எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 பிப்ரவரி, 2021

ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.

ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.


சேலத்தின் ஹோட்டல் ஸ்ரீ ஷாந்தில் உணவும் ஓவியமும் அருமை.

ரிஸப்ஷனிலும் லிஃப்டின் அருகிலும் ஒவ்வொரு தளத்திலும், அறையிலும்  உணவுக் கூடத்திலும் கூட ஓவியங்கள் அழகூட்டுகின்றன.

உணவும் நல்லாவே இருந்தது.

வித்யாசமான புடைப்புச் சிற்ப ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்ததால் க்ளிக் க்ளிக் தான். :)


கொம்பூதியபடி செல்லும் காவலர். குதிரையில் செல்லும் ராஜா . டோலியில் வரும் ராணி. அழகுச் சிற்பம். உணவுக்கூடம் ( பஃபே ஹால் ) செல்லும் வழியில்.

மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.


மலேஷியாவுக்கு சென்றிருந்தபோது பத்துபகாட், ஜெண்டிங் ஹைலாண்ட், பெட்ரோனாக்ஸ் டவர்ஸ், ஆகிய இடங்களில் எடுத்த ஓரிரு சிறந்த ( ! ) புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு :) :) :)

இது பத்துமலைக்கோயிலில் உள்ள யானைகள் சிலை.
 



பத்துமலைக் கோயிலில் சில காட்சிகள்.

சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

சிங்கப்பூர் சென்றபோது எடுத்த ஒருசில புகைப்படங்களை ஏதோ ப்ரபல ஃபோட்டோகிராஃபர் ரேஞ்சுக்கு நினைத்து என் லாப்டாப்பில் வைத்திருந்தேன்.

லோட் அதிகமாகி அது சிக்கித் திணறுவதால் எல்லாவற்றையும் ப்லாகில் கொட்டி சேமித்து வைக்கலாம்னு எண்ணம். ஆனா ப்லாக் கூட 5000 போஸ்டுக்கு மேல தாங்காது போல

இது குறித்து டிடி சகோவிடம் கேட்க நினைத்திருந்தேன். இல்லாவிட்டால் இன்னொரு ஈமெயில் ஐடி ஆரம்பித்து வேற ப்லாக் ஆரம்பிக்க வேண்டியதுதான்.

பிரிக்க முடியாதது என்னவோ நாமும் ப்லாகும். :)

சிங்கப்பூரின் ஜப்பானீஸ் கார்டனில் உள்ள ஜப்பானிய பாணி கட்டிடம். இந்தப் பூங்காவில் கன்பூசியஸின் சிலை இருக்கு.

ஆமைப் பூங்காவில் ஒன்னுமேலே ஒன்னு ஏறிக்கிட்டுப் பண்ற அட்டகாசத்தைப் பாருங்க.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

முதல் இரண்டு புகைப்படங்களும் கோவிந்தபுரத்தில் எடுத்தது. பசுமடத்தின் வெளியே மேயும் குதிரைகள். கூடவே திரியும் கொக்குகள்.


வெள்ளைக் குதிரையின் முதுகில் ஒரு இரட்டைவால் குருவி/கருங்குருவி  !!

சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.


கலைவாணியே உனைத்தானே நினைத்தேன். பட்டாலையை அழகுபடுத்தும் மகாதேவி. 


வீணையும் மயிலும் தந்தநிற உடையும், முத்துநிற திருவாச்சியும்
செம்புநிற பீடமும் வெகு அழகு 

மாப்பிள்ளைக்குத் திருமணத்தின்போது விசிறும் 741*அலங்கார விசிறி. கலர் துணியில் 742*பட்டி பட்டியாய் வைத்து ஃப்ரில்லும் தைத்து விசிறியில் மாட்டப்பட்டிருக்கு.

குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS


பேரீச்சை எப்பவுமே சத்தான ஒன்று. தினம் ரெண்டு கொடுக்கலாம்.  




இது இரண்டும் ஃப்ரெஷ் டேட்ஸ். துபாய் பேரீச்சைகள்.
இங்கே லயன் டேட்ஸும் நல்லா இருக்கு.

வியாழன், 25 பிப்ரவரி, 2021

மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS


விதம் விதமான சிப்ஸ் & வத்தல் பிடிக்காதவங்க இருக்க முடியுமா J

சேனை, நேந்திரன், உருளை சிப்ஸும் இருக்கு.
 



காரைக்குடி சீடைக்காய் ( பாளைப்பழம்போல நீளமா இருக்கும் J )

எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS

 எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS


வெங்காய பஜ்ஜி



சோயா சங்ஸ் உருண்டை ( மீல்மேக்கர்.

ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!

ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!


ஏதோ கிரிக்கெட் வீரர் பேரைத்தான் கொழப்பிட்டேன்னு நினைக்காதீங்க. இது சேலம் ஃபேர்லாண்ட்ஸில் உள்ள ஒரு ஹோடேல் பேரு.

