எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 மார்ச், 2021

ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.

ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.


ஈரோடு ராதா ப்ரஸாத் ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் – ரூஃப் டாப்பில் –இருக்கிறது லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டும் டால்ஃபின் ஸ்விம்மிங்பூலும். 






மாடியில் குழந்தைகளுக்கான ஒரு ஸ்விம்மிங் பூல் இருந்தது. அங்கே ட்ரெயினர்களும் குழந்தைகளும் ஏகக் கும்மாளம். அம்மாக்கள் சேரில் அமர்ந்து பிள்ளைகளின் நீச்சலைப் பார்த்து மகிழ்ந்துக்கிட்டு இருக்காங்க.



காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் அருமை. ஆனால் சர்வ் செய்யும் விதம் இன்னும் மேம்படலாம். வெஜிடபிள் ஆம்லெட் அரை முட்டையில் செய்திருப்பாங்க போலிருக்கு. J



நமக்கு ஸ்விம்மிங் பூலின் சப்தமும் வெக்கையான இடத்தில் காலை உணவு சாப்பிடுவதும் கொஞ்சம் சிரமமா இருந்தது. ஏன்னா பொதுவா ஏசி ஹாலில் மெல்லிய இசை ஒலிக்க ரொம்ப சைலண்டான ஆம்பியன்ஸ்ல சாப்பிடுறதுதான் பிடிக்கும்.



வழக்கம்போல் இட்லி, வடை, பொங்கல், பூரி, சாம்பார், தேங்காய்ச் சட்னி, மிக்ஸ்ட் சட்னி, உருளைக்கிழங்கு மசால். அத்தோட தோசையும் உண்டு.



எல்லா ஹோட்டல்களிலும் இந்த வெண்ணெய் வீசும் நாற்றம் கொஞ்சம் அன்பியரபிள். ஊறுகாய், சாஸ், பட்டர் எல்லாம் லேசா தொட்டு சுவைச்சுப் பார்த்துட்டுத்தான் சாப்பிடணும்.



லிஃப்ட்



மிகப் பெரிய ரூம். சுத்தமான பெட்டிங், டபுள் ஸ்க்ரீன், கண்ணாடி, ஏசி, டிவி, சர்வீஸ் டேபிள். கபோர்ட்.





தினசரி ரூம் க்ளீனிங் உண்டு.



பாத்ரூம்.



இங்கேயும் சேலம் கற்பகா இண்டர்நேஷனல் மாதிரி டிஜிட்டல் சேஃப்டி லாக்கர் இருக்கு.




எனக்குப் பிடித்த அமைதியான காரிடார்.



சகோ வெங்கட் நாகராஜின் இடுகை ஒன்றில் பச்சைக்கலர் ரவாகேசரி பற்றிப் போட்டிருப்பார். இங்கே பாருங்க பச்சைக்கலரில் சேமியா கேசரி டூட்டி ஃப்ரூட்டி எல்லாம் போட்டு செய்திருக்காங்க !



ஒவ்வொரு ஃப்ளோரிலும் லிஃப்டுக்கு வெயிட் செய்யும்போது அமர சோஃபா J !



கோயிலுக்குப் போயிட்டு வந்தோம். லிஃப்ட் வர லேட்டாகும் போல. சோ கொஞ்சம் படியேறி நடப்போம் வாங்க.



அதே அழகிய காரிடார்.


இங்கே அறையைப் பொருத்தவரை எல்லாம் ஓகே.


காலை உணவு பரிமாறும் விதத்திலும் அதன் தரத்திலும் ஆம்பியன்ஸிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங்  நாலு ஸ்டார் ****
 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 


41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்27 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 8:21
    நல்லா இருக்கு - படத்தில்.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam29 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:59
    நீங்கள் போகாத ஊரும் உணவகமும் இல்லைபோல் இருக்கிறதே

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 1:01
    nandri Venkat sago

    ahaa appidi illa Bala sir. pogumpothu eduthathai poduren :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...