனா அந்த அரை நெல்லிக்காய் மறக்கல. புளிப்பா உப்பொரசி பச்சைமிளகாய்த்தண்ணீர்ல ஊறப்போட்டது செமயா இருக்கும் :)
ஷெல்டு பிஸ்தாச்சியோஸ். ரொம்பப் பிடிச்சது. இதுவும் ஒரு நாளைக்கு 4 போதும். ஆசைப்பட்டு அதிகம் தின்னக்கூடாது :)
முந்திரி பாதாம் வைச்ச பேரீச்சை. அமீரக இறக்குமதி. இதுவும் இரண்டிலிருந்து 4 போதும்.
நெய்யில் வறுத்த மிளகு முந்திரி. ஐஞ்சாறு போதும் போனா போகட்டும்னு (எனக்கு) பத்துப் பன்னிரெண்டு அனுமதிச்சிட்டேன் :)
ஹொகனேக்கல் போயிருந்தபோது ஃப்ரூட் ப்ளேட்டர். நிறைவா இருந்தது. இங்கெல்லாம் கொஞ்சம் யோசிச்சுத்தான் சாப்பிடணும். வீட்டிலேயே செய்வது பெட்டர். ஏதோ ஆசைக்கு ஒருக்கா அரைக்கா சாப்பிடலாம். ஆனா அமிபயாசிஸ், வயிற்றோட்டம் பயமாவே இருக்கும். கையை வாஷ் பண்ணிட்டு கட் பண்றாங்களோ என்னவோ. நகம் எல்லாம் இல்லாம சுத்தமா இருக்குமான்னுட்டு.
ஹொகனேக்கல் அருவிக்கு போகும் வழிதான். தர்ப்பூஸ், பப்பாளி, பைனாப்பிள், மாங்கோ கப்ஸ்.
குளிருக்கும் மழைக்கும் இதமா கொஞ்சம் கரகரன்னு மசாலா பொரி.
இங்கே பைனாப்பிள், தர்ப்பூஸ், மாங்காயோட கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள் போட்ட அரி நெல்லிக்காயும்.
வீட்டில் செய்த வெல்லக் கொழுக்கட்டை. கொஞ்சம் சீமை இலந்தைப்பழத்தோடயும் அவிச்ச பனங்கிழங்கோடயும் சாப்பிடுங்க. கிருஷாந்திப் பூவும் விளக்கும் அழகுக்காக வச்சிருக்கனாக்கும். :)
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS. 

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்17 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:42

    உப்புப் போட்டு அவிச்ச சோளக்கருது மிகவும் பிடிக்கும்...
    பதிலளிநீக்கு
    விஸ்வநாத்17 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:02

    எல்லாமே அருமை.
    பதிலளிநீக்கு
    ஸ்ரீராம்.17 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:53

    பனங்கிழங்கு நல்லது என்றாலும் எனக்குப் பிடிப்பதில்லை. மாங்காய் புளிக்கும் என்று சாப்பிடுவதில்லை! மற்றவை ஓகே.
    பதிலளிநீக்கு
    G.M Balasubramaniam17 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:08

    இப்போதெல்லாம் உணவு சம்பந்தப்பட்ட படங்களும் பதிவுகளும் அதிகமாகக் காண்கிறதே
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 10:54

    அஹா டிடி சகோ

    நன்றி விஸ்வநாத சார்

    ஆம். மாங்காய் புளிக்கும்தான். பல் கூசும். கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

    லாப்டாப்பில் இருப்பதை க்ளியர் செய்ய இருந்த அனைத்தையும் பிரித்துப்பிரித்து இடுகையாகப் போட்டு விட்டேன் பாலா சார். !
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 10:55

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...