எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ANANDHAPADMANABA SWAMY TEMPLE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ANANDHAPADMANABA SWAMY TEMPLE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

திருவனந்தபுரம், அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்று வந்தோம். மிகப் பிரம்மாண்டமான கோபுரம். நடைகள். ஸ்ரீரங்கப்பட்டினா ஆதி ரங்கநாத சுவாமியைப் போல திருச்சி ஸ்ரீரங்கனைப் போல என்னைக் கவர்ந்தவர் அனந்தபத்மநாபசுவாமியும். திருவட்டாறு ஆதிகேசவர் கோவில் போல அமைந்திருக்கிறது இக்கோவில் என்கிறார்கள். பெருமாளுக்கு நேர் கீழேதான் நிலவறை இருக்கிறது.

இங்கே அனந்த சயனத்தில் கிடந்த கோலம். அதனால்தான் அனந்த பத்மநாபர். மூன்று கதவுகளின் வழியே சுவாமியைத் தரிசிக்க வேண்டும். முதல் கதவில் திருவடி தரிசனம், அடுத்ததில் நாபிக்கமலம் பிரம்மாவோடு, மூன்றாவதில் முகவடிவு தரிசனம்.  தைலக்காப்பில் தகதகக்கிறார் பெருமாள். பிரம்மாண்டம்.

தெற்கு வாயில் வழியே சென்றோம். ஆண்கள் சட்டை அணியாமல்  வெற்றுடம்புடன் துண்டு போர்த்தி வேஷ்டி அணிந்து செல்லலாம். செல்ஃபோனையும் இன்ன பிறவற்றையும் அவர்களிடம் ஒப்படைத்து சேஃப்டி லாக்கரில் வைத்து விட்டுச் செல்லவேண்டும். லாக்கர், வேஷ்டி, துண்டுக்கு தனியாகப் பணம் கட்டி வேண்டும்.

பயங்கர செக்யூரிட்டி கெடுபிடி. பின்னே நிலவறையில் டன் கணக்கில் தங்கம் இருக்கின்றதல்லவா. திரு அனந்தபுரம் என்ற பேரே இவரால்தான் ஏற்பட்டது.

தென்னிந்தியா ஸ்டைலில் கோபுரம். முதலில் இந்த ஆற்றுக்கால், ஆலாபாட், கல்யாண் ஆகிய நகைக்கடைகளையும் முத்தூட் ஃபைனான்ஸையும் கடந்து கோவிலுக்குப் போவோம் வாங்க.

இது ஏதோ 1891 இல் கட்டப்பட்ட காவல் கோபுரம் போல் இருக்கு. மார்க்கெட் பகுதி.


வங்கி போலத் தெரியுது.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...