ஹோடெல் நல்ல வசதியான ஹோட்டல்தான். உள்ளடங்கி இருக்கு.

புதன், 24 பிப்ரவரி, 2021

பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

சிங்கப்பூர் ஜூராங்க் பேர்ட் பார்க்கிலும் மலேஷியாவிலும் காரைக்குடியிலும் எடுத்த பறவைப் புகைப்படங்கள்.

ஃப்ளெமிங்கோக்கள்.
கழுத்தை வளைப்பதைப் பார்த்தாலே நமக்கு ரொம்ப வலிக்குது. கழுத்தைச் சுருட்டி அப்பிடி என்னதான் செய்யுதுக

பழம் நல்லது - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

பழம் நல்லது - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

பழங்கள் என்னிக்குமே நல்லது. கலோரீஸ் ஏறாது. எனவே வெயிட் போடாது. வாரத்தில் ஒருநாள் பழ உணவு எடுத்துக்கலாம்.

எந்த சீசனிலும் சாப்பிடக்கூடியவை பழங்கள். உணவு சாப்பிட அரைமணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிடச் சொல்றாங்க. ஏன்னா உணவு சாப்பிட்டபின் பழம் சாப்பிட்டா அவை புளித்துப்போய் வயித்தைக் கெடுப்பதா சொல்றாங்க

விரதங்கள் இருப்பவர்கள் பெரும்பாலும் பாலுடன் பழங்கள் எடுத்துக்கொள்வார்கள். எல்லாப் பழங்களும் எடுத்துக்கலாம்

எனவே எல்லாப் பழங்களையும் விலக்காம சாப்பிடுங்க.
தர்ப்பூசணித் துண்டுகளை விதையோடயும் சாப்பிடலாமாம்.

நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.


கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் நிலவு. நான் எடுத்த புகைப்படங்கள்.

சில புகைப்பட நிபுணர்கள் நிலாவுல ஆம்ஸ்ட்ராங்க் வைச்ச காலடித் தடத்தைக் கூட எடுப்பாங்க. ஆனா நமக்கு என்னதான் இழுத்து ஜூம் பண்ணினாலும் லூமிக்ஸ் ல தென்னங்கீத்துக்குள்ள இம்புட்டு நிலாதான் கிடைச்சிது.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

ப்ளாஸ்டிக் முட்டையும் ப்ளாஸ்டிக் இட்லியும்.

ப்ளாஸ்டிக் முட்டையும் ப்ளாஸ்டிக் இட்லியும்.

ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் சரி. காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் அல்லது காம்ப்ளிமெண்ட்ரி பஃபேயில் உணவு கிடைத்தாலும் சரி. சில பொழுதுகளில் அருமையாகவும் பல பொழுதுகளில் துன்பமாகவும் அமைந்துவிடும்.

தோழமைகளோடு செல்லும் பஃபேயில் சாஸ், ஊறுகாய், சட்னி போன்றவற்றை ஒரு துளி நாவில் வைத்துச் சுவைத்தபின்பே சாப்பிடுவது வழக்கம். ஏனெனில் ஆதிகாலத்தில் செய்ததாய் இருக்கும். இல்லாவிட்டால் கண்டெயினர் மாற்றாமல் அதிலேயே கொட்டிக்கொண்டிருப்பார்களாய் இருக்கும்

அநேக ஹோட்டல்களில் பொங்கலும் கிச்சடியும் சரியாக வேகாமல் சகிக்காது. மல்லாட்டைச் சட்னின்னு ஒரு கொடுமை வேற.

கரூர் ஆர்த்தியில் மட்டுமே நான் தினம் தினம் ( ஒரு வாரம்) அற்புதமான வெண்பொங்கல் நெய் வழிய வழிய சாப்பிட்டிருக்கிறேன்.


மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.

மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.

அதாண்டா இதாண்டா ஜில் ஜில் ஜிகர்தண்டா :)

லாங்க்க்க்க் குல்ஃபீஈஈஈ

ஷேக் ஸாயத் ரோட், ஷார்ஜா & துபாய் - சில புகைப்படங்கள்

ஷேக் ஸாயத் ரோட், ஷார்ஜா & துபாய் - சில புகைப்படங்கள்


நெடிதுயர்ந்த கட்டிடங்கள், ஹோட்டல்கள் கொண்டது ஷேக் சாயத் ரோடு. பதினாறு லேன் கொண்ட இது கொஞ்சம் ஸ்பெஷலான ஒன்று.

அதன் சில கட்டிடங்களையும் சாலையையும் எடுத்திருக்கிறேன். துபாய் & ஷார்ஜாவின் கட்டிடங்கள் பெரும்பாலும் அமெரிக்கபாணி நீள் உயர ஊசிகோபுரக் கட்டிடங்கள்.

திங்கள், 22 பிப்ரவரி, 2021

கோவா.

கோவா.

