எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ERODE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ERODE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 மார்ச், 2021

கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

கோகுல் கிராண்ட் & ஷண்முகா

ஈரோட்டில் வலைப்பதிவர் சந்திப்புக்கும் சந்துரு அண்ணன் மகன் அருணின் திருமணத்துக்கும் சென்றிருந்தபோது இந்த கோகுல் கிராண்டிலும் ஷண்முகாவிலும் தங்கி இருந்தோம். இரண்டும் நல்ல பராமரிக்கப்படுகின்றன.

நல்ல வசதியான காற்றோட்டமுள்ள அறைகள். கோகுல் க்ராண்ட் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் உள்ளது. ஹோட்டல் ஷண்முகா சின்னமுத்து தெருவில் உள்ளது.

அவற்றில் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.

அண்ணன் மருமகள் ஷாலினி செய்த வீணை வடிவிலான அழகிய சீர்த்தட்டுகள் !
கோகுல் கிராண்ட்

ஞாயிறு, 7 மார்ச், 2021

ஜெய்சூர்யாவில் கொஞ்சம் தயிர் சேமியா :-

ஜெய்சூர்யாவில் கொஞ்சம் தயிர் சேமியா :-

ஈரோடு ப்ரப் ரோட்டில் அமைந்துள்ளது இந்த ஜெயசூர்யா ஹோட்டல். இது ராதா பிரசாத்தின் அருகிலேயே இருக்கிறது. காலை உணவு ராதா ப்ரசாத்தில் பஃபே. இரவு இங்கே உணவருந்தினோம்.

ஜெயசூர்யா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் 1989 இல் இங்கே ஆரம்பிக்கப்பட்டிருக்கு. அதன் பின் இந்த ஹோட்டலும் அதன் மேல் தளத்தில் திறக்கப்பட்டிருக்கு.

திங்கள், 1 மார்ச், 2021

ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.

ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.


ஈரோடு ராதா ப்ரஸாத் ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் – ரூஃப் டாப்பில் –இருக்கிறது லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டும் டால்ஃபின் ஸ்விம்மிங்பூலும். 



ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.

ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.

ஈரோடு பெருந்துறை ராயல் பார்க்கில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் சில கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.

ஓவியங்கள் பற்றி அதிகம் தெரியாது எனினும் ரசிக்கத் தெரியும். :)

பொதுமக்களுக்கும் நன்கு தெரிந்த பிகாஸோ, வான்கா ஆகியோரின் ஓவியங்கள் பார்த்திருக்கிறேன்.

இன்றைய நாளில் சில ஓவியங்கள் பல லட்சங்கள் விலை போவதாகச் சொல்கிறார்கள்.

சிலர் ஓவியங்களிலும் முதலீடு செய்கிறார்கள். ஓவியம் வாங்கி மாட்டுவது பெருமைக்கும் அழகுக்கும் செல்வத்துக்கும் கூட வழி வகுக்கிறது.

இந்த ஹோட்டல் ஓவியங்கள் யார் வரைந்தது எனத் தெரியாது. ஆனால் நன்கு ஃப்ரேம் செய்யப்பட்டு இருக்கும் . எங்கேயாவது ஓரத்திலாவது பேர் தெரியுதா . நம்ம கண்ணுக்குத்தான் தெரியலையான்னு பார்த்தேன். ஆனா தெரிலதான்.

இது ரிசப்ஷனில்

இது காரிடாரில்

வியாழன், 18 பிப்ரவரி, 2021

பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.

பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.

பெருந்துறை ராயல் பார்க்கில் இருநாட்கள் தங்க நேர்ந்தது. பக்கத்தில்தானே செங்கோட்டு வேலவனும் திண்டல் வேலவனும். இருவரையும் தரிசிக்க இருநாட்கள் வேண்டுமே.

பெருந்துறை ராயல் பார்க் காம்பாக்டான ஹோட்டல். ரூம் சர்வீஸில் காஃபி மட்டுமே அருந்தினோம். இதோடு ஒட்டிய செட்டிநாடு ராயல் பார்க் ஹோட்டல் இருக்கு . ஆனால் அதன் உணவு பிடிக்கல..காலை பஃபே உண்டு. அது பற்றியும் ராயல் பார்க்கின் அழகு ஓவியங்கள் பற்றியும் அடுத்த இடுகைகளில் விரிவா சொல்றேன்.
டாலி வேலைக்கு ஆட்கள் தேவையாம், விருப்பமுள்ளவர்கள் அணுகலாம். :)
பக்கத்திலிருக்கும் ராயல் செட்டிநாட்டு ஹோட்டல் சுவரில் பெயிண்டிங். நான் இது பத்தி சொல்லல. இன்னும் சிறப்பான பெயிண்டிங்க்ஸ் ஹோட்டல் லாபிகளில் இருக்கு.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...