எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பெங்களூரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெங்களூரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஏப்ரல், 2021

பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 2. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.

பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 2. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.

பசுமைப் பாதைகள். இருந்தும் இந்தச் சாலையில்தான் மிகுந்த விபத்துகள் நிகழ்கின்றன. ஓரிரு இடங்களில் மெதுவாகச் செல்லவும் என ஆடியோவே ஒலிக்கிறது. இருந்தும் வேகமாகச் சென்று ஆக்ஸிடெண்ட் ஆக்குகிறார்கள் மக்கள். 

பெங்களூரு ஹைவேஸில் எடுத்த புகைப்படங்களின் மீதிப்பகுதியை இங்கே பகிர்கிறேன்.


வெள்ளி, 23 ஏப்ரல், 2021

பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 1. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.

பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 1. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.

 கரூரில் இருந்து பெங்களூருக்கு இருமுறை காரில் சென்று வந்தோம். வழு வழுவென்று சர்க்காரு ரோடு.  பக்கவாட்டில் விதம் விதமான மலைகள். ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்குகள் போல க்ரீன் ஃபாரஸ்ட் மவுண்டன்கள். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக ரசித்துப்  பார்த்த காட்சிகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன். இந்தப் பாதை மிக அழகாக இருக்கும் என்பது தெரியாததால் முன்பே க்ளிக் செய்யாமல் விட்டுவிட்டேன். திடீரென செல்லை ஓபன் செய்து எடுத்தால் அழகான வளைவுகள் உள்ள அந்த இடங்கள் எல்லாம் கடந்ததும் ஏதோ க்ளிக் ஆகி இருக்கின்றன !. 

சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஹோசூர், பெங்களூர் இதுதான் ரூட். அது கொரோனா காலம் என்பதால் ஈ பாஸ் வாங்கி ஒட்டி இருந்தோம். எனவே அது காரின் முன் கண்ணாடியை மறைக்கிறது :) கிடைத்தவற்றைச் சுட்டிருக்கிறேன். 

மாஸ்க், சானிடைஸர் சகிதம் கார்க் கண்ணாடியையும் இறக்காமல் சென்றதால் புகைப்படங்கள் மங்கலாகத்தான் தெரிகின்றன. 


வெள்ளி, 9 ஏப்ரல், 2021

உதிரிப்பூக்கள்.

உதிரிப்பூக்கள்.

 உதிரிப்பூக்கள். லால் பாக் ஸ்பெஷல்.


மலர்க் கூட்டமும் காய்கறித் தோட்டமும்.

மலர்க் கூட்டமும் காய்கறித் தோட்டமும்.

லால்பாகில் எடுத்தபடங்கள் உங்கள் பார்வைக்கு. :) 


சிலுவை வடிவில் மலர் வளர்ப்பு :) 

அஸ்டில்ப் , டயாந்தஸஸ் & மாஸஸ் ப்ளூ.

அஸ்டில்ப் , டயாந்தஸஸ் & மாஸஸ் ப்ளூ.

இவைதான் அஸ்டில்ப்ஸ். இதுக்கு பேர் தேடி காடு மேடெல்லாம் அலைஞ்சேன். ஹாஹா. ஆனா இது வயலோரம் வளரும் செடியாம். மேலும் கம்மாக்கரை ( வெளிநாட்டில் ) யை ஒட்டி வளரும் புதர்ச் செடி வகை. இதை புஷஸ், ஷ்ரப்ஸ், நீடில் ஃப்ளவர் என்றெல்லாம் செர்ச் செய்து அதன் பின் ஃபோட்டோவை அப்லோடிக் கண்டுபிடித்தேன். :)



புசு புசுன்னு கொள்ளை அழகுல்ல.கண்கவர் வண்ணங்கள் வேறு.

அந்தூரியம் நாஸ்டுர்டியத்துடன் பான்ஸி.

அந்தூரியம் நாஸ்டுர்டியத்துடன் பான்ஸி.

அந்தூரியம் பூக்களை நான் வெண்மை நிறத்தில்தான் பார்த்துள்ளேன் அநேக இடங்களில் ஆனால் லால் பாகில் லால் அந்தூரியம் பார்த்தேன். கொள்ளை அழகு. 

வியாழன், 8 ஏப்ரல், 2021

இரட்டை நிறப் பெட்டூனியா..

இரட்டை நிறப் பெட்டூனியா..

