எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 மார்ச், 2021

திருக்கடையூரில் சதாபிஷேகம்.

திருக்கடையூரில் சதாபிஷேகம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் பக்த மார்க்கண்டேயரை யமனிடமிருந்து காத்த திருத்தலம். எனவே அங்கே ஆயுஷ் ஹோமம், 59 ஆவது பிறந்தநாள் ( உக்ரத சாந்தி ) , சாந்திக் கல்யாணம், 75 ஆவது பிறந்தநாள் ( விஜயரத சாந்தி )   சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம், மகுடாபிஷேகம் செய்து கொள்ள வருபவர்கள் அதிகம்.

அங்கே கோயிலின் அருகே தங்குமிடங்கள் ஹோட்டல் சதாபிஷேகம், கனகாபிஷேகம், மணிவிழா ஆகியன உள்ளன. இதில் சதாபிஷேகத்தில் பலமுறை தங்கி இருக்கிறோம். இந்த முறை புகைப்படம் எடுத்தேன்.

பட்ஜெட் ஹோட்டல்கள்தான் எல்லாமே. ரூம் வாடகை. ஆயிரம் ரூபாய் ஒரு நாளைக்கு.


லாபி.
இங்கே இருக்கும் விநாயகர்கள் கொள்ளை அழகு. அவர்களை என் விநாயகர் ஸ்பெஷல் இடுகையில் போடுவேன் :)
இருவர் அல்லது மூவர் தங்கலாம். எக்ஸ்ட்ரா பெட் கொடுப்பதில்லை. ஆனால் பெட்ஷீட் தலையணை கொடுக்கிறார்கள்.
டிவி, இரண்டு சேர்கள், டீப்பாய் , ஏசி அனைத்துமே உண்டு.
இந்த ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்தன. பறவை மனிதர்கள் போல் தெரிகிறது. இதில் இருப்பவர்கள் யார். இதன் பின்னணி என்ன ? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
சுத்தமான பாத்ரூம். ஹீட்டரும் உண்டு.
கொசுவிலிருந்து பாதுகாக்க எல்லா ஹோட்டல்களிலும் பாத்ரூம் ஜன்னலுக்கு நெட் போட்டிருக்கிறார்கள். இங்கும் அதே. அப்புறம் அந்த துணி போடுற கம்பி படு நீளம். துவைத்து அலசி ரெண்டு புடவை கூட காயப்போடலாம். :))))))))))
எனக்கு பிடிச்ச காரிடார். வெகு அழகு.
காரிடாரின் இப்பக்கம் ஏதோ ஒரு ஹால் மாதிரி இருந்தது.
லிஃப்ட் வசதி இருக்கு.
இங்கே முக்கியமா உணவைப் பத்திச் சொல்லணும்.

இட்லி ரொம்ப சாஃப்டா பஞ்சு மாதிரி இருக்கு. பொங்கல் நெய் வழிய வழிய சூப்பரோ சூப்பர். பெரிய குழிக்கரண்டில நிறைய எடுத்து வைக்கிறாங்க.

மதியம் ஒரு மீல்ஸ் பார்சல் வாங்கி மூன்று பேர் ரூமில் சாப்பிட்டோம். அங்கேயே சாப்பிட்டா 90 ரூ. பார்சல் என்பதால்110 /- ரூ. அருமையான சாப்பாடு. சில இடங்களில் முத்தின காய்கறிகளைப் போட்டு ஒப்பேத்தி இருப்பாங்க. இங்கே இளந்தளிரான முட்டைக்கோஸ் பொரியல், கத்திரி முருங்கை சாம்பார், வத்தக்குழம்பு,  தக்காளி ரசம், சௌ சௌ கூட்டு, உருளை பொரியல்  அப்பளம் என அசத்தி இருந்தார்கள். சுடச் சுட இருந்தது சுவையோ சுவை.

காவிரிக்காக கடை அடைப்பு நடந்த நாளில் ஒரு காஃபி கூட வெளிய சாப்பிட முடியவில்லை . இங்கே போர்டிங் வித் ஹோட்டல் இருப்பதால் தப்பிச்சோம்.

மிகப் பெரிய கார் பார்க்கிங் & குழந்தைகள் விளையாடும் பார்க் போன்ற இடம் இருக்கு. நல்ல காற்றோட்டமான தோட்டம். பெரியவர்கள் அமர்ந்தும் உரையாடிக் கொண்டிருக்கலாம். சின்ன வாக்கிங்கும் போகலாம். 

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

1 கருத்து:

  1. தி.தமிழ் இளங்கோ30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 9:24
    படங்களுடன் பயனுள்ள தகவல்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu1 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:22
    சதாபிஷேகம் என்றதும் ஃபங்க்ஷன் என்று நினைத்துவிட்டோம்..ஹா ஹா ஹா அப்புறம்தான் தெரின்டஹ்து தங்குமிடத்தின் பெயர் என்று...ரீசனபிள் விலை..


    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam1 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:18
    என் சஷ்டி அப்த பூர்த்தியை திருக்கட்சியூரில் தான் நடத்தினார்கள் என்வாரிசுகள் ஹோட்டலில் தங்கவில்லை

    பதிலளிநீக்கு

    iramuthusamy@gmail.com1 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:54
    திருக்கடையூர் சதபிஷேகத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் தாங்கிய அனுபவம் உண்டு. மதிப்பாய்வில் சொன்னது மிகச்சரி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:20
    நன்றி தமிழ் இளங்கோ சார்

    அஹா துளசி சகோ. :)

    அப்படியா அப்புறம் எங்கே தங்கினீர்கள் உறவினர் இல்லத்திலா பாலா சார்.

    நன்றி முத்துசாமி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...