எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
DINING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DINING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஜனவரி, 2021

மை ப்ளேஸ்.

 மை ப்ளேஸ்.

கோவையில் இருக்கும் மை ப்ளேஸ் ரெஸ்டாரெண்ட்க்கு ஒரு முறை இரவு டின்னருக்குச் சென்றிருந்தோம். ஃப்ளிண்ட் ஸ்டோன்ஸ் கார்ட்டூனில் வருவது போல ஒரே கற்களாலான கட்டிடம்.

இண்டீரியரிலும் கூட அந்தக் கால லாந்தர் விளக்குப் போலப் போட்டிருந்தார்கள். ஒரு குழந்தையின் பிறந்த நாள் என்பதால் குட்டீஸ் கூட்டமும் ஜாஸ்தி.

நாம் சாப்பிட அமரும் டேபிள்  கூட கல்லால் செய்து பதிக்கப்பட்டிருந்தது. பெஞ்சுகள் எல்லாம் மர பெஞ்சுகள். சமைத்துப் பரிமாறப்பட்டிருந்தவை காப்பர் பாட்டம் வெசெல்ஸ்.

முதலில் வெல்கம் ட்ரிங்.

அதன் பின் ஸ்டார்ட்டர், மிளகு அப்பளம். காலிஃப்ளவர் ட்ரை மஞ்சூரியன்,

சிக்கன் லாலிபாப்,



கடாய்  வெஜிடபிள் க்ரேவி,

பனீர் பட்டர் மசாலா,

பட்டன் நான்,

சிக்கன் பிரியாணி.,

வெஜ் ஃப்ரைட் ரைஸ்.

அதன் பின் தோசை சாம்பார், சட்னி

கடைசியா வனிலா காரமல் ஸ்பாஞ் கேக். குட்டீஸுடன் குட்டீஸாக அன்று பொருட்காட்சியும் பார்த்துவிட்டுவந்து சாப்பிட்டு கலோரியை ஏற்றியாச்சு.

கோவையில் பாப்பநாயக்கன் பாளையத்தில் இருக்கிறது மை ப்ளேஸ். இதுக்கு நீங்களும் ஒரு முறை உங்க குட்டீஸோட விசிட் அடிச்சுட்டு வாங்க.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...