ஒரே நிறத்தில்தான் பெட்டூனியாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் லால் பாகில் இரட்டை நிறப் பெட்டூனியாக்களையும் பார்த்தேன். கொள்ளை அழகு. ஏப்ரல் பூப் போல ஒரு காகிதப் பூத் தன்மை இவற்றின் இதழுக்கு.  அந்தப் பூக்களின் அழகை நீங்களும் கண்டு களியுங்கள்.



சிவப்புப் பெட்டூனியாவும் வெள்ளை ரோஸ் பெட்டூனியாவும் ஜோடியாய். 

விதம் விதமாய் சில டெய்ஸிக்களே..

விதம் விதமாய் சில டெய்ஸிக்களே..

டெய்ஸிக்களில் இத்தனை வகை இருப்பதை அன்றுதான் பார்த்தேன். எல்லா நிறத்திலும் இருக்கின்றன டெய்ஸிக்கள். மலர்ப் புன்னகையில் வீழுந்து எழுந்தேன். அந்த மென்னகையில் நீங்களும் கொஞ்சம் தோய்ந்து எழுங்களேன். 




புதன், 7 ஏப்ரல், 2021

லால்பாகில் ஒரு சாரல் நடை.

லால்பாகில் ஒரு சாரல் நடை.

லால்பாகில் தினம் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் ஏராளம். வாங்க நாமும் போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வரலாம். :) 





இது ஒரு மாலை நேரம். அதனால் காய்கனி விழாவுக்கும், மலர்க்கண்காட்சிக்கும்  வந்தவங்க ஃபோட்டோ எடுத்துக்கிட்டு இருக்காங்க. :) தூரத்தே மண்ணின் மைந்தராம் உழவரின் சிலையைப் பாருங்க 

ரோஜாப் பூந்தோட்டம் - 2.

ரோஜாப் பூந்தோட்டம் - 2.

ரோஜா என்றதும் நேரு மாமா நினைவுக்கு வந்தால் நீங்கள் 70ஸ் கிட் என்று அர்த்தம். :) இங்கே அநேக நிற ரோஜாக்கள் வரிசை கட்டி நிற்கின்றன.  

ரோஜா இதழ்களை நீரில் போட்டு அருந்தினாலே சுவாசப் புத்துணர்ச்சியும் வாயில் நறுஞ்சுவையும் கிடைக்கும். 


திருமணங்களில் ஜோதிகா மாலை என்று ஒன்று ரோஜாவின் இதழ்களைக் கொண்டு தயாரிப்பதுதான். 

கோவில் மாலை அல்லது திருமண மாலையில் உதிர்ந்த ரோஜா இதழ்களைக் காயவைத்து ஸ்நானப் பொடி, சீகைக்காய்ப் பொடி ( இதனுடன் போட்டு அரைப்பார்கள் )  தயாரிக்க உபயோகிப்பார்கள். 


அலமாண்டா சைஸ்லில் மஞ்சள் ரோஜாக்கள்.

ஸ்பீக்கர் பூவும் பெல் பூவும்.

 ஸ்பீக்கர் பூவும் பெல் பூவும்.

ஹைபிஸ்கஸ், ஹோலிஹாக் இவற்றைத்தான் ஸ்பீக்கர் பூன்னு சொல்லி இருக்கேன். பார்க்க செம்பருத்திப்பூ மாதிரி இருக்கும் இவற்றின் இதழ்கள் குட்டையானவை. ஓரளவு கெட்டியானவையும் கூட. 




இவற்றில் பல்வேறு வண்ணங்கள் உண்டு. இங்கே வெள்ளை, வெளிர் சிவப்பு,  டார்க் மெரூன் ஆகிய நிறங்களில் காணக் கிடைத்தன.

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

பெங்களூரு டு பிருந்தாவன். மை க்ளிக்ஸ். BENGALURU TO BRINDHAVAN. MY CLICKS.

பெங்களூரு டு பிருந்தாவன். மை க்ளிக்ஸ். BENGALURU TO BRINDHAVAN. MY CLICKS.

பெங்களூரூ டு பிருந்தாவன். மை க்ளிக்ஸ். 

பெங்களூருவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டினா வழியாக மைசூரை அடைந்தோம். வழியில் பத்மநாப ஸ்வாமி கோவில், சாமுண்டி ஹில்ஸ், திப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில் ஆகியவற்றை இடுகைகளாகவே போட்டிருக்கிறேன்.

