ஹாலிடே நியூஸ் பத்ரிக்கையில் - குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி.
குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
தக்காணப் பீடபூமி என்று சரித்திரப் பாடத்தில் படித்திருக்கிறோம். கர்நாடகத்தின் இராஷ்ட்ர கூடர்களும் சாளுக்கியர்களும் யாதவர்களும், ஹொய்சாளர்களும் ஆண்டுவந்த பகுதியில் வடக்கு பாகம் குல்பர்கா பகுதி சுல்தானிகளின் ஆதிக்கத்தில் இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் அவர்களிடமிருந்து ஆசன் கங்கு என்பவர் தலைமையில் போரிட்டுப் பெற்ற பகுதியை ஆசெனாபாத் ( குல்பர்கா ) என்ற தலை நகராகக் கொண்டு பஹாமனியர்கள் பாமினி அரசை நிறுவினார்கள். வாராங்கல் ராஜா குல்சந்தால் கட்டப்பட்ட இக்கோட்டையை பஹாமனியர்கள் இன்னும் உறுதியுள்ளதாக ஆக்கினார்கள்.