”சூரியன் மணல் கடற்கரை. சுகமாக ஓய்வெடுக்க கோவா.” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.


அர்வேலம் கோவில்களுக்கு மேலுள்ள பாறையில் என் கணவர் நிற்கிறார்.

மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.


நம்மை அரசாண்டவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன். சண்டைக்கு வரவேண்டாம்பா யாரும். J

சில சிலைகள் மிக அற்புதமாகக் கரவு செறிவோடு வடிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில சிலைகள் அவர்கள்தானா என உற்று நோக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதில் இரண்டு ரகமாகவும் இருக்கின்றன. நீங்களே முடிவு செய்துக்குங்க. இது அவங்க சிலைதானான்னு. என் கண்ணோட்டத்தில் நான் எடுத்ததைப் பகிர்ந்திருக்கிறேன்.

 
தகடூர் ராஜா அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி அளிக்கும் இடம் அதியமான் கோட்டம். தர்மபுரி



அதியமான் கோட்டை என்னும் ஹோட்டலுக்குத் திரும்பும் வழியில் உள்ள ரவுண்டானா சிலை. 

மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS

 மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS


துபாய் புர்ஜ் அல் அராப் முன்பு. 




குவாலியர் கோட்டை. ராஜாக்களையும் ராணிகளையும் கண்ட உப்பரிகை அன்று எங்களையும் கண்டது. ஐ மீன் நாங்க பார்த்தோம்பா . அது எங்களை பார்த்துச்சு அவ்ளோதான்.

சேலம் கேஸிலின் ராயல் ட்ரீட் ரெஸ்டாரெண்ட்.

 சேலம் கேஸிலின் ராயல் ட்ரீட் ரெஸ்டாரெண்ட்.


சேலத்தில் கோட்டை என்றொரு இடம் இருக்கிறது. இங்கே மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில் இருக்கின்றன.




நாம் தங்கியிருந்தது சேலம் ஸ்வர்ணபுரி, பாரதிசாலையில் உள்ள சேலம் கேஸில் ஹோட்டல் ரொம்ப காம்பாக்டான இடம். ரூம் சின்னதாக இருந்தாலும் நல்ல வசதியாக இருந்தது. சேர்வராயன் மலைகளும் பாதி சேலமும் தெரியும் பால்கனி ஸ்பெஷல் அம்சம். 

கௌரிகங்கா & ரங்கவிலாஸ் டிஃபன்.

 

கௌரிகங்கா & ரங்கவிலாஸ் டிஃபன்.



கௌரிகங்கா & ரங்கவிலாஸ் டிஃபன்.

நல்ல டிஃபனை நிறைவு செய்வதே நல்ல காஃபிதான்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.


பூம்புகாரின் ஆக்ரோஷ அலைகள் கரைந்து போன நகரின் மிச்சமும் எச்சமும் என்னவோ செய்தன. 





பாச நாய்க்குட்டிகள்.

ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.

ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.

ஈரோடு பெருந்துறை ராயல் பார்க்கில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் சில கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.

ஓவியங்கள் பற்றி அதிகம் தெரியாது எனினும் ரசிக்கத் தெரியும். :)

பொதுமக்களுக்கும் நன்கு தெரிந்த பிகாஸோ, வான்கா ஆகியோரின் ஓவியங்கள் பார்த்திருக்கிறேன்.

இன்றைய நாளில் சில ஓவியங்கள் பல லட்சங்கள் விலை போவதாகச் சொல்கிறார்கள்.

சிலர் ஓவியங்களிலும் முதலீடு செய்கிறார்கள். ஓவியம் வாங்கி மாட்டுவது பெருமைக்கும் அழகுக்கும் செல்வத்துக்கும் கூட வழி வகுக்கிறது.

இந்த ஹோட்டல் ஓவியங்கள் யார் வரைந்தது எனத் தெரியாது. ஆனால் நன்கு ஃப்ரேம் செய்யப்பட்டு இருக்கும் . எங்கேயாவது ஓரத்திலாவது பேர் தெரியுதா . நம்ம கண்ணுக்குத்தான் தெரியலையான்னு பார்த்தேன். ஆனா தெரிலதான்.

இது ரிசப்ஷனில்

இது காரிடாரில்

பழனியில் சிவா.

பழனியில் சிவா.

பழனிபோன்ற திருத்தலங்களில் தங்குவதற்குப் பல சத்திரங்கள் உள்ளன. அடிவாரத்தை ஒட்டி நகரத்தார் சத்திரம், இராக்கால மடம் இதுபோல் ஒவ்வொரு சாதியாருக்கும் தங்குமிடங்கள்தான் வரிசையாக உள்ளன. இத்தங்குமிடங்களிலும் தனித்தனி ரூம், ஃபேன், படுக்கை வசதியுடன் இருந்தாலும் கழிவறைகள் பொதுவில்தான் உள்ளன.

