குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
பேரீச்சை எப்பவுமே சத்தான ஒன்று. தினம் ரெண்டு கொடுக்கலாம்.
இது இரண்டும் ஃப்ரெஷ் டேட்ஸ். துபாய் பேரீச்சைகள்.
அவிச்ச சோளக்கருது. பல்லுக்கு உறுதி. பெஸ்ட் அப்படைஸர்.
பனங்கிழங்கு. பொங்கலும்போதுதான் கிடைக்கும் அவிச்சு தோலுரிச்சி சாப்பிடணும். லேசா நார் வரும். நடுவுல இருக்கும் தண்டு நுனி இனிப்பா இருக்கும். இதெல்லாம்தான் அப்போ சாயங்காலம் வீட்டுக்கு வந்தா தருவாங்க. அவிச்ச வேர்க்கடலை, அவிச்ச சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதெல்லாம் சீசன்படி இருக்கும்.
ப்ரவுன் மொச்சை சுண்டல்
உப்பு போட்டு வறுத்த பிஸ்தா.
திரும்பவும் பேரீச்சைதான். அரேபிய நாடுகளில் இருந்து விதம் விதமான பேரீச்சைகள் வந்தாலும் இந்தக் கறுப்புப் பேரீச்சை செம ருசி.
கொள்ளு மசால். ரெண்டு மூணு சின்ன வெங்காயம், ஒரு பூண்டு, ஒரு வரமிளகாய், கால் டீஸ்பூன் உப்பை மிக்ஸில சுத்திட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெயில கடுகு தாளிச்சு அதில அரைச்சத போட்டு உடனே வெந்த கொள்ளையும் போட்டு அடுப்பை அணைச்சிறணும். வெங்காயம் வேகக்கூடாது. பச்சை வாசனையா இருந்தா நல்லா இருக்கும்.
கடலை காரச் சாட். துருவின காரட், கொத்துமல்லி வெங்காயம் எல்லாத்தையும் வறுத்துத் தோல் எடுத்த வேர்க்கடலைல போட்டு சாப்பிட வேண்டியதுதான். வேணும்னா சாட் மசாலா போட்டுக்கலாம்.
பாசிப்பயறு சுண்டல். ( தேங்காய் அதிகமாயிருச்சோ )
வெல்ல அவல் ( தேங்காய், ஏலக்காயும் போட்டிருக்கேன்.)
சிவப்பரிசி பொரியரிசி மாவு./வேங்கரிசி மாவு.
சிவப்பு அரிசியை உலையில் போட்டு ஒரு கொதி வந்ததும் வடித்துக் காயவைச்சு பொரியாப் பொரிச்சு அப்புறம் பவுடர் பண்ணி சீனி நெய் போட்டோ, சீனி தேங்காய் எண்ணெய் போட்டோ அல்லது தண்ணீல சீனி போட்டுப் பிசைஞ்சோ கொடுக்கலாம். இது இரும்புச் சத்து.
பேரீச்சையிலும் இரும்புச் சத்து இருக்கு. பயறு வகைகள்ல ப்ரோட்டீன் இருக்கு. மலைப் பழம்./சிறுமலைப்பழத்துல இரும்புச் சத்து இருக்கு. ( இதுல ஃபோட்டோ போடல )
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36. மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். MY CLICKS
Thenammai Lakshmanan19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:52
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!