எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 15 மார்ச், 2021

கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி

 கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி

தென் தமிழகத்தின் கலை கலாச்சாரப் பொருட்களையும் பாரம்பரிய விஷயங்களையும் காட்சிப்படுத்தி இருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி காரைக்குடி திருச்சி நெடுஞ்சாலையில் பள்ளத்தூரில் அமைந்துள்ளது. இங்கே வாசலில் தொடங்கி அறை வரை ஆண்டிக் எனப்படும் ஒரே கலைப்பொருள்மயம்தான்.

தண்ணீர்க் கிடாரம் எனப்படும் காசாணி அண்டா வாசலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வண்டியின் மேல். அதன் பக்கமாக ரோட்டில் அந்தக்காலத்தில் ஏற்றப்படும் விளக்கும் ஸ்தூபியும்.
தாழ்வாரங்கள் டிசைன் மற்றும் தூண்கள் செட்டிநாட்டு வீடுகள் ஸ்டைலில். பக்கத்தில் லாண்டர்ன் எனப்படும் அலங்கார விளக்குகள் தொங்குகின்றன. குளுதாடிகள் எல்லாம் பூச்சாடிகளாக. பாவைகள் தண்ணீர்க் குடமும் கஞ்சிக் கலயமும் சுமந்து காட்சி அளிக்கிறார்கள். வாழ்க்கைச் சக்கரம் போல் அங்கங்கே வண்டிச் சக்கரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. :)

காரைக்குடி வீடுகளின் ஆல்வீடுகளில் கலர்க் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பது  பிரசித்தம். இங்கே பெயிண்டட் க்ளாஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன . நிலைக்கு மேலே தேக்கு வேலைப்பாடுகள்.
அந்தக்கால நிற்கும் கெடிகாரம். காலத்தை நகராமல் நிற்க வைத்தது என்னுள் சில நிமிடம். :) ஆளுயரக் குத்துவிளக்குகள். செட்டி நாட்டு இல்லங்களின் புகைப்படங்கள் அழகூட்டுகின்றன.
இவர் சரபோஜியோ என வினவினேன். இல்லை யாரோ ஒரு அரசர் என்று ரிஷப்ஷனில் இருந்தவர் பதில் அளித்தார்.
குட்டி புல்லக்கார்ட். அதாவது வில் வண்டி. :)
அதே வண்டி பெரிய சைஸில் . ஊஞ்சலும் இருக்கு. :)
அட்டகாசமாகச் சாய்ந்து போஸ் கொடுக்கும் விநாயகர். பக்கத்தில் பச்சை சிம்மாசனம்.
நடனப் பெண்மணியின் புகைப்படத்தோடு தந்தக் கெடிகாரம், வாஸ்து மீன், கோயில் கோபுர புகைப்படங்கள்.
கீழே இருந்த கண்ணாடி டிசைன் கண்கவர்ந்தது.

தங்கும் வசதியோடு கூட காட்சி இன்பத்துக்காகவும் இங்கே இருக்கலாம்.

ரூம் ரெண்ட் 2, 700 /- ரூ. ஒரு நாளைக்கு. ஃபங்க்‌ஷன் டைமில் புல்லாக புக்காகி விடுகிறது.

இந்த ஹோட்டலுக்கு என்னுடைய ரேட்டிங் நாலு ஸ்டார். ****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 




41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  





50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி

1 கருத்து:

  1. Thulasidharan V Thillaiakathu7 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 5:29
    அழகு! கலைப்பொருட்கள். குறிப்பாக அந்த வண்டி ரொம்ப அழகாக இருக்கிறது. ஆம் காரைக்குடி வீடுகளில் கலர்க்கண்ணாடிகள் பார்த்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு

    iramuthusamy@gmail.com9 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 11:35
    பள்ளத்தூர் எம்.வி.வி ரெசிடென்சி தகவல் சிறப்பு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 7:11
    நன்றி கீத்ஸ்

    நன்றி முத்துசாமி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...