சத்திரங்களில் எல்லாம் மகமை உண்டு. ஒருவர் , இருவர், குடும்பம் பொறுத்து அது அமையும். மேலும் அறைக்கு ரூ 100 வாடகை, அலமாரி வாடகைக்கு எடுத்தால் இவ்வளவு என்று பணம் செலுத்த வேண்டும். கார் பார்க்கிங் எல்லாம் கிடையாது.

தனி ஹோட்டல் அறைகள் என்றால் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அச்சமயத்துக்கு பாத்ரூமை உபயோகிக்க முடியும் , அதுவும் யூரோப்பியன் டாய்லெட் வசதியும் உண்டு., மேலும் குளிக்க வெந்நீர் வேண்டும்., அது போக கார் பார்க்கிங், ரூம் சர்வீஸ் & ப்ரைவஸி வேண்டும் என நினைப்பவர்கள் போர்டிங்குகளிலும் லாட்ஜுகளிலும் அறை எடுக்கிறார்கள்.

இந்த சிவா லாட்ஜில் தங்குபவர்கள் பெரும்பாலும் கேரளத்தவர்களே. பொதுவாகப் பார்க்கப் போனால் பழனி மலையில் தமிழர்களின் அளவுக்குச் சரிக்குச் சரி கேரள பக்தர்களையும் பார்க்கலாம். இங்கே கார் பார்க்கிங் வசதி ரூமுக்கு எதிரிலேயே நிறுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் சௌகரியம்.

ரிசப்ஷனிலேயே காட்சி தரும் பழனி ஆண்டவர்.
இராஜ அலங்காரன்.

மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.

மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.

மகர்நோன்புக்காக திருநெல்லைஅம்மன் கோயில் மண்டபத்தில் அம்மா மாவிளக்கு இட்டபோது எடுத்தது. :)
திருப்பதியில் திருக்கல்யாணத்தின் போது கிடைத்த பிரசாதம். பிரம்மாண்ட லட்டு. இங்கே ஆர்டிஃபிஷியலா கூட்டம் கூட்டப்படுதுன்னும். சிங்கிள் லைனில் விட்டால் காத்திருப்பு இல்லாமல் தரிசிக்கலாம்னும் வாட்ஸப்பில் ஃபார்வேர்டு மெசேஜ் வந்தது. ஓரளவு ஒப்புக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும் நாம ஏன் அந்த அரசியலுக்குள்ளே எல்லாம் போகணும். வாங்க லட்டை ருசிப்போம். ஒரே ஏலக்காய், முந்திரி, கிஸ்மிஸ், கல்கண்டு, கிராம்பு, நெய் மணக்க இத வெல்லப்பாகுல செய்றாங்களா இல்ல சீனிலயா.. ரொம்ப டேஸ்டி லட்டு.

சனி, 20 பிப்ரவரி, 2021

தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

பொதுவாக விநாயகர், அம்மன் போன்ற சிலைகளையே நடுநாயகமாகப் பார்த்த நமக்கு தர்மபுரி அதியமான் அரண்மனை ஹோட்டலில் புத்தரைப் பார்த்ததும் வித்யாசமாக இருந்தது. ( ஒரு வாரம் தங்கியும் தர்மபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும் அதியமானின் புராதனக் கோட்டையைப் பார்க்காமல் வந்துவிட்டோமே என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. டாக்ஸிக்காரர்கள் கோட்டத்தையே கோட்டை என்று காட்டுகிறார்கள். கொடுமை ஹ்ம்ம். )


இங்கே ஓடும் வாடகைக் கார்களிலும் கூட விநாயகர் உருவம் இல்லாதது என்னவோ போலிருந்தது. இறைவழிபாடும் கடவுள் நம்பிக்கையும் தமிழ் நாட்டிலும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது என உணர்ந்தேன்.

// கிமு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில் தன் நாட்டுக்கு வெளியே உள்ள சத்யபுத்திரர் ஆளும் நாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் எனச் சிலர் கருதுகிறார்கள் //

இந்த நோக்கில் பார்த்தால் இங்கே புத்தரும் பௌத்தமும் அதிகம் வேரோடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜம்பை என்னுமிடத்தில் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றில் சமண முனிவருக்கு ’சதியபுதோ அதியந்  நெடுமாந்  அஞ்சி’ கற்படுகைகள் வெட்டிக் கொடுத்திருப்பதாகவும் பொறிக்கப் பட்டிருக்கிறது. எனவே அக்காலத்தில் இவ்வூர்ப் பகுதிகளில் சமணமும் பௌத்தமும் சிறந்து விளங்கி இருக்கின்றன எனத் தெரியவருகிறது.

சைவக் கோயில்களுக்குத் திருப்பணி செய்தது போல சமணப் பள்ளிகள் அமைத்தும் சமணக் குடைவரைக் கோயில்களைப் புதுக்கி அமைத்தும் கொடுத்துள்ளான் இவ்வரசன்.

