எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 ஏப்ரல், 2026

அ.இலட்சுமணசாமி முதலியார் கவிதைப் போட்டி.

அ.இலட்சுமணசாமி முதலியார் கவிதைப் போட்டி.

முகநூலில் மோகனாம்மா இந்தப் போட்டி பற்றிப் பகிர்ந்திருந்தார்கள்.

31. 7. 2013 கடைசித் தேதி.

திங்கள், 27 ஏப்ரல், 2026

கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி.

கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி.

 முகநூலில் இந்தப் போட்டி பற்றிய பகிர்வைக் கண்டேன். முன்பு பண்புடன் போட்டிகளைப் பகிர்ந்திருந்தேன். அதில் என் அன்புத் தோழி ஜெயந்தி ரமணி கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றிருந்தார். ஈமெயில் மூலமாக நன்றியறிதலையும் அனுப்பி இருந்தார். மிக அருமையான சமூக சிந்தனையுள்ள இன்றைய சூழலுக்குத் தேவையான விழிப்புணர்வுக் கதையை எழுதிய அவருக்கும் சிறப்பானதைத் தேர்ந்து பரிசளித்த பண்புடன் குழுமத்துக்கும் நன்றி.  ( என்னுடைய அன்பின் ஹுசைனம்மாவும் பரிசு பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி ).

இந்தப் போட்டிகளிலும் பங்குபெற்று என் சக வலைப்பதிவர்களும் தோழியரும் வெல்ல வாழ்த்துக்கள். பின் வரும் குறிப்புக்களை சரிவரப் படியுங்கள். ஜனவரி 31 ஆம் தேதி கடைசித் தேதி. அதற்குமுன் அனுப்புங்கள். வாழ்த்துக்கள் ..

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

நீங்க திரைப்படத் தயாரிப்பாளர் ஆகணுமா..

நீங்க திரைப்படத் தயாரிப்பாளர் ஆகணுமா..

நீங்க சினிமா தயாரிப்பாளர் ஆகணுமா. அதிகமில்ல ஒரு லட்சம் ( மினிமம் )  போதுமாம்.. டிஸ்கவரி புத்தக நிலையத்தின் வேடியப்பன் சொல்றாரு.டிஸ்கவரி சினிமாஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கும் வேடியப்பன் சொல்றது என்னன்னா

/// சினிமா என்பது சமூக அக்கறையுடன் கூடிய ஒரு வணிகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால் ஒரு லட்சம் முதலீடு செய்து தயாரிப்பாளர் ஆகுங்கள்..

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

காரைக்குடி புத்தகத் திருவிழாவும் ( 2013) தினமணி சிறுகதைப் போட்டியும். :-

காரைக்குடி புத்தகத் திருவிழாவும் ( 2013) தினமணி சிறுகதைப் போட்டியும். :-

காரைக்குடியில் பதினொன்றாவது புத்தகத் திருவிழா கம்பன் மணி மண்டபத்தில் ஃபிப்ரவரி 15 வெள்ளிக் கிழமையில் இருந்து ஃபிப்ரவரி 24 ஞாயிற்றுக் கிழமை வரை நடக்கிறது.

 இதில் வருடந்தோறும் 40,000 - 50,000 பேர் கலந்து கொண்டு புத்தகம் வாங்குகிறார்கள். கிட்டத்தட்ட 60,000 /- ரூபாய்க்கான புத்தகங்கள் இலக்கியப் போட்டிகள்  நடத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.
( பல்வேறு தலைப்புக்களில் கதை, கவிதை, கட்டுரை போன்றவை பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்காக  நடத்தப்படுகிறது.) தினமும் மாலையில் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணாக்கரின் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

திங்கள், 20 ஏப்ரல், 2026

கடிதப் போட்டியும் பரிசும்

கடிதப் போட்டியும் பரிசும்.

முகநூல் நண்பர் தாய் சுரேஷின் நிலைத்தகவலைப் பகிர்ந்துள்ளேன். 

///கடிதப்போட்டி
அன்பு முக நூல் நட்புக்களே,
எத்தனையோ சொல்ல முடியாத
ஏக்கம்,அழுகை,ஆதங்கம்,
பிரிவு,நட்பு,வன்மம்,அன்பு,காதல்,இப்படி எல்லாவற்றையும்
நாம் என்னதான் நம் நட்புக்களிடம்
பகிர்ந்தாலும் ஒரு கடிதமாய்
எழுதி அதை காற்றிலோ,அல்லது முகவரி இல்லா கடிதமாகவோ வைத்துக்கொள்வோம்..அப்படி வைக்கப்பட்ட
கடிதம் நிச்சயம் நம்
நினைவுகளை என்றோ ஒரு தினம் மீள்
வாசிப்பு செய்யத்தூண்டும்...

