எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

தஞ்சைப் பெருவுடையார் கோவில். மை க்ளிக்ஸ். TANJORE BIG TEMPLE. MY CLICKS.

தஞ்சைப் பெருவுடையார் கோவில். மை க்ளிக்ஸ். TANJORE BIG TEMPLE. MY CLICKS.

 தஞ்சைப் பெரிய கோவில் பற்றியும் மன்னன் ராஜராஜசோழனின் பராக்கிரமம்  பற்றியும் முன்பே எழுதி இருக்கிறேன். நவராத்திரி சமயம். இது இப்போது கும்பாபிஷேகம் நடந்ததும் சென்று எடுத்தபுகைப்படங்கள். கோயில் பளிச்சென்று புத்துணர்ச்சியோடு இருக்கிறது. 

சிவகங்கைப் பூங்கா, அரண்மனை எல்லாம் இதன் பக்கம்தான். இந்தக் கோயில் ஒரு கோட்டைக்குள் அமைந்திருப்பது போல அரண் சூழ அமைந்துள்ளது. சுற்றிலும் அகழி மற்றும் ட்ரபீசிய வடிவ காவலர்தூண் கொண்ட மதில்கள். 

பழ உணவுகள், மை க்ளிக்ஸ் -7, FRUIT RECIPES, MY CLICKS -7.

பழ உணவுகள், மை க்ளிக்ஸ் -7, FRUIT RECIPES, MY CLICKS -7.

 பழ உணவுகள், மை க்ளிக்ஸ் -6, FRUIT RECIPES, MY CLICKS -6.

மங்கையர்மலரில் வெளியான பழ உணவுகளின் புகைப்படங்கள். இவற்றின் பின்னேயே இவற்றிற்கான செய்முறைக் குறிப்புகளும் உள்ளன. செய்து சாப்பிட்டுப் பாருங்கள். 



க்ரீன் ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ்

https://thenoos.blogspot.com/2017/06/34-green-apple-fritters.html

பழ உணவுகள், மை க்ளிக்ஸ் -6, FRUIT RECIPES, MY CLICKS -6.

பழ உணவுகள், மை க்ளிக்ஸ் -6, FRUIT RECIPES, MY CLICKS -6.

 பழ உணவுகள், மை க்ளிக்ஸ் -6, FRUIT RECIPES, MY CLICKS -6.

மங்கையர் மலரில் வெளியான 30 உணவுகள் ( ப்ளஸ் 3 ) பற்றிய படங்களைப் பகிர்ந்துள்ளேன். அவற்றின் உணவுக்குறிப்புகள் பின்னேயே உள்ளன. செய்து ருசித்து ஆரோக்யமாயிருங்கள் :) 

செர்ரிப்பழ ஜாம். ( பழப்பச்சடி )

https://thenoos.blogspot.com/2017/06/27-cherry-jam.html

பழ உணவுகள், மை க்ளிக்ஸ் - 5, FRUIT RECIPES, MY CLICKS - 5.

பழ உணவுகள், மை க்ளிக்ஸ் - 5, FRUIT RECIPES, MY CLICKS - 5.

 பழ உணவுகள், மை க்ளிக்ஸ் - 5, FRUIT RECIPES, MY CLICKS - 5.

மங்கையர் மலரில் வெளியான என்னுடைய பழ உணவுகளை இங்கே பதிவேற்றி உள்ளேன். ஹெல்தி டயட்டான இவற்றைச் செய்து ருசிக்க அவற்றின் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும். 


பழ உணவுகள், மை க்ளிக்ஸ் - 4, FRUIT RECIPES, MY CLICKS - 4.

பழ உணவுகள், மை க்ளிக்ஸ் - 4, FRUIT RECIPES, MY CLICKS - 4.

 பழ உணவுகள், மை க்ளிக்ஸ் - 4, FRUIT RECIPES, MY CLICKS - 4.

மங்கையர் மலர் இணைப்பில் வெளியான பழ உணவுகளின் புகைப்படங்கள் இங்கே. இவற்றை செய்து ருசிக்க அவற்றின் பின்னேயே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள். 


திங்கள், 26 ஏப்ரல், 2021

பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 2. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.

பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 2. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.

பசுமைப் பாதைகள். இருந்தும் இந்தச் சாலையில்தான் மிகுந்த விபத்துகள் நிகழ்கின்றன. ஓரிரு இடங்களில் மெதுவாகச் செல்லவும் என ஆடியோவே ஒலிக்கிறது. இருந்தும் வேகமாகச் சென்று ஆக்ஸிடெண்ட் ஆக்குகிறார்கள் மக்கள். 

