எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 மார்ச், 2021

தீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.

தீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.

சரேல்னு கொட்டுற அருவியைப் பார்த்ததும் ”தீம்தனனா தீம்தனனா” அப்பிடீங்கற பாட்டு மனசுல ஓடாட்டி நிச்சயமா சொல்வேன் நீங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க இல்லை.. :)

எங்க ஆயா வீட்டு ஐயாவுக்கு  நான் கல்லூரி  ஹாஸ்டலில் இருக்கும்போது ஒரு கடிதம் எழுதி இருந்தேன். வழக்கம் போல ”சென்று சேர்ந்தேன். கல்லூரி & விடுதி பரவாயில்லை.நல்ல ஆசிரியைகள், தோழிகள் கிடைத்திருக்கிறார்கள். வீட்டு சமையல் போல் காரசாரமாக இல்லை சாப்பாடு” என்று கிட்டத்தட்ட 15 இன்லண்ட் கார்டு, அப்பா, அம்மா, ஐயா, ஆயா, தம்பி, என்று இருக்கும் இன்னபிற உறவினருக்கெல்லாம் இன்லாண்ட் லெட்டரும், அது தீர்ந்த காலை மஞ்சள் கடிதாசியும் ( அட மஞ்சள் போஸ்ட் கார்டுப்பா - கமல் பாணியில் படிக்கவும் ). :)

அதுக்கு எல்லாருமே உடனடி ரிப்ளை . மேலும் ஏன் தாமதம் என்று கேட்டு ஒரே திட்டு & சத்தம். அப்போவெல்லாம் கடுதாசிக்கு மறு கடுதாசிதான் நம்ம தொடர்பே. முணுக்குன்னா கடிதம் எழுதிப்போம்.

அதுக்கு என் ஐயா பதில் கடிதம் எழுதிவிட்டார்கள். அப்பத்தா வீட்டு ஐயா என்றால் ஆச்சர்யப்பட வேண்டாம். அவர்கள் எப்போதுமே அன்பான ஆசிகளை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

இது ஆயா வீட்டு ஐயாவின் கடிதம். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியிலும் புளகத்திலும் கண் எல்லாம் வேர்த்தது. அவர்கள் கையெழுத்திலேயே கடிதம், கடிதாசி.  மெயினாக “ அன்புப் பேத்தி தேனம்மைக்கு,  நன்கு படிக்கவும். படிக்கிற பிள்ளை சாப்பாட்டை எல்லாம் கருதக் கூடாது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளவேண்டும். படிப்பு முக்கியம் .சுப. வள்ளியப்பன். “இவ்வளவுதான்.   உணர்ச்சி வயப்பட்டு “ ஐயா உங்கள் கடிதம் கிடைத்தது. அது குற்றால ஓடையிலே குளித்தது போல் இருந்தது “ என்று  எல்லாம் எழுதி அனுப்பி விட்டேன்.

அதற்குத் திரும்ப வந்த ஐயாவின் கடிதம் தான் ஹைலைட். “ ரொம்ப சந்தோசம்.  ஏன் அத்தனை அருவி இருக்கும்போது  குற்றாலத்தில் அருவியில் குளிக்காமல் ஓடையில் போய் இறங்கிக் குளித்தாய். அடுத்த முறை ஞாபகமாக அருவியில் குளிக்கவும். “  ஹாஹா இதுதான் ஐயா.

இனி கொஞ்சம் இலக்கியத்துக்குப் போவோம்.

///அம் கண் விசும்பின் அகல்
நிலாப் பாரிக்கும்
திங்களும், தீங்குறுதல்
காண்டுமால்:-பொங்கி
அறைப் பாய் அருவி அணி
மலை நாட!-
உறற்பால யார்க்கும் உறும். ///

-- பழமொழி நானூறு.

கொஞ்சம் கூகுள்ள கடன் வாங்கினது இது. :)

“ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்”

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய 4448 நோய்களுக்கும் அடிப்படை வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். இந்நீர் மூலிகைகளின் மீது பட்டு வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும், பயன்படுகின்றன.

-- அப்பிடின்னு சொல்றாங்க. சோ  சனி நீராடு மாதிரி கொஞ்சம்  அருவி நீராடுங்க. அதுவும் ஹொகனேக்கல்ல. எண்ணெய் தேய்க்க இப்போ அனுமதி இல்ல. ஏன்னா அது நீரை மாசாக்குதாம். எகோ ஃப்ரெண்ட்லி. எனவே எண்ணெய் சிகைக்காய் எடுத்துப் போக வேண்டாம். தங்கியிருக்குற ரூம் இல்லாட்டி சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து தனிக்குளியல் போட்டுக்குங்க சோப்பு ஷாம்புவோட. அதையும் இங்கே எடுத்துட்டுப் போக வேண்டாம்.