எனவே சாலையில் பயணிக்கும்போது பேருந்திலிருந்து எடுத்த புகைப்படங்கள் இங்கே அணிவகுக்கின்றன. பெங்களூருவும் மைசூருவும் செடி கொடி வகைகள் நிறைந்து கானகம் போல் செழிப்பானவை. 

மசூதி, சர்ச், இந்துக் கோவில்கள் என அனைத்துக்குமே பஞ்சமில்லை. நீர் வளத்தாலும் நல்ல செழிப்பமான ஊர்கள். மன்னராட்சி இல்லாவிட்டாலும் மைசூரு உடையார் மன்னர்களின் மேல் மிகுந்த அபிமானம் கொண்ட மக்கள். 



ஸ்ரீரங்கப்பட்டினாவில் ஒரு கடையின் முன்புறம் குழலூதும் கிருஷ்ணன்.

ரோஜாப் பூந்தோட்டம் - 1

ரோஜாப் பூந்தோட்டம் - 1

முள்ளில்லா ரோஜா,ரோஜாப் பூந்தோட்டம், ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம், ரோஜா ரோஜா, ரோஜா மலரே ராஜகுமாரி.. என்றெல்லாம் பாடல்கள் கேட்டிருப்பீர்கள். தோட்டத்தின் ராஜா என்றைக்கும் ரோஜாதான். 

ரோஜாவைப் பதியமிட்டு வளர்த்தாலே வளரும். செடியின் தண்டை வெட்டி ஊன்றுதல்தான் பதியமிடுதல். இது தொட்டியிலும் வளரும் செடி.பால்கனிச் செடின்னும்சொல்லலாம். வீட்டுக்கு அலுவலகத்துக்கு அழகூட்டக்கூடியது மட்டுமல்ல. நறுமணமும் நிறைந்தது. இதிலிருந்து செண்ட், ஸ்ப்ரே எல்லாம் தயாரிக்கிறாங்க. குல்கந்து, ரோஸ்வாட்டர் ( ரோஸ் மில்க் )  போன்றவையும் தயாரிக்கிறாங்க. இதில் சிறிதளவு விட்டமின் சி யும் இருக்குங்குறது ஆச்சர்யப்படத்தக்க செய்தி. இனி லால் பாகில் ஃப்ளவர் ஷோவில் நான் எடுத்த விதம் விதமான ரோஜாக்கூட்டத்தைப் பார்ப்போம் வாங்க. 



வெள்ளை, வெளிர் மஞ்சள், வெளிர் பிங்க் நிற ரோஸ்கள். 

சிவப்பு ரோஜாக்கள்.

சிவப்பு ரோஜாக்கள்.

சிவப்பு ரோஜாக்கள் என்றொரு மர்மப்படம் வந்து அனைவருக்கும் திகிலைக் கிளப்பியது. ரோஸ் நிற ரோஜாக்களை விட சிவப்பு ரோஜாக்களே காதலைச் சொல்லப் பயன்படுகின்றன. பள்ளி கல்லூரி படிக்கும்போது பின்னல் ஜடையில் வலது அல்லது இடது காதோரம் ரோஜாவை வைத்துக் கொள்வது அந்தக்கால ஃபேஷன். ரோஜா வைத்ததும் அந்தப் பெண்ணின் கவர்ச்சி அதிகமாகிவிடும் என்பது கண்கூடாகக் கண்ட உண்மை. பெண்களின் மனதை மென்மையாக்கும் காதலில் ஆழ்த்தும் சக்தி ரோஜாவுக்கு உண்டு. அதைக் காணும் ஆண்களின் மனத்தையும். 

க்ரேக்க காதல் தேவதை அப்ரோடைடின் கண்ணீரும், அவள் காதலன் அடோனிஸின் ரத்தமும் வீழ்ந்த மண்ணில் முளைத்ததுதான் சிவப்பு ரோஜா. அதனால் அது மகத்துவபூர்ணமானது. 


திங்கள், 5 ஏப்ரல், 2021

லால் பாகில் சில காட்சிகள்.

லால் பாகில் சில காட்சிகள்.

பெங்களூரில் பி டி எம் லே அவுட்டில் இருந்தபோது இருமுறை லால்பாக் சென்று வந்திருக்கிறேன். கண்கவர் காட்சிகளைக் கண்டு களித்திருக்கிறேன். நகரின் நடுவே அமைதிருக்கும்  லால் பாகில் ஏரி, குட்டி மலை, தாமரைக் குளம், ரோஜாத்தோட்டம், ஃப்ளோரல் க்ளாக் எனப் பல்வேறு டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் உண்டு. அதிலும் அந்த ஏரியில் வாத்துக்கள் நீந்துவது கொள்ளை அழகு.