பெங்களூரு ஹைவேஸில் எடுத்த புகைப்படங்களின் மீதிப்பகுதியை இங்கே பகிர்கிறேன்.


பழ உணவுகள், மை க்ளிக்ஸ் - 3, FRUIT RECIPES, MY CLICKS - 3.

பழ உணவுகள், மை க்ளிக்ஸ் - 3, FRUIT RECIPES, MY CLICKS - 3.

 மங்கையர் மலரில் வெளியான ஹெல்தியான இந்தப் பழ உணவுகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவற்றின் கீழேயே இருக்கும் இணைப்பைச் சொடுக்கினால் இவற்றிற்கான செய்முறை கிடைக்கும்.:) 


ஈவ்ஸ் சாலட். 

https://thenoos.blogspot.com/2017/05/11-eves-salad.html

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 1. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.

பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 1. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.

 கரூரில் இருந்து பெங்களூருக்கு இருமுறை காரில் சென்று வந்தோம். வழு வழுவென்று சர்க்காரு ரோடு.  பக்கவாட்டில் விதம் விதமான மலைகள். ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்குகள் போல க்ரீன் ஃபாரஸ்ட் மவுண்டன்கள். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக ரசித்துப்  பார்த்த காட்சிகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன். இந்தப் பாதை மிக அழகாக இருக்கும் என்பது தெரியாததால் முன்பே க்ளிக் செய்யாமல் விட்டுவிட்டேன். திடீரென செல்லை ஓபன் செய்து எடுத்தால் அழகான வளைவுகள் உள்ள அந்த இடங்கள் எல்லாம் கடந்ததும் ஏதோ க்ளிக் ஆகி இருக்கின்றன !. 

சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஹோசூர், பெங்களூர் இதுதான் ரூட். அது கொரோனா காலம் என்பதால் ஈ பாஸ் வாங்கி ஒட்டி இருந்தோம். எனவே அது காரின் முன் கண்ணாடியை மறைக்கிறது :) கிடைத்தவற்றைச் சுட்டிருக்கிறேன். 

மாஸ்க், சானிடைஸர் சகிதம் கார்க் கண்ணாடியையும் இறக்காமல் சென்றதால் புகைப்படங்கள் மங்கலாகத்தான் தெரிகின்றன. 


பழ உணவுகள், மை க்ளிக்ஸ் -2, FRUIT RECIPES, MY CLICKS -2.

 பழ உணவுகள், மை க்ளிக்ஸ் -2, FRUIT RECIPES, MY CLICKS -2.

 மங்கையர் மலர் இணைப்பில் 30வகையான பழ உணவுகள் வெளியானது. அந்தப் பழ உணவுகளுக்காக சமைத்து எடுத்த பல புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். ஒவ்வொரு உணவுக்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கினால் அந்த உணவு ரெஸிப்பியைப் படிக்கலாம். 

பப்பாளி வத்தக் குழம்பு

https://thenoos.blogspot.com/2017/05/18-papaya-gravy.html

வியாழன், 22 ஏப்ரல், 2021

பழ உணவுகள். மை க்ளிக்ஸ், FRUIT RECIPES, MY CLICKS.

பழ உணவுகள். மை க்ளிக்ஸ், FRUIT RECIPES, MY CLICKS.

பழ உணவுகள். மை க்ளிக்ஸ், FRUIT RECIPES, MY CLICKS.  

இவை மங்கையர் மலர் இணைப்பில் வெளியான ரெஸிப்பீஸ். என் தேனூஸ் ரெஸிப்பீஸ் வலைத்தளத்திலும் வெளியானவை. எனவே புகைப்படங்கள் இங்கே கொடுத்திருக்கிறேன். 

இணைப்பைச் சொடுக்கினால் ரெஸிப்பீஸைப் படிக்கலாம்.

காச்சேகுடா ரயில்வே ஸ்டேஷன். மை க்ளிக்ஸ். KACHEGUDA RAILWAY STATION. MY CLICKS.

 காச்சேகுடா ரயில்வே ஸ்டேஷன். மை க்ளிக்ஸ். KACHEGUDA RAILWAY STATION. MY CLICKS.

105 வருஷம் ஆன ரயில்வே ஸ்டேஷன் ஒண்ணைப் பார்க்கலாம் வாங்க. எங்கேன்னு கேக்குறீங்களா.. எல்லாம் இந்தியாவிலேதான் அதுவும் ஹைதையிலேதான். 

