எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 மார்ச், 2021

என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS

 என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS

தினமும் காலையில் எழுந்ததும் எழும் கேள்வி ’இன்று என்ன சமைப்பது. ?’

அதே போல் மிகவும் அறிமுகமாக இல்லாத  இருவர் ( இருவரும் பெண்கள் அல்ல :) நண்பரான பின் கேட்கும் முதல் கேள்வி “இன்னிக்கு என்ன சமையல். ?”

தினம் தினம் மூன்று வேளையும் விதம் விதமாகப் பலகாரங்களும் தொட்டுக்கொள்ளும் வகையறாக்களும் வேண்டியிருக்கிறது நமக்கு.தினமும் ஒரே மாதிரியான சப்பாத்தி& ப்ரெட்டில் அடங்கிவிடக்கூடியதல்ல நம்முடைய பசி. நமக்கு வெரைட்டி வேணும். போகும் நாட்டில்/ஊரில் செய்யும் ரெஸிப்பிக்களையும் கேட்டு நமதாக்கிக் கொள்வோம்.

தினம் தினம் சமைத்ததுதான். அதை அவ்வப்போது எடுத்த படங்களோடும் சில விசேஷங்கள் & ஹோட்டல்களின் உணவோடும் பகிர்ந்திருக்கிறேன்.

ஒரு நிகழ்ச்சியில் சமைத்துக் காட்ட அக்கா ஒருவர் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். கருணைக்கிழங்கை குழம்பு வைத்தால் நல்லா இருக்கும். ஆனால் அன்று மசித்தார்கள். இது குழந்தைகள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட சமையல் வகை. செட்டிநாட்டின் ஸ்பெஷலான தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளும் வகையான மண்டி என்பதையும் அன்று செய்தார்கள்.


இது வீட்டில் செய்தது.  சின்னவெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு, முளைக்கீரை மசியல்,பீட்ரூட் வடை, கத்திரி முருங்கை பச்சடி, அவிச்ச முட்டை, தயிர், சாதம்.
கூடவே கொஞ்சம் மாவுருண்டையும், கறுப்புப் பேரீச்சையும்.

தினை அடை முதன் முதலாசெய்தேன். அவசரமா எடுத்ததினால் சரியா இல்லை. ஓரத்துல கொஞ்சம் பிச்சு வேற சாப்பிட்டுப் பார்த்துட்டேன். தொட்டுக்க மிளகாய்த்துவையல்தான் நல்ல சாய்ஸ்.

அரிசிம்பருப்புச் சாதம். கோவை ஸ்பெஷல். தொட்டுக்க தயிர்.

அதுக்கு பேரீச்சை எதுக்காம். ஹாங் அது ஹெல்த் ஸ்பெஷல். ஹீமோக்ளோபின் கொடுக்கும்.  கண்ணை மூடிட்டி தினம் ரெண்டு சாப்பிட்டுடணும்.

தனியா உக்கார்ந்து அமிர்தமே சாப்பிட்டாலுக் கசக்கும். அப்போவெல்லாம் இப்பிடி ஒரு ஊத்தப்பத்தைப் போட்டு அதுல தாராளமா நெய் அல்லது அமுல் பட்டர் போட்டு பொடியை ஒரு கைப்பிடி எடுத்துத் தூவி வெட்டி டிசைன் பண்ணி சாப்பிடணும். அப்போ சாப்பாடு வெறுக்காது.

அப்புறம் பேரீச்சை முக்கியம் . பக்கத்துல இருக்கு. :)

இது தக்காளி ஊத்தப்பம். பார்க்கவே கொடுமையா இருக்கா. எனக்கும் தான். என்ன செய்யிறது. ஊத்தப்பத்துல தக்காளியை பதிச்சு லேசா உப்பும் மிளகுத்தூளும் போட்டு திருப்பிப் போட்டு வேகவைச்சுட்டு மறந்தா இப்பிடித்தான் கறுப்பா ஆகும். :)

ஒண்ணு போதும். :)  தொட்டுக்கவும் தேவைப்படாது.

இது சப்பாத்தி ஷாஹி பன்னீர் க்ரேவி. சப்பாத்தி ரெண்டு பேருக்கு ஆனா க்ரேவி எனக்கே எனக்கு. :)

மிக மிகப் பணக்காரரான ஒருவர் இல்லத்தில் நடந்த விசேஷத்தில் காலை உணவு. கவுனரிசி அல்வா, இன்னோரு ஸ்வீட் ரஸ்மலாய்தான் . ஆனா வித்யாசமா இருந்துச்சு. உருண்டையா உள்ளே நட்ஸ் எல்லாம் வைச்சு அற்புதமான சுவை. வெள்ளைப்பணியாரம் மிளகாய்த்துவையல், வெஜ் டிக்கா, ட்ரை ஜாமூன், வடை தேங்காய் சட்னி, பொங்கல் சாம்பார், தோசை, அவியல், இட்லி வத்தக்குழம்பு. எல்லாம் அமோகம்.


இது இன்னொரு மதிய விருந்து. பூசைச் சாப்பாடு. சாதம்,சித்ரான்னத்தில் எலுமிச்சை சாதம், முருங்கை சாம்பார், அப்பளம், வெண்டைக்காய் மொச்சை மண்டி, சௌ சௌ கூட்டு, இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல், முட்டைக்கோஸ் காரட் துவட்டல், வாழைக்காய் பொரியல், பரங்கிக்காய் புளிக்கறி, உருளை சிப்ஸ். தக்காளி கெட்டிக்குழம்பு, பைனாப்பிள் ரசம், தயிர், பருப்புப் பாயாசம்.