இனி ஹோட்டல் அதியமான் அரண்மனை  பற்றி.
மெய்யாலுமே அரண்மனைதான்.

நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.

நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.

ஒரு வாரம் பொள்ளாச்சி நிவேதா இன்னில் தங்கும் சந்தர்ப்பம் அமைந்தது. இது காந்தி ரோட்டில் இருக்கு. இதன் கீழேயே நமக்கு மிகவும் பிடித்த கௌரி கிருஷ்ணா ஹோட்டல். இந்தக் காப்பிக்காகவே இங்கேயிருந்து கிளம்பவே பிடிக்கலை.

ரூம் வாடகை இருவருக்கு  ரூ990/- தான். அதுனால இங்கே காலையில் பஃபே எல்லாம் கிடையாது. ஆனால் கீழே தோசைரோஸ்டும். அதன் பக்கவாட்டில் இருக்கும் குட்டி ஹோட்டலில் இருந்து தயிர்வடையும் ராகி வடையும் காஃபியும் ஆஹா ஓஹோதான். இங்கே உள்ள உணவுகள் பத்தி தனி இடுகை போடுகிறேன் பின்பொருமுறை.

சில தினங்களைக் கறுப்பு தினங்கள் என்பார்கள். இங்கே நிவேதா இன்னில் எல்லாமே வண்ணமயமான தினங்கள்தான். ஒரு வாரம் இருப்பதால் அங்கே டாப் ஸ்லிப், திருமூர்த்திமலை எல்லாம் போகலாம் என்றிருந்தோம். நவம்பர் எட்டு அன்று இரவு தொலைக்காட்சியில் பிரதமர் தோன்றி ஐநூறு ஆயிரம் செல்லாது என்கிறார். ஒரே அல்லோல கல்லோலம்தான். அன்று நிறமிழந்த தினமாக இருந்தது.

சுற்றிலும் இருக்கும் ஹோட்டல்கள் , கடைகள், மனிதர்கள் எல்லாம் ஒரே பரபரப்பு.  இருக்கும் ஐநூறு ஆயிரத்தை மாற்ற முடியாமல் சாப்பாடு அத்யாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமம்.ஆனால் நாம் யாரு சிறுவாட்டில் கில்லியாச்சே.

நிவேதா இன்ன் ஹோட்டலில் ரெண்ட் எல்லாம் கார்டு பரிவர்த்தனை. அதனால் பிரச்சனை இல்லை. ஆனால் புவா ??. ரங்க்ஸிடம் ஓரளவு இருந்தது. ஆனால் அவர் நண்பர் ஒருவருக்கு அத்யாவசியத் தேவை . அவரிடம் ஐநூறு ஆயிரம் தவிர வேறில்லை. என்னிடம் இருப்பதை சொல்லியாச்சு. உடனே அவசரத்துக்கு  உதவணும் என்று சொல்லி இருந்ததில் கணிசமான நூறை ( நமக்கு வேணுமே என்று மொணமொணத்துக் கொண்டே , இன்னொரு பர்சிலும் சேமித்து வைத்திருந்தேன் :)  ) கொஞ்சம் எடுத்துக் கொடுத்தேன்.

சொல்லப் போனா அந்த ஒரு வாரமும் நம் வாழ்க்கையில் வாங்கிய வைத்திருக்கும் தங்கம் வெள்ளி வைரம் கூடப் பொருட்டில்லை கொடுத்திருவோம் போல ஆனா நூறு, ஐம்பது ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிய விதம் இருக்கிறதே அப்பப்பா. நம்மை நமக்கு இனம் காண்பித்த நிகழ்ச்சி.

அது போக திருடன் வந்தா வால்யுபிள் எல்லாம் திருடாம ரூபாய் நோட்டைத் திருடிக்குவானோ என்று அதை பர்ஸுக்குள் போட்டு இன்னொரு பர்ஸுக்குள் போட்டு பேகில் மடித்து சூட்கேஸில் வைத்து நம்பர் லாக் போட்டு ஹிஹி இதெல்லாம் நாம்தான் செய்தது. ரூபாய் முக்கியமில்லா மக்கா. அப்பத்தானே அடுத்த வேளை புவா வாங்க முடியும். :) கீழே உணவு ஹோட்டல்காரர்கள் கார்டுக்கும் ஒப்புக்கல.

அதன் பின் நாம சுகமா சௌக்கியமா ஊர் வந்து சேர்ந்தோம். முடிந்தவரை தேவைப்பட்டவருக்குக் கொடுக்கவும் செய்தோம். ஆனா மனதுக்குள்ள நாம் எப்பிடிப்பட்ட ஆளுன்னா நமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்பது புரிந்துவிட்டது.  :) :) :)

இப்போ நிவேதா இன்ன் பத்தி.