விதம் விதமா எடுத்ததை மட்டும் பகிர்ந்துள்ளேன்.
ஐந்தருவி மாதிரி அங்கங்கே தனித்தனியாப் பாயுது அருவி. ஆனா நாம எல்லாம் இங்கே குளிக்க முடியாது. கண்டு களிக்க வேண்டியதுதான். ஆனால் சிலர் தைரியமா குளிச்சிட்டு இருந்தாங்க. அவங்களைப் படம் பிடிச்சேன். தரை எவ்வளவு தூரம்னு தெரில. ஆழம் தெரியாம இறங்கி நாம பள்ளத்துக்குள்ள போயிட்டா நீங்க ஒரு தினசரி (பேப்பரை )  ப்லாகரை இழந்துருவீங்கள்ல.. அதான் இறங்கவே இல்லை. :)  நீச்சலும் தெரியாது.

 சிலர் அந்த அருவி அடிக்கிறத ஆனந்தமா தலையில தாங்கிக்கிட்டு எந்திரிச்சு வரவே இல்லை. நமக்கு வேற பாறை இடுக்குல பூச்சி பொட்டு இருக்குமோ இப்பிடி இருக்காங்களேன்னு உதறலா இருந்துச்சு.


எத்தனை முறை பார்த்தாலும், எங்கிருந்து பார்த்தாலும் அலுக்கவே இல்லை.
ஹொகனேக்கல் ஆறு என்பதா, அருவி என்பதா அடித்துப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. பார்க்கும் திசையெல்லாம். எங்கேயிருந்து வருது இவ்ளோ தண்ணீர். ?


சில் சில் சில் சில்லல்லா ..

வட்டமடிக்கும் வட்டுக்குள்.
இறங்கியவுடன் லெமன் சோடா. ரங்க்ஸுக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். வாழ்க்கை பூரா தெரிஞ்சிக்கவேண்டியது நெம்ப இருக்கும்போல. :)




சந்தோஷத்தைச் சந்தோஷமாய் தூற்றிக்  கொண்டிருந்தது அருவி. விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம்.
பனியும் மழையுமா இருக்கு. புகைப்படங்கள் பார்த்து சில்லுன்னு நனைஞ்சிட்டீங்களா நீங்களும். :) தலையைத் துவட்டிக் கம்பளியைப் போர்த்திட்டு சூடா ஒரு டீயைப் போடுங்க. :)

கூடுதலா இப்பிடி ஒரு பாட்டையும் கேளுங்க :)

https://www.youtube.com/watch?v=n9D5lCUDcAc



டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University8 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 9:52
    இயற்கையின் அழகிற்கு முன்னே...அப்பப்பா..இதற்கு இணையேது?

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu8 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:36
    ஹொக்கேனக்கல் சென்றதில்லை. எவ்வளவு அழகாக இருக்கு...

    கீதா: செம பதிவு!! //சரேல்னு கொட்டுற அருவியைப் பார்த்ததும் ”தீம்தனனா தீம்தனனா” அப்பிடீங்கற பாட்டு மனசுல ஓடாட்டி நிச்சயமா சொல்வேன் நீங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க இல்லை.. :)//

    யெஸ் தேனு அருமையான பாடல்!! ரிதம் படப்பாடல் செமையா இருக்கும்..இதே இடம் தானே இல்லையா..

    நான் இரண்டு முறை போயிருக்கிறேன். இரண்டு முறையும் ஒவ்வொரு விதமான அழகு. எத்தனை முறை பார்த்தாலும் அழகுதான். நானும் மகனும் அருவியில் குளித்துத் திளைத்தோம். பாறைகளின் மேலேறி அருவியில் குளித்தோம்..அதுவும் ஒரு ரிஸ்கான பகுதியிலும்....தமிழ்நாட்டு நயாகரானு சொல்லலாமோ?!! இயற்கை இயற்கைதான்! உங்கள் பதிவும் ரொம்ப நல்லாருக்கு

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:21
    ஆம் ஜம்பு சார் . மிக அழகு

    நன்றி கீத்ஸ். ரொம்ப தில் உங்களுக்கு :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...