சனி, 18 ஏப்ரல், 2026

ப.சிங்காரம் நாவல்போட்டி

ப.சிங்காரம் நாவல்போட்டி

ஜி மெயிலில் வந்திருந்த போட்டி பற்றிய விபரத்தை இங்கே பகிர்ந்துள்ளேன்.. நல்ல நாவலா எழுதி பரிசு வாங்குங்க மக்காஸ். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)

 ///ப.சிங்காரம் நாவல்போட்டி

புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நற்றிணைப்பதிப்பகம் ஒரு நாவல்போட்டியைஅறிவித்திருக்கிறது. ப.சிங்காரத்தின் பெயரால் அமையும் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்.
முதல்பரிசு ரூ 50000
இரண்டாம் பரிசு ரூ 30000
மூன்றாம் பரிசு ரூ 20000
பிரதிகள் வந்துசேரவேண்டிய கடைசிநாள். செப்டெம்பர் 15.
அக்டோபர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும்
டிசம்பர் 30 அன்று பரிசுவழங்கும் விழாவும் நூல் வெளியீடும் நிகழும்.
நிபந்தனைகள்
1. பக்கவரையறை இல்லை.
2. முதல்பதிப்புக்கான உரிமை நற்றிணைப்பதிப்பகத்துக்குச் சொந்தம். 1000 பிரதிகள்
3. மின்னஞ்சலில் அனுப்பக்கூடாது
4.பிரதி திருப்பியனுப்பபட மாட்டாது. ஆகவே நகல்களை அனுப்பவும்
5 தட்டச்சு அல்லது மின்னச்சு செய்யப்பட்ட வடிவில் அனுப்பவும்
6. பிரசுரமாகாத நாவலாக இருக்கவேண்டும்
7 தேர்வுக்குழு முடிவே இறுதியானது
முகவரி
நற்றிணைபதிப்பகம்
பழைய எண் 123 A
புதிய எண்
243 A
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை திருவல்லிக்கேணி
சென்னை///

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

கலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)

கலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)

கலைமகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழாவை ஒட்டி சிறுகதைப் போட்டியை அவரது குடும்பத்தினர் நடத்த உள்ளனர். பரிசு பெற்ற சிறுகதைகள் ஜூன் ஜூலை 2012 ஆம் இதழ்களில் பிரசுரிக்கப்படுமாம். முதல் பரிசு ரூ. 50,000/-. இரண்டாம் பரிசு ரூ.25,000/-. பிரபலமானவர்கள், புதியவர்கள் கலந்து கொள்ளலாமாம். 6 பக்கங்கள் ., ஒரு பக்கம் மட்டுமே வரும்படி எழுதி அனுப்ப வேண்டுமாம். டைப் பண்ணி அனுப்பினால் நலம். ஆனா ஈ மெயில் ஐடி கொடுக்கலை. போஸ்டல் மூலமாதான் அனுப்பனும். கடைசி தேதி 31, ஜனவரி 2012..

வியாழன், 9 ஏப்ரல், 2026

பாரதி பணிச்செல்வர் விருதுக்கு வாழ்த்துகள்.

பாரதி பணிச்செல்வர் விருதுக்கு வாழ்த்துகள்.


லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜா ராகவன் மேடம், பத்ரிக்கைத் துறையில் சிலகாலம் என்னைப் பணியாற்ற அழைத்த பேரன்புக்கு உரியவர். அவரால்தான் நான் சாதனை அரசிகள் புத்தகம் கொண்டுவர முடிந்தது. அவரும் ஒரு சாதனை அரசிதான். அவரைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.

வியாழன், 2 ஏப்ரல், 2026

58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும்.

 58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும்.

நண்பர் ஜீவாவின் ஓவியங்கள் அற்புதமானவை.. அவர் எழுதிய ஒரே புத்தகம் சினிமா பற்றியது. அது குறித்தான விமர்சனத்தை நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்..


திரிசக்தி வெளியிட்ட புத்தகங்களில் திரைச்சீலை என்ற இந்தப் புத்தகம் போன வருடம் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா., இந்திய சினிமா., உலக சினிமா குறித்தான பரந்துபட்ட அனுபவங்களோடு எழுதப்பட்டது. படிக்கும்போதே பிரமிப்பை அளித்த நூல் இது.

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும்.

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும். அசடன் நூல் மொழிபெயர்ப்புக்காக எங்கள் தமிழன்னை எம். ஏ. சுசீலாம்மா அவர்களுக்கு கனடா  இலக்கிய...