அங்கே ரிஸப்ஷனில் வரவேற்கும் விநாயகர். கெபி போன்ற அமைப்பு.
மிக விசாலமான அறைகள். முதலில் தங்கின ரூம் கீழே இருந்த கிச்சனுக்கு அருகில். அதனால் சத்தம் அதிகம் கேட்டது.

ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

அப்பாவும் சின்னத்தாத்தாவும்.
மஞ்சு விரட்டு பார்க்க வந்த கூட்டம். சுமார் அரை கிலோமீட்டருக்கு முன்பே இவ்வளவு வண்டிகள்.

சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

சும்மா சில க்ளிக்ஸ்.

எல்லாத்தையும் பொறுப்போடதான் செய்யணுமா. சிலதை அப்பிடியே எடுத்துப் போட்டா என்ன. பல மாதங்களுக்கு முன்னாடி  சுத்தம் செய்யாம வைச்சிருந்த ஷோகேஸ் பொம்மைங்களைப் பார்த்தேன். எடுத்தேன்.

புள்ளைங்க மட்டும்தான் பொம்மையை வச்சு விளாடணுமா. ப்லாகில் கூட விளையாடலாம்தானே. ஹிஹி.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS. 

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

நண்பர் ஒருவரின் மகனது திருமண ரிசப்ஷன் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடந்தது. சினிமாக்களில் வருவது போல உள்ளே நுழைந்ததும் ரொம்ப க்ராண்ட் பால் ரூம். அங்கங்கே தீ லாவுவது போன்ற செட்டிங்ஸ் ’கொஞ்சம் நெருப்பு, கொஞ்சம் நிலவு” பாடல் பார்த்தது போன்ற சிலிர்ப்பையும் பரபரப்பையும் ஊட்டியது. சென்னையில் இருக்கும் மிகப் ப்ரமாதமான ஹோட்டல்களில் ஒன்று.
கலைமாமணி ராஜேஷ் கவுரவிக்கப்படுகிறார். வெளிநாட்டு விருந்தினர்கள் கூட்டம் அதிகம். என்னைஅதிகம் கவர்ந்தது பர்ப்பிள் கலரில் அமைக்கப்பட்ட திருமண மேடையும் அந்த ஷாண்ட்லியர்களும் . :).

திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

திருப்பூரில் ஆரவாரமிக்க குமரன் ரோட்டில் உள்ள மிக அமைதியான ஹோட்டல் தி ஹோம். ELIGANT ROOMS. அழகான காரிடார். ரிஸப்ஷன் தான் சின்னமா இருக்கு. நாம் என்ன அங்கேயேவா ஃபுல் டைமும் உக்காந்திருக்கப் போறோம்.பட் நல்ல வெல்கமிங் ரிஸப்ஷன். 

மிக அழகான ரிஸைடிங் ப்ளேஸ். விசாலமான ரூம்.  நல்ல வசதியான கௌச். ரீடிங் அண்ட் காஃபி சாப்பிட ஏதுவான இடம்.
டைனிங் டேபிள் வித் சேர். கீழே சில்வர் டஸ்ட் பின்.

மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

ஒரு பாரம்பரிய வீட்டில் எடுத்த ஷாட்ஸ். :)

துளசி இருக்கும் தொட்டியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.
ஓங்கி உயர்ந்த துளசி.

மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

 

சாலையோர வியாபாரிகள் என்று எடுக்கவில்லை. எடுத்தபுகைப்படங்களை ஒழுங்கமைத்துப் போட்டுள்ளேன். :)

#கருமமே கண்ணாயினார்.

நுங்கு சம்மர் ஃபேவரைட்
#என் பாதைக்கு நான் ராஜா.

வியாழன், 18 பிப்ரவரி, 2021

பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.

பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.

பெருந்துறை ராயல் பார்க்கில் இருநாட்கள் தங்க நேர்ந்தது. பக்கத்தில்தானே செங்கோட்டு வேலவனும் திண்டல் வேலவனும். இருவரையும் தரிசிக்க இருநாட்கள் வேண்டுமே.

பெருந்துறை ராயல் பார்க் காம்பாக்டான ஹோட்டல். ரூம் சர்வீஸில் காஃபி மட்டுமே அருந்தினோம். இதோடு ஒட்டிய செட்டிநாடு ராயல் பார்க் ஹோட்டல் இருக்கு . ஆனால் அதன் உணவு பிடிக்கல..காலை பஃபே உண்டு. அது பற்றியும் ராயல் பார்க்கின் அழகு ஓவியங்கள் பற்றியும் அடுத்த இடுகைகளில் விரிவா சொல்றேன்.
டாலி வேலைக்கு ஆட்கள் தேவையாம், விருப்பமுள்ளவர்கள் அணுகலாம். :)
பக்கத்திலிருக்கும் ராயல் செட்டிநாட்டு ஹோட்டல் சுவரில் பெயிண்டிங். நான் இது பத்தி சொல்லல. இன்னும் சிறப்பான பெயிண்டிங்க்ஸ் ஹோட்டல் லாபிகளில் இருக்கு.

மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

 மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

ஆரோக்ய உணவுகள் என்ற தலைப்பில் தொகுத்து அளித்திருக்கிறேன். நம் நாட்டு பாரம்பரிய மாலை உணவுகளான அவிச்ச வேர்க்கடலை, பட்டாணி, கொண்டக்கடலை சுண்டல், பனங்கிழங்கு, சோளக்கருது, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கொழுக்கட்டை, ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ், இவையே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மாலை உணவுகளாகும்.

ஃபாஸ்ட் ஃபுட்டை எல்லாம் ஒதுக்கிட்டு இந்தப் பாரம்பரிய உணவை குழந்தைகளுக்குப் பழக்குங்க. அப்புறம் ஃபோலிக் ஆசிட் குறைபாடு, கண் பார்வைக்குறைபாடு, சத்துக்குறைச்சல் , ரத்தசோகை, எல்லாம் வரவே வராது.

இரும்புச்சத்து, புரதம், விட்டமின்ஸ், மினரல்ஸ்,துத்தநாகம், மக்னீஷியம் நிரம்பிய உணவுகள் இவை.

பிள்ளையார் பட்டியில் ஒரு சுண்டல் கடை. அந்தப் பல்லுப்பல்லா சீவின மாங்காய் நெம்ப அழகா இருக்கில்ல. :) சுண்டலுக்கு டேஸ்டே கீத்துத் தேங்காயிலும் பல்லு மாங்காயிலும்தான் ஒளிஞ்சிருக்கு. பட் ரங்ஸுக்கு வெங்காயம் கேரட் தக்காளி எலுமிச்சை கொத்துமல்லிக் கலவைதான் பிடிக்கும். :)
அவிச்ச பனங்கிழங்கு, இதுவும் பிள்ளையார்பட்டிதான்.

சுடச் சுட டிஃபன்.

சுடச் சுட டிஃபன்.

காலை உணவு என்பது இன்றியமையாதது. ஒரு துண்டு ரொட்டியாவது சாப்பிட்ட வேண்டும். பலமணி நேரம் காலியாகக் கிடக்கும் வயிற்றுக்கு சரிவிகித உணவு கொடுத்தால்தான் மயக்கம், உடல் சோர்வு, நாளடைவில் தோன்றும் பல்வேறு வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம்.

மூளை & கண்ணுக்கு அதிகம் வேலை கொடுப்பவர்கள் கார்போஹைட்ரேட் ஓரளவு எடுத்துக்கணும். ஏன்னா கார்போஹைட்ரேட் உணவுகள்தான் போதுமான இயங்கு சக்தியை கொடுக்குது. அட்லீஸ்ட் ரெண்டு இட்லியாவது எடுத்துக்கணும்.

ஒரு ஜான் வயித்துக்குத்தானே உழைக்கிறோம். அதை அலட்சியப்படுத்திட்டு அப்புறம் அதிகப்படி அமிலம் சுரந்து அல்சர், வாய்ப்புண், சீரற்ற இரத்த அழுத்தம் உடல் எடை குறைவு , பலகீனம் தாக்காம தப்பிக்கலாம்.

பேலியோ போன்றவற்றில் அதிக புரதம் எடுத்துக்குறாங்க. ஒவ்வொருவர் உடல் நிலைக்கும் தக்கவாறு மருத்துவர் ஆலோசனையின் படி அதையும் பின்பற்றுவது நலம்.

இயற்கை உணவுகளோ, சமைத்த உணவுகளோ காலை ஆகாரம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று.  எனவே என்னுடைய உணவுப் புகைப்படங்களை இத்துடன் பகிர்ந்துள்ளேன். இதைப்பார்த்துப் பசியெடுத்து ஒழுங்கா சாப்பிட்டீங்கன்னா நலம்.. நலமறிய ஆவல். :)

ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தபோது ஆர்டர் செய்த காலை உணவு ( இருவருக்கு :) ( அநேகமா கோவை ஆர்வி யாக இருக்கும். ) சப்பாத்தி & மசால் தோசை.
அவிநாசி ரோட்டில் இருக்கும் சரவணபவனில் மல்லி சேவை.

மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும். MY CLICKS.

மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும். MY CLICKS.

அடி மஞ்சக்கிழங்கே என்ற பாட்டு ஞாபகம் வந்தது இந்த மஞ்சள் மீனைப் பார்த்ததும்.
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா கிருஷ்ணா என்ற தசாவதாரப் பாடல் நினைவுக்கு வருதுல்ல :)  அலமாரில ஒட்டுற மாக்னெட் கிருஷ்ணா. கிளியைப் பார்க்கும் கிருஷ்ணா எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது :)

புதன், 17 பிப்ரவரி, 2021

பயண உணவுகள். பால் ஜலேபி.

பயண உணவுகள். பால் ஜலேபி.