1916 ஆம் வருஷம் நிஜாம் ஆஸஃப் ஜா 7  ஆட்சிக்காலத்தில் கட்டமைப்பட்டு நிஜாம் ஓஸ்மான் அலிகான் காலத்தில் செயல்பாட்டுக்கு வந்த ரயில்வே ஸ்டேஷன் இது. ஹைதையில் ஹைதராபாத், செகந்திராபாத் ஸ்டேஷன்களுக்கு ஈடாக காசிகுடா ரயில்வே ஸ்டேஷனும் மிகப் பெரிது. இதை இயக்குவது சதர்ன் செண்ட்ரல் ரயில்வே. 

இதன் கோபுர அமைப்புகள் எல்லாம் கோதிக் கட்டிடபாணியில் வித்யாசமா கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது . சென்னையிலிருந்தும் மதுரையிலிருந்தும் ஹைதையில் இந்த ஸ்டேஷனுக்குப் போய்த்தான் மகன் இருந்த மாதாப்பூர் கொண்டாப்பூருக்குப் போகணும். ஸைபர் டவர்ஸில் மகன் வேலை பார்த்து வந்தார். 

இந்த ஸ்டேஷனின் பெயர்க்காரணமும் வித்யாசம்தான். காச்சே என்ற விவசாயக் குடிமக்கள் ( ராமனின் வழித்தோன்றல்கள் - அனுமனையும் சிவனையும் சக்தியையும் வழிபடுபவர்கள் ) அதிகமாக வாழ்ந்து வந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றதாம்.


இங்கே மாலை 4.30 க்குப் புறப்புட்டா மறுநாள் காலை 6.30 மணிக்குச் சென்னையை அடையலாம். நடுவுல இராத்திரி 3. 30மணிக்கு திருப்பதி வரும். 

மித்தாய், வேஃபர்ஸ், கேக். மை க்ளிக்ஸ். CHOCOLATES, WAFERS, CAKE. MY CLICKS,

மித்தாய், வேஃபர்ஸ், கேக். மை க்ளிக்ஸ். CHOCOLATES, WAFERS, CAKE. MY CLICKS,

 மிட்டாய் , கேக், கூல்டிரிங்க்ஸ் , ஐஸ் விரும்பாதவர்கள் இருக்க முடியுமா. அதுவும் ஆரஞ்ச் ஐஸ்.. ஆமா ஆரஞ்ச் ஐஸேதான் அது என்னன்னு பார்க்கலாம் வாங்க. அதுபோக ஐஸ்க்ரீம் கேக்கும். 


முன்ன எல்லாம் ஃப்ளைட்டில் ஏறினவுடனே மிட்டாய் கொடுப்பாங்களாம். சரி போஸ்டுக்குப் போறதுக்கு முன்னாடி இனிப்பா இருக்க ஆளுக்கொண்ணு எடுத்துக்குங்க.

புதன், 21 ஏப்ரல், 2021

கட்டுமானங்கள். மை க்ளிக்ஸ். ARCHITEXTURE . MY CLICKS.

கட்டுமானங்கள். மை க்ளிக்ஸ். ARCHITEXTURE . MY CLICKS.

கட்டுமானங்கள். மை க்ளிக்ஸ். 

திருச்சி ரயில்வே ஸ்டேஷன். ! அண்டர்க்ரவுண்ட் டனல் ஒவ்வொரு ப்ளாட்ஃபார்முக்கும் செல்ல அமைக்கப்பட்டுள்ளது. 

ஊனையூர்க் ( முத்து வெள்ளைச் சாத்தையனார் ) கோவிலின் விதானம். முழுக்க முழுக்கக் கல்பாவியது. எப்படித்தான் இப்படி நீளக் கற்களை வெட்டி ஒட்டி விதானம் சமைத்தார்களோ !

ஸ்வீட்ஸ்,மை க்ளிக்ஸ். SWEETS, MY CLICKS.

ஸ்வீட்ஸ்,மை க்ளிக்ஸ். SWEETS, MY CLICKS.

 ஸ்வீட்ஸ்,சாக்கோ சிப்ஸ் போட்ட பிஸ்கட், கிஸ்மிஸ் போட்டுச் செய்யப்பட்ட ஸ்வீட் ரோல். இதெல்லாம் பிடிக்காதவர் யாருமுண்டா. 

இது பையன் ஜெர்மனியில் இருந்து கொண்டு வந்த ஒரு கிஸ்மிஸ் ரோல். குளிரிலும் சாப்பிட ஏற்றமாதிரி பேக் செய்யப்பட்டிருந்தது. ஃபுல் மீல்.


