எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
டிஃபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டிஃபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 பிப்ரவரி, 2021

சுடச் சுட டிஃபன்.

சுடச் சுட டிஃபன்.

காலை உணவு என்பது இன்றியமையாதது. ஒரு துண்டு ரொட்டியாவது சாப்பிட்ட வேண்டும். பலமணி நேரம் காலியாகக் கிடக்கும் வயிற்றுக்கு சரிவிகித உணவு கொடுத்தால்தான் மயக்கம், உடல் சோர்வு, நாளடைவில் தோன்றும் பல்வேறு வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம்.

மூளை & கண்ணுக்கு அதிகம் வேலை கொடுப்பவர்கள் கார்போஹைட்ரேட் ஓரளவு எடுத்துக்கணும். ஏன்னா கார்போஹைட்ரேட் உணவுகள்தான் போதுமான இயங்கு சக்தியை கொடுக்குது. அட்லீஸ்ட் ரெண்டு இட்லியாவது எடுத்துக்கணும்.

ஒரு ஜான் வயித்துக்குத்தானே உழைக்கிறோம். அதை அலட்சியப்படுத்திட்டு அப்புறம் அதிகப்படி அமிலம் சுரந்து அல்சர், வாய்ப்புண், சீரற்ற இரத்த அழுத்தம் உடல் எடை குறைவு , பலகீனம் தாக்காம தப்பிக்கலாம்.

பேலியோ போன்றவற்றில் அதிக புரதம் எடுத்துக்குறாங்க. ஒவ்வொருவர் உடல் நிலைக்கும் தக்கவாறு மருத்துவர் ஆலோசனையின் படி அதையும் பின்பற்றுவது நலம்.

இயற்கை உணவுகளோ, சமைத்த உணவுகளோ காலை ஆகாரம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று.  எனவே என்னுடைய உணவுப் புகைப்படங்களை இத்துடன் பகிர்ந்துள்ளேன். இதைப்பார்த்துப் பசியெடுத்து ஒழுங்கா சாப்பிட்டீங்கன்னா நலம்.. நலமறிய ஆவல். :)

ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தபோது ஆர்டர் செய்த காலை உணவு ( இருவருக்கு :) ( அநேகமா கோவை ஆர்வி யாக இருக்கும். ) சப்பாத்தி & மசால் தோசை.
அவிநாசி ரோட்டில் இருக்கும் சரவணபவனில் மல்லி சேவை.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...