என்றும் வாடாத ஆர்கிட்.

என்றும் வாடாத ஆர்கிட்.

சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் எத்தனையோ வித் ஆர்க்கிட்டுகள் பார்த்தோம். இங்கே பெங்களூரிலும் கூட. சுமார் 21, 000 இல் இருந்து 26, 000 க்கும் மேற்பட்ட ரகங்களில் ஆர்க்கிட் பூக்கள் இருக்கின்றனவாம். 

ஆமா என்றுமே வாடாத என்ன.. அதெல்லாம் இல்லை. சும்மா தலைப்புக்காகக் கொடுத்தது அது. இதுவும் வாடும். மற்ற பூக்கள் இரண்டு, நான்கு நாட்களில் வாடினால் இது ஒரு வாரத்துக்கு மேல் தாக்குப் பிடிக்கும். அவ்வளவுதான்.

இந்த வெளிர்நீல ஆர்க்கிட்டுகள் என்னவோ மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. திருமணம் மற்றும் உயர்ரக விருந்து விசேடங்களில் ஆர்க்கிட் மலரைத்தான் பரிசளிக்கிறார்கள். வெகு நாளாலும் வாடாதது ஆர்கிட் பூ என்பது விசேஷம்.  வாசமும் கூட மென்மையாக சுகந்தமாக இருக்கும் என்பது இதன் ஸ்பெஷாலிட்டி. 



வெண்ணிற ஆர்கிட்டுகள்.

டேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 3.

டேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 3.

பதினையாயிரம் வெரைட்டி உள்ள டேலியாவில் பெங்களூரு லால் பாகிலேயே நான் நாற்பது ஐம்பது வெரைட்டி பார்த்துவிட்டேன். மலர்க் கண்காட்சியில் எந்தப் பூவை பார்ப்பது எந்தப் பூவை விடுவது என்பதே தெரியவில்லை. குட்டியாக இருக்கும் இதெல்லாமும் டேலியாதான் என்பதை கூகுள் செய்து தெரிந்து கொண்டேன். ! 

அகிடா, சிம்பொனியா, எல் நினோ, பூஹ் , இரவுப் பட்டாம் பூச்சி, சந்தோஷமான தோழர்களே, ஹேப்பி கிஸ் ஆகியனவும் பூக்கள் வகைகளே. ! 




காண்டஸா.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

டேலியா டேலியா சொக்கவைக்கும் டேலியா - 2.

டேலியா டேலியா சொக்கவைக்கும் டேலியா - 2.

கிட்டத்தட்ட 15,000 வகைகள் உள்ளனவாம் இந்த டேலியாவில். பிறந்தநாள் பூங்கொத்துக்களில் அதிகம் பயன்படுகின்றன.  வரவேற்பறையை அலங்கரிப்பதிலும் இவற்றுக்குப் பெரும் பங்குண்டு. அடுத்தமுறை பூக்களை நன்று உற்றுப் பாருங்கள். இவை அநேகம் இடம் பெற்றிருக்கும். எளிதில் வாடாதவை. நீண்ட தண்டுகள் இதன் ஸ்பெஷல். எனவே பூங்கொத்துத் தயாரிப்பில் பெரும் இடம் பிடித்துள்ளன. அதேபோல் அலுவலக மலர் அலங்காரத்திலும் இவை அதிகம் பயன்படுகின்றன.

அகிடா.
அகிடாவேதான்.

டேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 1

டேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 1

டேலியா ஒரு குளிர்பிரதேசப் பூ. தோற்றப் பொலிவுடையது. ஒவ்வொரு பூவும் பிரம்மாண்டமாய் இருக்கும். தோராயமாக 8 முதல் 10 செமீக்கு மேல் இருக்கும். இதில் 15,000 க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றனவாம்.

இது அலங்காரத்துக்காகப் பயன்படுகிறது. லால்பாகில் மலர்க் கண்காட்சிக்குச் சென்றபோது  30 க்கும் மேற்பட்ட டேலியா வகைகளைப் படம் பிடித்தேன். அவை உங்கள் பார்வைக்கு. ஒவ்வொரு நிறப் பூவுக்கும் தனித்தனியாகப் பெயர் இருக்கிறது. முடிந்தவரை கொடுக்க முயல்கிறேன்.

சாண்டா க்ளாஸ்.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...