கராச்சி பேக்கரி சாக்கோ/கோக்கோ பிஸ்கட்ஸ். இதிலேயே ஃப்ரூட் & நட்ஸ் பிஸ்கட் இன்னும் டேஸ்டாக இருக்கும்.

துபாய் - சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். DUBAI .MY CLICKS.

துபாய் - சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். DUBAI .MY CLICKS.

துபாயில் பயணம் செய்யும்போது எதை எடுப்பது எதை விடுப்பது எனத் தெரியாது. பாலை தேசத்தை சுமார் 30  ஆண்டுகளுக்குள் சோலைவனமாக்கி இருக்கிறார்கள்.

இது குடியிருப்புப் பகுதி.

திங்கள், 19 ஏப்ரல், 2021

பயிர்பச்சை . மை க்ளிக்ஸ்.3. GREENS. MY CLICKS - 3.

பயிர்பச்சை . மை க்ளிக்ஸ்.3. GREENS. MY CLICKS - 3.

வீட்டுத்தோட்டங்களில் அபூர்வமாகக் காணப்படுகிறது இந்த விசிறி வாழை. ஆனால் பெட்ரோல் பங்க். ஹோட்டல்.நிறுவனங்கள் போன்றவற்றில் இதை அலங்காரத்துக்காக வளர்க்கிறாங்க. பயிர்ப்பச்சையைப் பார்ப்பது கணினியையே பார்த்துக்கிட்டு இருக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சி. எனவே கொஞ்சம் பயிர்ப்பச்சையைப் பார்த்துக் கண்ணைக் குளிர்விங்க :)


தர்மபுரியில் ஹோட்டல் அதியமானில் தங்கியிருந்தபோது பக்கத்து பில்டிங்கிலிருந்த இந்த விசிறிவாழையை என் காமிராவால் கவர்ந்து கொண்டேன். :) இரண்டு விசிறி வாழைகள். இது நடுவிலிருந்து இருபக்கங்களிலும் இலைகளை விசிறிபோல் விரிப்பதால் இதுக்கு விசிறி வாழைன்னு பேர் போல. )

பயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2.

பயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2.

பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழியாக உங்கள் பார்வைக்கு. :)

இது கானாடு காத்தான் மங்கள ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போனபோது அதைச் சுற்றி இருந்த பயிர்ப்பச்சையைப் பார்த்து மயங்கி எடுத்தது :)


இது கானாடு காத்தானிலிருந்து காரைக்குடி வரும் வயலில் பள்ளத்தூர்ப் பக்கம் ஏதோ ஒரு வயல்.

பயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 1. GREENS. MY CLICKS - 1.

பயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 1. GREENS. MY CLICKS - 1.

பயணப் பொழுதுகளிலும் சரி, உறவினர் வீட்டிற்குச் செல்லும்போதும் சரி. மிக அழகாய்த் தலையசைத்து வரவேற்கும் , புன்னகைக்கும் பூச்செடிகளையும் பயிர்பச்சைகளையும் படம் பிடிப்பது எனக்குப் பொழுது போக்கு.

இன்றைக்கு இந்தப் பயிர்பச்சைகளைப் பார்த்துக் கண்களைக் குளிர்வித்துக் கொள்வோம் வாங்க.

மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்ப்ரஸ்ஸில் செல்லும்போது எடுத்தது இந்தப் படம். அநேகமாய் தஞ்சாவூர் அல்லது கும்பகோணமாய் இருக்கலாம். தென்னைகள் வரிசை கட்டி நின்று தலையாட்டி வரவேற்றது இன்பமாய் இருந்தது.

ஔவையாரின் மூதுரை ஞாபகம் வந்தது.

///நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.///



வயல்வரப்புகளில் தென்னைகள் வைத்திருப்பது நல்ல கலையுணர்வு. இடம் மிச்சமும் கூட. ஆமா எத்தனை தென்னைகள் இருக்குன்னு எண்ணிச் சொல்லுங்க பார்க்கலாம். :)

அம்மாவீட்டின் பலாமரம்.கோரிக்கையற்றுக் கிடக்குதம்மா வேரில் பழுத்த பலா. :)

வொண்டர்பஸ்ஸிலிருந்து மை க்ளிக்ஸ் - 2.

வொண்டர்பஸ்ஸிலிருந்து மை க்ளிக்ஸ் - 2.






வொண்டர்பஸ்ஸிலிருந்து மை க்ளிக்ஸ் - 1.

 வொண்டர்பஸ்ஸிலிருந்து மை க்ளிக்ஸ் - 1..



விந்திய, சாத்புரா, நர்மதா. மை க்ளிக்ஸ். VINDHYA, SATPURA NARMADA . MY CLICKS.

