ஷார்ஜாவின் கார்னிஷ் – ஒரு இளமாலை நடைப்பயிற்சி
ஷார்ஜாவின் கார்னிஷ் – ஒரு இளமாலை நடைப்பயிற்சி
ஷார்ஜா சென்றிருந்தபோது என்னைக் கவர்ந்த இடங்களில் முக்கியமானது கார்னிஷ். புல்வெளிகள் நிறைந்து பேரீச்சை மரங்கள் அணிவகுக்கும் இந்த இடம் காலையிலும் மாலையிலும் காத்தாட சுகமானது.
அழகான பார்க். நிறைய பெஞ்சுகள்
போடப்பட்டு விளக்கொளியில் ஜொலிக்கும் கட்டிடங்கள் என பார்வைக்கும் மனதுக்கும்
இதமான இடம். இந்த கார்னிஷ் ரோட்டில் நிதானமாக
வாக்கிங் செல்லலாம். கார்பார்க்கிங் கிடைப்பதுதான் தாமதமாகும்.
இதற்கான நடைப்பயிற்சிப் பாதையும் ப்ரத்யேகமானது. இரும்புக்
கிராதிகளால் சுவர் அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய கட்டிடங்கள் இரவில் ஒளிவிடத்துவங்குகின்றன. அரபி நாடுகளில் மசூதிகள் கொள்ளை அழகாகக் காட்சி தரும். அதுவும் இரவில் ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் வரும் பாக்தாத் நகரம் போலக் காட்சி தரும்.
கார்களும் 20 கிமீ வேகத்துக்கு மேல் போகாது. மெயின் ரோட்டிலிருந்து கார்னிஷ் ரோட்டுக்குச் செல்ல ஒருவர் இந்தக் குறுக்கு ரோடுகளைக் கடக்கும்போது கார்கள் மனிதர்கள் கடக்கும்வரை காத்திருந்து நிதானமாகக் கடப்பது சிறப்பு.
ஓரிரு அரபியர்கள் குடும்பமாக வாக் வருவார்கள்
சிறு குழந்தைகள் சைக்கிளிங், ஸ்கேட்டிங் செய்வார்கள்.
இங்கே வருடந்தோறும் குறிப்பிட்ட சீசனில் டேட்ஸ் திருவிழா, படகுப் போட்டி, ஒட்டகச் சவாரி, ஹென்னா, அரேபிய உணவுத் திருவிழா போன்றவை நடக்குமாம்.
முக்கியமா சொல்லணும்னா வாக் போயிட்டு அப்பிடியே பிஸா, பர்கர், ஷவர்மா, ஃபிலாஃபல், குப்பூஸ் சாப்பிட மெக்டொனால்ட்ஸ், பிஸா ஹட், சப்வே, கேஎஃப் சி,ன்னு ஏகப்பட்ட கடைகள் சுத்தி இருக்குங்கிறது விசேஷ தகவல். J தம்பியார் தயவுல நல்லா சுத்திப் பார்த்துட்டு ரெண்டு ரவுண்டு பெருத்துப் போய் வந்தோம் J
2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.
4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )
5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)
6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..
8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி.
9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..
10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.
11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.
12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI)
13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)
15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !
16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.
17. வாழ நினைத்தால் வாழலாம்.
வை.கோபாலகிருஷ்ணன்22 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 12:16
பதிலளிநீக்குமிகவும் அருமையான படங்களுடன் அழகான தகவல்கள்.
சொர்க்கத்திற்கே சென்று வந்தது போல இருக்கும் இந்த இடங்களெல்லாம்.
நானும் 2004 + 2014 ஆகிய இருமுறை போய் இவற்றையெல்லாம் ரஸித்து மகிழ்ந்து வந்துள்ளேன்.
என் இரண்டாவது துபாய் பயணம் பற்றிய செய்திகள் 20 பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
பகுதி-1 க்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html
பதிலளிநீக்கு
கரந்தை ஜெயக்குமார்23 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:40
அழகானப் படங்கள்
அருமை
வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan1 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:41
Thanks VGK sir
THanks Jaykumar sago
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!