எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 மார்ச், 2021

திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.

திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.


பார்க் கல்லூரியின் மகளிர் மன்ற துவக்கவிழாவுக்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தபோது பெங்களூரில் இருந்து போக்கு வரத்துச் ( ட்ரெயின் டிக்கெட் ) செலவு, தங்க இடம் ஏற்பாடு செய்திருந்தார்கள். டிக்கெட் ஆன்லைனில் புக் செய்யப்பட்டு கைபேசியில் மெசேஜ் வந்துவிட்டது. 

முகநூலில் நண்பரான திரு திருமாறன் ஜெயராமன் சார் என்னை அவர்கள் கல்லூரியில் பெண்கள் மன்றத்தைத் துவக்கி வைத்து இருபது நிமிடம் உரையாற்ற அழைத்திருந்தார். ( 20 நிமிடம் பேசி முடித்ததும் ’இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம் நீங்க. நல்லா இருந்தது’ என்றார் ! )



முதல்வர் திரு திருமாறன் ஜெயராமன் அவர்கள் ஏற்பாட்டின்படி தொலைபேசியில் கல்லூரியின் பெண்கள் மன்றம் சார்பாக ஒரு  பேராசிரியை பேசினார் ( மல்லிகா என்று நினைவு ). ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி விநாயகா என்ற ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாலை என்பதால் தான் ரிசீவ் செய்ய வர இயலவில்லை எனவும் மன்னிப்புக் கேட்டு கல்லூரிப் பெயரை ஹோட்டல் ரிஸப்ஷனில் சொன்னால் ரூம் தருவார்கள் என்றார்.




ரயில்வே ஸ்டெஷனை ஒட்டி அந்த ஹோட்டல் இருந்ததாலும் ரங்ஸுடன் சென்றதாலும் சரி என்று சொல்லிவிட்டேன். கன்யாகுமரி எக்ஸ்ப்ரஸ் பெங்களூர் சிட்டியில் இருந்து ஒன்பது நாற்பதுக்குப் புறப்பட்டு நாலரைக்குத் திருப்பூர் வந்தடைந்தது.



கரு கும் என இருள். பெரிய ஸ்டேஷன். வெளியே வந்து பரந்து விரிந்திருந்த மைதானம் போன்ற இடத்தைக் கடந்து குமரன் ரோட்டில் இருந்த அந்த லாட்ஜை அடைந்தோம். தூங்கிக்கொண்டிருந்த ரிஸப்ஷன் ஆள் எழுந்து கதவைத் திறந்தார்.



சொன்னவுடன் புக் செய்யப்பட்டிருந்த ரூம் சாவியைக் கொடுத்தார். இரண்டாம் மாடியில் இருந்த அந்த ரூமுக்குச் சென்றால் ஒரே சிகரெட் நாத்தம். ஹ்ம்ம். ஒரு வழியாக கதவை எல்லாம் திறந்துவிட்டு ஃபேனைப் போட்டு சிறிது நேரம் கழித்து கதவுகளைச் சாத்தி ஏஸியைத் தட்டிவிட்டுப் படுத்தோம்.




படுக்கை மற்றும் பாத்ரூம் வசதிகள் அருமை. ஏசி, ஹாட்வாட்டர், டிவி, கண்ணாடி, டேபிள் சேர் நீட்டான கட்டில் போன்ற வசதிகள் ஓகே.






காலையில் திருமாறன் சார் கல்லூரி லெக்சரர் ஒருவருடன் ( இவர் பேரும் மறந்துருச்சு பாருங்க J ) வந்து காலை உணவருந்த அழைத்துச் சென்றார்.  
  
உணவு உண்டதும் இன்னொரு பெண் லெக்சரர் காரில் அழைத்துச் சென்றார். அங்கே மகளிர் மன்றத் துவக்கவிழா உரை நிகழ்த்திப் பெண்களின் நடனம் வீரராகவன் சார் உரை எல்லாம் முடிந்து திரும்பவும் திருமாறன் சார் அருமையான உணவகத்துக்கு அழைத்துச் சென்று மதிய உணவு அளித்தார்.





சால்வைகள், பரிசுப் பொருட்கள், அலங்காரப் பாத்திரங்கள், வெகுமதியாகப் பெருந்தொகையான பணமுடிப்பு என அனைத்தும் கிடைத்தன.


விருந்துண்டதும் ரூம் வந்தோம். மாலையில் அதே காரில் சிவன்மலைக்குச் சென்று வழிபாடு நடத்தி அத்துடன் அங்கே இருந்த புகழ்வாய்ந்த மேலத்திருப்பதி என்னும் வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கும் சென்று தரிசித்து வந்தோம்.



இரவு ட்ரெயினில் திரும்ப பெங்களூர் புறப்பட்டோம். ஒரு ப்லாகரா எனக்கு பத்ரிக்கையாளருக்கு ஈக்வலா நிறைய சிறப்புகள் கிடைச்சிருக்கு என்றாலும் பார்க் காலேஜில் அது  அபரிமிதமாகவே கிடைத்ததுன்னு சொல்லலாம். நன்றி பார்க் கல்லூரி & திருமாறன் ஜெயமாறன் சார். & நன்றி விநாயகா ஹோட்டல் J  

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலு ஸ்டார் ****

 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 


41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள். 

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்4 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 7:59
    நல்லதொரு தங்குமிட அறிமுகம். நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:10
    nandri Venkat sago


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...