விந்திய, சாத்புரா, நர்மதா. மை க்ளிக்ஸ். VINDHYA, SATPURA NARMADA . MY CLICKS.


உயரமான மலைகளைப் பார்த்திருப்பீங்க. நீளமான மலையைப் பார்க்கணுமா என்னோட இந்த இடுகையில் பயணம் செய்யுங்க. பார்க்கலாம்.  

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

காரைக்குடி டு குன்றக்குடி மை க்ளிக்ஸ். KARAIKUDI TO KUNDRAKKUDI.MY CLICKS.

காரைக்குடி டு குன்றக்குடி மை க்ளிக்ஸ். KARAIKUDI TO KUNDRAKKUDI.MY CLICKS.

காரைக்குடியிலிருந்து குன்றக்குடிக்குப் பாதரக்குடி வழியாகச் செல்லலாம். இன்னொரு வழி கழனிவாசல் வழியாக ஓ. சிறுவயலைக் கடந்து செல்லலாம்.

நடைப்பயணம் ஒன்று இந்தப் பாதை வழியாக மேற்கொண்டுள்ளோம் நானும் ரங்கமணியும் முன்பொருமுறை.


இது ஓ. சிறுவயலின் சிவன்கோவில்.

பொய்க்கால் மயிலும் பித்தளைச் சிம்மங்களும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

பொய்க்கால் மயிலும் பித்தளைச் சிம்மங்களும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெஸார்ட்டுக்கு உணவருந்தச் சென்றபோது அங்கே இருந்த கலைப்பொருட்கள் சேமிப்பு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதிலும் இந்த மிகப் பிரம்மாண்டமான சூரியனார் மிகுந்த மனங்கவர்ந்தவராகி விட்டார். 


இரும்பு வலைக்கவசமணிந்த வாளும் கேடயமும் ஏந்திய  ஊர்க்காவல் காவல் வீரன். சுடுமண் சிற்பம்.

உறைவாளும் ஆடுகுதிரையும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

உறைவாளும் ஆடுகுதிரையும். மை க்ளிக்ஸ். MY CLICKS.


சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெஸார்ட்டில் புராதன கலைப்பொருட்களைச் சேமித்து வைத்துள்ளார்கள். அங்கேதான் இவற்றைப் படம்பிடித்தேன்.

மேலே இருப்பது வெய்யில் கடிகாரமோ ?

வியாழன், 15 ஏப்ரல், 2021

குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

மயிலே மயிலே உன் தோகை எங்கே என்ற பாடலும், மயில்தோகையை நோட்டுப் புத்தகத்தில் குட்டிபோட வைத்து பதுக்கியதும் பால்ய நினைவுகள். குவாலியர் சூரியனார் கோவில் போயிருந்தபோது இந்த ஆண் மயிலைப் பார்த்தேன். ஆண்மயில்னு ஏன் சொல்றேன்னா இதன் தோகை நான்கடி நீளம் இருந்தது.

கானாடுகாத்தானிலிருந்து கடியாபட்டி செல்லும் வழியில் அடர்ந்த காடுகள் உண்டு. அங்கே குட்டி மயில் எல்லாம் அகவியபடி பறந்தும் ஓடியும் விளையாடுவதைப் பார்க்கலாம்.

சூரியகாந்திப் பூப் பூத்திருக்கத் தென்னையும் வாழையும் சூழந்த தோட்டத்தில் இந்த மயில் முதலில் ஒரு மரத்தின் கிளையில் செம்மாந்து அமர்ந்திருந்தது.

டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.

டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.




திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.

திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.

திருமயம் கோட்டைக்குச் சென்றதைப் பல இடுகைகளாகப் பகிர்ந்துள்ளேன். இதில் விட்டுப்போன புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.

வீரபாண்டிய கட்ட பொம்மன் மறைந்திருந்ததும், குடைவரை சிவன் கோவில் இருப்பதும் இங்கேதான். பள்ளி கொண்ட பெருமாள் & சிவன் கோவில்கள் உள்ளன. மலையோடு உருவான திருமயம் பள்ளிகொண்ட பெருமாள் பலருக்குக் குலதெய்வம், விசேஷம் என்றால் சத்யகிரீஸ்வரர் என்னும் சிவனும், கோட்டை காலபைரவரும் கூட  விசேஷம்தான்.

மலைமேலும் கீழும் இருக்கும் பீரங்கிகளையும் வீரபாண்டியர் மறைந்திருந்த சுரங்க மண்டபத்தையும் முன் இடுகைகளில் படம்பிடித்துப் போட்டிருக்கிறேன்.