பயண உணவுகள் பயணப் பாதைகளிலும் பயணம் முடிந்த பின்னும் கிடைத்தவை. நாம் பயணித்துச் சென்ற சில ஊர்களில் உணவுப் பிரச்சனை ஏற்படுவதுண்டு. சாதம் ஒரு வேளையாவது வேண்டும் என்பதால் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் எடுத்துச் செல்வதுண்டு. ஆனால் சில உணவுகள்  ரங்க்ஸ் அலுவலகம்  சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் இல்லத்தரசிகள் நம் மேல் அன்பாகச் செய்து அனுப்பியவை. !

சில நண்பர்கள் இல்லத்தில் அருந்தியவை. பயண உணவு என்பதன் ஸ்பெஷல் என்னன்னா அது உடல்நலத்தைக் கெடுக்காததா இருக்கணும். எந்த உபாதையையும் உண்டாக்காம நம்ம நாக்கோட டேஸ்ட் பட்ஸையும் உயிர்ப்பிக்கணும். இங்கே நான் போட்டிருக்க எல்லாமே அப்பிடி நம்மை உயிர்ப்பிச்சவை. நன்றி அனைவருக்கும். !

சிலது ட்ரெயின் சிலது ஹோட்டலில் சாப்பிட்டதும் இருக்கு.

இது ரங்க்ஸ் சாப்பிடாம கொண்டு வந்தது. தன்பத் எஸ்ப்ரஸ்னு நினைக்கிறேன்.

அன்பிற்குரிய தோழி ராமலெக்ஷ்மி இல்லத்தில். :)

சண்டே ஹோ யா மண்டே..

சண்டே ஹோ யா மண்டே..

மேரி ஜான் மேரி ஜான் என்றொரு பாட்டு கேட்டிருப்பீங்க. அதுல ’சண்டே ஹோ யா மண்டே ரோஜ் காவோ அண்டே’ என்று பாடுவாங்க. அப்பிடின்னா. ’எல்லா நாளுமே முட்டை சாப்பிடுங்க’ என்று முட்டைக்கான விளம்பரப் பாட்டு அது. பேலியோ டயட்ல கூட ஒவ்வொரு வேளையும் ரெண்டு அவிச்ச முட்டை சாப்பிட சொல்றாங்க. காய்கறிகளோட..

முட்டை அசைவமா சைவமான்னு சர்ச்சைக்குள்ள நான் போக விரும்பல. அது வேற டிபார்ட்மெண்ட். நாம் இப்ப ஒன்லி நியூட்ரீஷனல் & ஹெல்த் டிபார்ட்மெண்ட் பத்திப் பேசுவோம்.

வயசானா பால் & முட்டை ஓரளவு எடுத்துக்கணும். எலும்புகளில் கால்ஷியம் சத்து குறைஞ்சிட்டே வர்றதால காஃபியையே நாலு வேளை மண்டாம ( இல்லாட்டி டீயை மண்டாம-- என்னச் சொன்னேன் :)  ) ஒரு நேரம்.. அதாவது டிஃபன் சாப்பிட்ட பின்னாடி பால் & இரவு சாப்பிட்ட பின்னாடி பால் எடுத்துக்கலாம். ( அது ஏ1 ஆ இல்ல ஏ2 வாங்கிற சர்ச்சைக்கும் நாம் போக வேண்டாம். பசுமாட்டுப் பால் நல்லது :)

அப்புறம் அசைவம் சாப்பிடுறவங்க வாரம் மூணு முறையாச்சும் அவிச்ச முட்டை எடுத்துக்குங்க. அது வாய்வு பிடிக்கும்னா பூண்டு போட்டு தாளிச்ச முட்டைப் பொரியல் இல்லாட்டி மிளகு வெங்காயம் போட்ட ஆம்லெட் இல்லாட்டி வெஜிடபிள் ஆம்லெட்டா சாப்பிடலாம்.

வயதாவதால் கால்ஷியம் குறைபாடால எலும்பு தேய்வது, குட்டையாக தோற்றம் தருவது இதை எல்லாம் இது தவிர்க்கும். மேலும் கண்பார்வைக்கும் நல்லது. சரிவிகித ப்ரோட்டீன் இருக்கு.  சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் கூட இன்றியமையாதது.

வாங்க பட்டையக் கிளப்புவோம் முட்டைப் பிரியர்களே.

இது #அவிச்ச முட்டை . மிளகு உப்பு போட்டு பிரட்டி இருக்கு. ( ஹார்லிக்ஸ்  விளம்பரம் மாதிரி அப்பிடியே சாப்பிடலாம் :)
 
முட்டையை அடிச்சு பொடியா அரிஞ்ச வெங்காயம் பச்சைமிளகாய், உப்பு மிளகுத்தூள் போட்டு வேகவைச்சு வெட்டி குழம்புல போட்டுருக்கு. இதுக்குப் பேரு #கேக் முட்டைக் குழம்பு.

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...