சொர்ரென்டோ கெஸ்ட் ஹவுஸ்.
சென்னை அண்ணா நகர் பாலாஜி பவனின் மேல் அமைந்திருக்கும் சொர்ரென்டோ கெஸ்ட் ஹவுஸ் நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்ற அழகான தங்குமிடம். இருவர் தங்க ஒரு நாளைக்கு ரூ 900/- மட்டுமே. ஏதாவது விசேஷம் என்றால் சென்னை செல்பவர்கள் அங்கே தங்கலாம். காலை மட்டுமே என்றால் இன்னும் இருவரும் கூட தங்கலாம்.
ட்ரெயினை விட்டு இறங்கியதும் கால்டாக்சியில் அண்ணாநகர் வந்தாச்சு. ரவுண்டானா அருகில் என்கிறார்கள். எம்மாடியோ அண்ணா நகரில் எத்தனை ரவுண்டானா . அத்தனையும் தாண்டி சிந்தாமணி அருகில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது.
சொர்ரென்டோ என்ற பெயர் இடாலியாக இருந்தாலும் ரூமின் அமைப்பு ஏதோ கோவாவில் அமைந்திருந்த ஹோட்டல்கள் போல் போர்ச்சுக்கல்/ பிரெஞ்ச் பாணி கட்டிடக்கலையை ஞாபகப்படுத்தியது.
பாலாஜி பவனில் காபி ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட அங்கே தங்க வைத்திருந்த ஹோஸ்ட் குடும்பத்தாரின் உறவினர் மிகப்பெரும் காபி பிளாஸ்க்குடன் கதவைத் தட்டினார். சாப்பிட்டுவிட்டோம் என்று கூறிவிட்டு ஃபங்க்ஷனுக்கு ரெடியானோம்.