கோட்டையின் மேல் நன்னீர் சேமிக்கும் இடம் இருக்கிறது. பாஸ்டியன்ஸ் எனப்படும் மதில் வெகு அழகு ..

புதன், 14 ஏப்ரல், 2021

சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

கும்பகோணம் சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெஸார்ட்டில் இருந்த சிற்பங்களைப் புகைப்படம் எடுத்து வகைப்படுத்தி  உள்ளேன்.

வாழைப்பழம் சுமந்து சீர் கொண்டு வரும் மனிதர் தொப்பையுடன் இருப்பதால் சித்திரக் குள்ளர் போன்ற தோற்றம் அளித்தார். !




ரெஸார்ட்டின் முகப்பில் சிம்மமும் யானையும் கலந்த யாளிகள் வரவேற்கிறார்கள். 

ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.

ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.

ஊனையூர் முத்துவெள்ளைச் சாத்தையனார் கோவில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன்.

கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பின் நான் எடுத்த சில புகைப்படங்கள்.

இவர்தான் பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார். சக்தி வாய்ந்த தெய்வம். எங்கள் ரட்சகர்.

சோணையன் கோவிலிலிருந்து - வெளிப்புறமிருந்து பண்ணி வீரப்பர் சந்நிதி கோபுரத்தை எடுத்தேன்.

வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.

வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.




செவ்வாய், 13 ஏப்ரல், 2021

சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

பிதார் கோட்டை பற்றியும் சோலாஹ் கம்ப் மசூதி , தாரகேஷ் மஹல், ககன் மஹல், தக்த் மஹல், ரங்கீன் மஹல், சுரங்கங்கள், வாயில்கள், கல் சிற்பங்கள், பீரங்கிகள் பத்தி எல்லாம் எழுதி இருக்கேன். பதினாறு தூண்கள் கொண்ட மசூதி என்பதால் சோலாஹ் கம்ப் மாஸ்க் என்றழைக்கப்படுது.

இப்போ அங்கே எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு. வெளியில் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி தரும் இந்த மசூதிதான் இன்னைக்கும் இந்தியாவில் மிகப் பெரிய மசூதி. நடுவில் ப்ரேயர் ஹால் எல்லாப் பக்கமும் பிரிவுகளா அமைந்து  சுற்றி இருக்கும் பரப்பளவு முழுவதும் நடுமையத்தில் குவியும்படி அமைக்கப்பட்டிருக்கு. வட்ட வட்டமான பகுதிகளும் நடுமையப்பகுதியும் மேற்குப் பக்கம்  இருக்கும் மிகப்பிரம்மாண்டமான ப்ரேயர் ஹாலை நோக்கிப் பார்க்கும்படி   இருக்கு.

மோட்டார் இல்லாத காலத்தில் சுழற்சி முறையில் கட்டிடத்தின் மேலேயே நீர் வரத்து இருந்ததும் ஔரங்கசீப் இங்கே குத்பா செய்ததும் அதிசயத் தகவல்கள்.

டெல்லி முகல் கார்டன் அமைப்பில்  14 ஆம் நூற்றாண்டு சுல்தான் அஹ்மத் ஷாவால் கட்டப்பட்டது இந்தக் கோட்டை. பஹாமனியர்களின் ஆட்சிக் காலத்தில் ரொம்பவே பவர்ஃபுல்லா இருந்திருக்கு..

சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

ராஜாவிலிருந்து ரிக்‌ஷா வரை, கூஜாவிலிருந்து வேம்பாவரை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் கும்பகோணத்தில் இருக்கும் சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெஸார்ட்டுக்குத்தான் போகவேண்டும்.


பொம்மலாட்ட பொம்மையா இல்லை உண்டியலா தெரில. ஆனா நாமம் போட்ட ராஜா. :)

தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.

தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.

ஊனையூரில் அமைந்துள்ளது இந்தத் தாமரைக்குளம்.

கோவிலின் பக்கவாட்டில் அமைந்துள்ள இக்குளம் மட்டுமல்ல கோவில் எதிரில் அமைந்துள்ள கண்மாயிலும் தாமரைக் கூட்டம்தான்.

வாங்க தாமரை பூத்த தடாகங்களை நெருக்கத்தில் பார்ப்போம்.

கொஞ்சம் சுத்தம். கொஞ்சம் கலங்கல் இதுதான் இந்தத் தடாகத்தின் நிலைமை.

திங்கள், 12 ஏப்ரல், 2021

ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.

ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.

சிந்துநதியின் மிசை நிலவினிலே .. 
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி மகிழ்வோம்..