இது எங்கள் விநாயகரின் பிரசாதம். ரவா கேசரி :)

பேர்தான் கந்தரப்பம். ஆனா இது கந்தருக்குக்காக செய்ததில்லை. எல்லா விசேஷங்களிலும் முதல் நாள் இரவு உணவில் வைக்கப்படும் இனிப்பு.

பாசிப்பருப்புப் பணியாரம் என்றொரு ஐட்டம் உண்டு. அதுவும் இதுபோலவே இருக்கும். ( வைகுண்ட ஏகாதசிக்கு பிள்ளையார் நோன்புக்கு இழை எடுத்த கருப்பட்டிப் பணியார மாவில் மிச்சம் வைத்து அதில் பாசிப்பருப்பை வேகவைத்துச் சேர்த்துச் சுடுவார்கள். )

இதுதான் வள்ளிக்கிழங்கு.

படைப்பு வீடுகளில் முக்கியமாகச் சமைக்கப்படும் கிழங்கு வகை. இதை மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து பொரியல் போல் செய்வார்கள். கொஞ்சம் வழ வழ வென்று சேப்பங்கிழங்கு போல் இருக்கு. முழுதாய் இருக்கும்போது பெரிய பிடி கருணை/ உருண்டையான சேனை போல் இருக்கும்.


அஹா பக்கத்திலேயே பாருங்க அம்மியும் குழவியும், ஆட்டுக்கல்லும் குழவியும். அந்தக்காலத்தில் இதில்தான் அரைத்து சமைத்திருக்கிறார்கள். இப்போது படைப்பு வீட்டுக்குச் சமையலுக்கு வருபவர்களும் கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் கேட்கிறார்கள்.

பாற்சோறு. முதல் நாள் படைத்து உண்டபின் மிச்சமிருப்பவற்றை இப்படித் துண்டாக நறுக்கி வைத்துவிடுவார்கள். இரண்டு மூன்று நாளைக்கு நன்றாக இருக்கும்.

இது சரவணபவன் ரவா கிச்சடி, சட்னி சாம்பார். துளிதான் வைக்கிறாங்க. ஆனா ருசி அபாரம்.

இதுவும் சரவணபவன் பாஸந்தி. எனக்கு பிடித்த இனிப்பு வகைகளில் முதன்மையானது. :)

இது ஏதோ ஹோட்டல் உணவுதான் . சாஸ்த்ரி பவனின் தங்கை கீதா இளங்கோவன் எனக்காக வருவித்தது. ரொம்ப சூப்பரா இருக்குல்ல. சப்பாத்தி தால், இனிப்பு ஒன்று, வெஜ் பிரியாணி, தயிர் வெங்காயம், சாம்பார்சாதம் வத்தல், தயிர்சாதம் பொரியல் ஒன்று , ஊறுகாய்.

இப்ப சைவமாயிட்டேன். முன்னே ஒரு காலத்துல வீட்டுல செஞ்ச ஃப்ரைட் மசாலா சிக்கன் .

இதுதான் நார்மலா ஒரு விசேசத்துல போடக்கூடிய காலை உணவு. தொட்டுக்க இன்னும் வரலை. அதுக்குள்ள அவசர க்ளிக். ஹோல் பந்தியும் பார்க்க ஏதோ திருட்டுத்தனம் செய்றாப்புல கைக்குள்ள செல்லை வைச்சுப் பார்க்குறாமாதிரி க்ளிக்க வேண்டியிருக்கு. சனியன் அதுவேற ஃப்ளாஷ் அடிச்சு சமயத்துல போட்டுக் கொடுத்துடுது :D

அதே தினை அடை இன்னொரு நாளில் சூப்பராக வந்தது.

இவ்ளோ பார்த்தமே இப்டி வெரைட்டியா பார்த்தோமா. இது சாலட் வகையறா. & ஃப்ரூட்ஸ். இது எல்லாம் அக்கார்டில் ஒரு முறை பஃபேயில் சாப்பிட்டபோது.

தட்டுத்தட்டா வெஜ்ஜும் நான்வெஜ்ஜும். கல்யாண சமையல்சாதம் என்று பாடிக்கொண்டே சாப்பிட நினைத்தும் அக்கம் பக்கம் பார்த்து டீஸண்டா கொறிக்க வேண்டியதா போச்சு. :) இப்ப வயிறே சுருங்கிப் போச்சு.என்னதான் கொறைச்சு சாப்பிட்டாலும் ஆள்தான் சுருங்கலை. ஹாஹா.


டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.


78. என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.21 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:48
    காலையிலேயே இவ்வளவு ஐட்டமா? பசி வந்துடும் போலிருக்கே...!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்21 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 9:32
    விதம் விதமாக உணவு.... அனைத்தும் பார்த்து ருசித்தேன்/ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்21 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:56
    தொட்டுக்க மிளகாய்த்துவையல், தயிர்... ஆகா...!

    இப்பவே கண்ணைக் கட்டுதே...!

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam22 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:55
    எனக்கெல்லாம்நாக்கு நீளம் இல்லை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan25 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:59
    அஹா சீக்கிரம் போய் சாப்பிடுங்க ஸ்ரீராம் :)

    நன்றி வெங்கட் சகோ

    அஹா டிடி சகோ :)

    பாலா சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...