தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும்.
“தாலாட்டும் காற்றே வா.. தலை சாயும் பூவே வா.. “ என்று பாடிக்கொண்டே காரில் வரலாம். :) ஏன்னா காரைக்குடி எங்க ஊராக்கும். கொள்ளை அழகாக்கும். :)
இந்த தாப்பா கார்டனில் ஒரு நாள் மதிய உணவருந்த சென்றோம்.
மிக அமைதியான சூழலில் தண்ணென்றிருக்கிறது தாப்பா கார்டன். இங்கே தங்குவதற்கும் அலுவலக மீட்டிங் போன்றவை நடத்துவதற்கும் பல்வேறு வசதிகளும் ஹால்களும் உள்ளன என்று சொன்னார்கள். ஏசி நான் ஏசி ரூம்ஸ், பார் வசதி, கார்பார்க்கிங் ( பிரம்மாண்டமான சோலையில் இதற்கென்ன பஞ்சம் ) அமைதி, இயற்கை எல்லாம் இருக்கிறது.
உணவகம் தனியாக இருக்கிறது. அதன் எதிரேயே ஒரு நீச்சல் குளமும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. உணவகத்தில் அந்தக்கால ஓவியங்கள் அழகூட்டுகின்றன.
எடுத்தவுடன் விநாயகர் கோவில்.