என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் சேர நன்னாட்டிளம் பெண்கள் முண்டு அணிந்து சைடு கொண்டை போட்டுப் பூவைத்து சந்தனத் திலகமிட்ட முகத்துடன் புன்னகை சிந்துவார்கள் மனக்கண்ணில். 

ஆலப்பி எனப்படும் கிழக்கின் வெனிஸுக்குச் செல்லும்வரை அங்கே குருவாயூர் கோவில் போல் கேரள முண்டணிந்த எக்கச்சக்கப் பெண்கள் படகுகளை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள் என நினைத்ததுண்டு. இங்கோ அப்படி ஒரு பெண்குட்டியையும் காணில்லா. 

போட் ஹவுஸ் எனப்படும் படகு வீடுகள் லக்ஸுரி ஸ்டே' க்கானவை. அங்கே ஐந்து நட்சத்திர ஓட்டலின் வசதிகள் கூடக்கிடைக்கும். இரண்டு மூன்று நாட்கள் கூட இவற்றை வாடகைக்கு எடுத்துத் தங்குகிறார்கள். 

இங்கே அநேக பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் எனப்படும் பொதுமக்கள் போக்குவரத்தே காயல்களில் வள்ளங்களைக் கொண்டுதான் நடைபெறுகிறது. 

எங்கெங்கு நோக்கினும் நீர்க்காடு. அதில் நாமும் ஓர் கொக்காய், வெண் குருகாய், நாரைகளாய், காட்டு வாத்துக்களாய், குயிலாய், நீர்வாழ்ப் பறவைகளாய்த் தோற்றமளிப்போம். தண்ணீரில் அடிக்கும் கவிச்சி வாடையைச் சுவாசித்து நிமிரும்போது வாயிலேயே ஏதேனும் மீன் பிடித்துவிட்டோமோ எனக் கூட ஐயம் ஏற்படும் :) 





தூரத்துப் படகு வீடு. 

கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

கடவுளின் தேசத்தைப் பார்க்க வேண்டுமா ? கேரளா குமரகம் வாங்க என்ற விளம்பரங்களைப் பார்த்திருக்கலாம். ஒருமுறை கடவுளின் தேசத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. வேம்பநாடு ஏரியும் குமரகமும் பறவைகளும் ஈர்த்தன.

மூன்று நாள் விடுமுறை கிடைக்க கும்பகோணத்தில் இருந்து திருச்சி, மதுரை அங்கேயிருந்து திருவனந்தபுரம் சென்று அனந்தபத்மநாப சுவாமி கோவில்,ஆற்றுக்கால் பகவதி கோவில், கொச்சுவெளி பீச், கோவளம் பீச், பாலோடு, பொன்முடி எல்லாம் பார்த்துவிட்டு கொயிலோன் வந்தோம்.

கொயிலோனில் புத்தம்புதுக் காலை. ரயில்வே ஸ்டேஷனிலேயே இட்லி சாம்பார். (தேங்காய் அரைச்சுவிட்ட வாழைக்காய் குழம்பு :) ) சாப்பிட்டோம். ட்ரெயினிலேயே ஏழுமணிக்கு ப்ரெட் ஆம்லெட் சாப்பிட்டு இருந்தாலும் ஒன்பது மணிக்குப் பசித்தது.


கொயிலோன் ரயில்வே ஸ்டேஷன் நெருங்குகிறது. தகதகக்கும் சூரியன் எழுகிறது.

வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.

வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.

கேரளா, திருவனந்தபுரத்தின் கொச்சு வெளி பீச் மிக அழகானது. பீச்சை எட்டுமுன் ஒரு நன்னீர் ஏரி. அதில் மிதக்கும் உணவகம்.  அழகான பெண்மைச் சிற்பங்கள். 

வாங்க வெங்காயத்தாமரை மிதக்கும் ஏரிக்குப் போய் ஒரு ரைடிங்க் போயிட்டு பீச்சையும் பார்த்துட்டு வருவோம். 


கல்லூரி பள்ளிப்பிள்ளைகள் இங்கே சிற்றுலா வருகிறார்கள்.

பூந்தோட்டத்தில் ஒரு தாய் தன் மகவை ஏந்திய சிற்பம் நம்மை வரவேற்கிறது. அதன் பின் பெண்மையின் நளினம், மென்மை, ஆண் பெண் உறவுநிலைச் சிற்பங்களை எல்லாம் முன் இடுகைகளில் பகிர்ந்திருக்கிறேன். 

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

உதிரிப்பூக்கள்.

உதிரிப்பூக்கள்.

