ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள்.
சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியான அகாமடேஷன் மற்றும் உணவுகள். அவை பற்றிப் பார்க்கலாம்.
முகப்புத் தோற்றம்.
ரூம் முழுக்க வுட் வொர்க்ஸ். ஏசி ரூம் என்பதால் நன்றாக இருந்தது.
ஒரு வாரம் தங்கினோம். தினமும் காலைக் காஃபி ரூமில்தான். நாமே தயாரித்துச் சாப்பிடலாம் வாங்க. வாட்டர் ஜக். இண்டஸ்ட் காஃபிதூள், பால் பவுடர், சீனி. சீனி மட்டும் ரெண்டு பவுச் போட்டுச் சாப்பிட்டால் ஆஹா ஓஹோதான். ஆனால் ஏசி என்பதால் சீக்கிரம் ஜில்லுன்னு ஆயிடும். எனவே ஜீனி, பால் பவுடர், காஃபி தூள் போட்டு வெந்நீர் ஊற்றி ஸ்பாச்சுலாவால் கலக்கியதுமே குடிச்சிடணும்.
இரட்டைப் படுக்கைகள் கச்சிதம்.
லாபியிலிருந்து மாடிப்படியை நோக்கி அமர்ந்தபோது :)
ஏசி, டிவி, பொருள் வைக்கும் ஸ்டாண்ட்.
காஃபி தயார் . குடிச்சிடுங்க சட்டுன்னு..
இந்தத் திரையை இரட்டை வரிசை. இதைத் திறந்தால் இன்னொன்று வெண்ணிறத்தில் அது வெளிச்சத்தைத் தரும். இதை மூடினால் இருட்டிய எஃபக்டில் மதியமும் உறங்கலாம். அதன் பக்கமாக ஒரு சோஃபா.
படுக்கைக்குப் பக்கவாட்டில் ஒரு சோஃபா. அதில் அமர்ந்து எழுதலாம். படிக்கலாம். முன்னே இருக்கும் டீப்பாயில் உணவு அருந்தலாம்.
படிக்கும்டேபிள் சேருடன் ஒன்று டேபிள் லேம்புடன். மிக விமரிசையான ரூம் இது.
டிவிக்குப் பக்கவாட்டில் இருக்கும் மர ஷெல்புகளில் ஒரு குடும்பத்துக்கான சாமான்களே வைக்கலாம். ஹேங்கர்ஸ் மாட்டும் ராக்குகளும் உண்டு. பக்கவாட்டில் பாத்ரூம் வித் டாய்லெட். வெளியே வந்து கண்ணாடி பார்த்து அலங்கரித்துக் கொள்ளலாம்.
டேபிள் லாம்ப்.
பாத்ரூமில் வாஷ்பேஸின். வெளிநாடு போல் டோர் உள்ள தனியறை பாத்ரூம்.
தினப்படி ப்ரஷ் பேஸ்ட், சோப்பு, ஷாம்பு, ஷேவிங் ஐட்டங்கள்.
செட்டில் ஆயாச்சு.
எனக்கு எப்போதும் பிடித்த காரிடார்.
இரு புறங்களிலும்.
மிக அருமையான ஸ்டே. ஒரு வாரமும் காலையில் ஃப்ரீ ப்ரேக்ஃபாஸ்ட். தோசை & முட்டை ஆம்லெட் கேட்டால் சுடச் சுடக் கிடைக்கும். இது போக தினம் இட்லி, வடை, ஸ்டஃப்ட் ரொட்டி, ஸ்வீட் ஒன்று, அவித்த முட்டை, கார்ன் ஃப்ளேக்ஸ், பால், ஓட்ஸ், ப்ரெட், பட்டர், ஜாம், சட்னி வகைகள், சாம்பார், டெஸர்ட்ஸ், அவித்த பயறு வகைகள், நறுக்கிய பழங்கள், பழச்சாறு, காஃபி, டீ இன்னும் பலப்பல..
டிஸ்கி:- காரை அங்கேயே பார்க் செய்திருந்தோம். உள்ளூருக்கு ஓலாதான். சென்னையில் ரொம்ப ட்ராஃபிக். ஒரு வாரமும் நன்றாக என்ஜாய் செய்தோம். ஒருநாளைக்கு ஸ்டே இரண்டாயிரத்துச் சொச்சம் இரண்டு பேருக்கு.
ஃபோர்டெல்லுக்கு என் ரேட்டிங் நாலரை ஸ்டார். *****
ஸ்ரீராம்.18 மே, 2023 அன்று 5:37 AM
பதிலளிநீக்குநல்ல அறிமுகம். வீட்டிலிருந்து கிளம்பிச் சென்று இரண்டு நாட்கள் இங்கு தங்கி வரலாமா என்று தோன்றுகிறது!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan29 மே, 2023 அன்று 11:30 PM
அஹா ! போய் வரலாம் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!