எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 ஏப்ரல், 2021

காச்சேகுடா ரயில்வே ஸ்டேஷன். மை க்ளிக்ஸ். KACHEGUDA RAILWAY STATION. MY CLICKS.

 காச்சேகுடா ரயில்வே ஸ்டேஷன். மை க்ளிக்ஸ். KACHEGUDA RAILWAY STATION. MY CLICKS.

105 வருஷம் ஆன ரயில்வே ஸ்டேஷன் ஒண்ணைப் பார்க்கலாம் வாங்க. எங்கேன்னு கேக்குறீங்களா.. எல்லாம் இந்தியாவிலேதான் அதுவும் ஹைதையிலேதான். 

1916 ஆம் வருஷம் நிஜாம் ஆஸஃப் ஜா 7  ஆட்சிக்காலத்தில் கட்டமைப்பட்டு நிஜாம் ஓஸ்மான் அலிகான் காலத்தில் செயல்பாட்டுக்கு வந்த ரயில்வே ஸ்டேஷன் இது. ஹைதையில் ஹைதராபாத், செகந்திராபாத் ஸ்டேஷன்களுக்கு ஈடாக காசிகுடா ரயில்வே ஸ்டேஷனும் மிகப் பெரிது. இதை இயக்குவது சதர்ன் செண்ட்ரல் ரயில்வே. 

இதன் கோபுர அமைப்புகள் எல்லாம் கோதிக் கட்டிடபாணியில் வித்யாசமா கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது . சென்னையிலிருந்தும் மதுரையிலிருந்தும் ஹைதையில் இந்த ஸ்டேஷனுக்குப் போய்த்தான் மகன் இருந்த மாதாப்பூர் கொண்டாப்பூருக்குப் போகணும். ஸைபர் டவர்ஸில் மகன் வேலை பார்த்து வந்தார். 

இந்த ஸ்டேஷனின் பெயர்க்காரணமும் வித்யாசம்தான். காச்சே என்ற விவசாயக் குடிமக்கள் ( ராமனின் வழித்தோன்றல்கள் - அனுமனையும் சிவனையும் சக்தியையும் வழிபடுபவர்கள் ) அதிகமாக வாழ்ந்து வந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றதாம்.


இங்கே மாலை 4.30 க்குப் புறப்புட்டா மறுநாள் காலை 6.30 மணிக்குச் சென்னையை அடையலாம். நடுவுல இராத்திரி 3. 30மணிக்கு திருப்பதி வரும். 
ஃப்லுக்நாமாவிலிருந்து ஹைதை செல்லும் எலக்ட்ரிக் ட்ரெயின்களும் இங்கே வரும். 
தெற்கே மட்டுமில்ல மும்பை செல்வதற்கும் இந்த ஸ்டேஷனுக்குத்தான் வரணும். 

ஏதோ டூரிஸ ட்ரெயின். இதுல போகணும்னா ஒண்ணு வெளிநாட்டுக்காரங்களா இருக்கணும். இல்லாட்டி இந்தியாவிலேயே பெருஞ்சொத்துக் கொண்டவங்களா இருக்கணும். ஃபுல் ட்ரெயினும் ஏசி. தெற்கு மத்திய ரயில்வேயின் கர்நாடக கலாச்சார சுற்றுலா ட்ரெயின் . 

தலாய் லாமாக்களையும் நீங்க அங்கங்ககே பார்க்கலாம். இந்த மூன்று புகைப்படங்களும் பெங்களூரு ரயில்வே ஸ்டேஷனில் எடுத்தது :) இதோட கலந்துருச்சு. கிளம்புற ஸ்டேஷனும் இறங்க ஸ்டேஷனும் ஃபோட்டோ ஆல்பத்துல அடுத்தடுத்து இருந்தா இப்பிடித்தான் :)

இதோ பெங்களூரிலிருந்து காச்சேகுடா வந்தாச்சு. நாம நம்ம பையனுக்காக வெயிட் பண்ண ஒரு குட்டிப் பையன் நம்ம தலைவர்கிட்ட எட்டிப் பார்க்குறான் 

வெறிச்சோடி இருக்கும் காச்சேகுடா ஸ்டேஷன். 

சென்னை செல்லும் வழியில்.. 

திரும்பவும் காச்சேகுடா  ரயில்வே ஸ்டேஷன் டோம்ஸ் . 



புறாக்கள் சிறகடிக்கும் கோபுரங்கள் கொண்டது காச்சேகுடா ரயில்வேஸ்டேஷன் கோபுரங்கள். குறுக்கால கர்நாடகா போய் வந்தாலும் இந்தப் பயணம் நல்லா இருந்துச்சான்னு நீங்கதான் சொல்லணும் :)

1 கருத்து:

  1. Geetha Sambasivam2 நவம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 11:19
    ஆஹா! ஒரு காலத்தில் இந்த ரயில்நிலையம் வழியாகவே ராஜஸ்தான் போறதும் வரதுமாக இருந்தோம். ஆனால் சிகந்திராபாதில் இறங்கிப்போம். காச்சிகுடா விரைவு வண்டினு பெயரே தவிர ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நின்னு நின்னு வரும். நசிராபாத் (ராஜஸ்தானில்) இன்று காலை பத்து மணிக்கு ரயில் ஏறினால் மறு நாளைக்கு மறுநாள் மதியம் ஒரு மணி அளவில் சிகந்திராபாதை அடையும். அங்கேயே இறங்கி சென்னை செல்ல முன்பதிவு ஆயிருக்கானு நிச்சயம் செய்து கொண்டு (அப்போல்லாம் தந்தி கொடுக்கணும். சில சமயம் பதில் வரும். பல சமயங்கள் வராது.) அங்கே ஸ்டேஷனிலேயே குளிச்சுச் சாப்பிட்டு ரயில் வரும் நடைமேடை எதுனு தெரிஞ்சு போய்க் காத்திருப்போம். சில சமயம் முன்பதிவு ஆகலைன்னா, முன்பதிவு செய்யாத பொதுப்பெட்டி தான். போர்ட்டர் யாரையானும் பிடிச்சுச் சாமான்களோடு உள்ளே ஏத்திவிடச் சொல்லுவோம். பாத்ரூமா? அதெல்லாம் நினைக்கவே முடியாது. சில சமயம் கழிவறை பக்கத்திலேயே சாமான்களைப் போட்டுவிட்டு அங்கேயே உட்கார்ந்து பயணித்ததும் உண்டு.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்2 நவம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 12:05
    அருமையான படங்கள்...

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University2 நவம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 2:41
    புகைப்படப் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu3 நவம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 12:20
    புகைப்படங்கள் சில நினைவுகளை நினைவூட்டியது.

    படங்கள் விவரம் எல்லாம் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 டிசம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 2:00
    அருமையான நினைவலைகள் கீதா மேம் !

    நன்றி டிடி சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...