 உதிரிப்பூக்கள். லால் பாக் ஸ்பெஷல்.


மலர்க் கூட்டமும் காய்கறித் தோட்டமும்.

மலர்க் கூட்டமும் காய்கறித் தோட்டமும்.

லால்பாகில் எடுத்தபடங்கள் உங்கள் பார்வைக்கு. :) 


சிலுவை வடிவில் மலர் வளர்ப்பு :) 

அஸ்டில்ப் , டயாந்தஸஸ் & மாஸஸ் ப்ளூ.

அஸ்டில்ப் , டயாந்தஸஸ் & மாஸஸ் ப்ளூ.

இவைதான் அஸ்டில்ப்ஸ். இதுக்கு பேர் தேடி காடு மேடெல்லாம் அலைஞ்சேன். ஹாஹா. ஆனா இது வயலோரம் வளரும் செடியாம். மேலும் கம்மாக்கரை ( வெளிநாட்டில் ) யை ஒட்டி வளரும் புதர்ச் செடி வகை. இதை புஷஸ், ஷ்ரப்ஸ், நீடில் ஃப்ளவர் என்றெல்லாம் செர்ச் செய்து அதன் பின் ஃபோட்டோவை அப்லோடிக் கண்டுபிடித்தேன். :)



புசு புசுன்னு கொள்ளை அழகுல்ல.கண்கவர் வண்ணங்கள் வேறு.

அந்தூரியம் நாஸ்டுர்டியத்துடன் பான்ஸி.

அந்தூரியம் நாஸ்டுர்டியத்துடன் பான்ஸி.

அந்தூரியம் பூக்களை நான் வெண்மை நிறத்தில்தான் பார்த்துள்ளேன் அநேக இடங்களில் ஆனால் லால் பாகில் லால் அந்தூரியம் பார்த்தேன். கொள்ளை அழகு. 

வியாழன், 8 ஏப்ரல், 2021

பிருந்தாவன்.மை க்ளிக்ஸ். BRINDAVAN. MY CLICKS.

பிருந்தாவன்.மை க்ளிக்ஸ். BRINDAVAN. MY CLICKS.

பிருந்தாவனத்தில் பூவெடுத்து.. என்ற பாடலைக் கேட்டிருக்கலாம். இன்னும் தமிழ்சினிமாவின் 70 களில் பல்வேறு பாடல்கள் இங்கேதான் எடுக்கப்பட்டுள்ளன. டைரக்டர்களின் டிலைட்டான பிருந்தாவனைச் சுற்றிப் பார்ப்போம் வாங்க. 

கூடவே நடிக நடிகையரும் உங்க மனக்கண்ணில் தட்டுப் படலாம். அதேபோல் அவர்கள் பாடி ஆடிய பாட்டும். மறக்காம பின்னூட்டத்துல அதையெல்லாம் குறிப்பிடணும் சொல்லிட்டேன் :)

மைசூரில் வண்ணமயமான கோடை என்ற தலைப்பில் முன்பே இங்கே மாலையில் ஒலி/ஒளி பரப்பு செய்யப்படும் மியூசிக் ஃபவுண்டன் பற்றி எழுதி இருக்கிறேன். 


இது பிருந்தாவனின் வெளிப்புறம். கீழே பார்ப்பது உட்புறம். வாங்க எண்ட்ரன்ஸ் டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ளே போய் உலா வருவோம்.

இரட்டை நிறப் பெட்டூனியா..

இரட்டை நிறப் பெட்டூனியா..

ஒரே நிறத்தில்தான் பெட்டூனியாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் லால் பாகில் இரட்டை நிறப் பெட்டூனியாக்களையும் பார்த்தேன். கொள்ளை அழகு. ஏப்ரல் பூப் போல ஒரு காகிதப் பூத் தன்மை இவற்றின் இதழுக்கு.  அந்தப் பூக்களின் அழகை நீங்களும் கண்டு களியுங்கள்.



சிவப்புப் பெட்டூனியாவும் வெள்ளை ரோஸ் பெட்டூனியாவும் ஜோடியாய். 

விதம் விதமாய் சில டெய்ஸிக்களே..

விதம் விதமாய் சில டெய்ஸிக்களே..

டெய்ஸிக்களில் இத்தனை வகை இருப்பதை அன்றுதான் பார்த்தேன். எல்லா நிறத்திலும் இருக்கின்றன டெய்ஸிக்கள். மலர்ப் புன்னகையில் வீழுந்து எழுந்தேன். அந்த மென்னகையில் நீங்களும் கொஞ்சம் தோய்ந்து எழுங்களேன். 




காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...